ரஜினியின் தனித்துவம்!

சினிமாவை நன்றாக உள்வாங்கியவர்களுக்கு தெரியும் அது ஒரு dynamic industry என்பது. அதாவது காலத்தினூடே தொடர்ச்சியான மாறுதலுக்கு உள்ளாகும் துறை அது.

வெள்ளிதோறும் புது பட ரிலிஸ் மூலம் மாற்றத்தை கொணர்வது வெள்ளித்திரை.

இந்த மாற்றம் அத்துறையில் (1/7)
பணியாற்றும் அனைவருக்குமே பொருந்தும், முக்கியமாக நாயகனுக்கு. திங்கள் அன்று பட்டொளி வீசிய நாயகன் வெள்ளி அன்று காணாமல் போகக்கூடும்.

இதில் ஒரு தலைமுறை தாக்கு பிடிப்பதே சவாலானது. தலைமுறை கடந்து அதுவும் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பது என்பது மிகச்சவாலானது & (2/7)
மகத்துவமானது. அந்த மகத்துவத்தை தன் தனித்துவம் மூலம் வசப்படுத்திய ரஜினி ஒரு அதிசயபிறவி.

இதன் காரணம் ரஜினியின் தகவமைத்தல் திறன். Survival of the fittest என்பது இதன் சாராம்சம். அது காலப்போக்கில் survival of the smartest என உருமாறியதையும் மிகச்சரியாக கணித்த ரஜினியின் (3/7)
சாமார்த்தியமே இன்றளவும் திரையுலக செங்கோலை அவர் ஏந்தி பிடிக்க காரணம்.

இதில் புகழ் வாய்ந்த நடிகர்கள் தவற விடுவது அந்த smartestஜ தான். அதாவது ரசிகர்கள் ரசினை மாற்றத்துக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்வது.

பலரும் தவறும் இதில் தான் ரஜினி தன்னிகரற்றவர். தன்னை பார்க்க (4/7)
வரும் மூன்றாவது தலைமுறையும் தன்னிடம் என்ன எதிர்பார்க்கிறது என்பது அவருக்கு தெரியும். அதை திகட்ட திகட்ட தருவதால் தான் ரசிகர்கள் தியேட்டர் தெறிக்க தெறிக்க அவரை கொண்டாடுகிறார்கள்.

ரஜினியின் காலத்தில் இதர திரை நாயகர்களின் பரிணாமம் இதுதான் 👇

ரஜினியோடு வந்தார்கள் (5/7)
இருந்தார்கள் சென்றார்கள், ரஜினிக்கு அடுத்து வந்து சென்று போனார்கள் etc...

இப்படி வந்து போகும் பல நாயகர்களுக்கு அளவுகோல் ரஜினி. இதுவே அவர் திரை வெற்றியை பற்றி கட்டியம் கூறும்.

இது ரஜினியின் தனித்துவத்துவத்திற்கு கிடைத்த பரிசு!

இங்கு ஒரு ரஜினி தான். அவர் இருக்கும் வரை (6/7)
அவரின் வீச்சு இருக்கும். அவர் ஓய்ந்தாலும் காலம் ஓயாமல் அவர் பெயரை கூக்குரலிடும்.

நீங்கள் மறந்தாலும் உங்கள் குழந்தைகள் அவர் பெயர் உச்சரிக்கும்.

இது அவர் செய்த திரை சாதனைகளால் என்பதை விட ரஜினி எனும் தனித்துவத்திற்கு கிடைத்த வெற்றி என்பதே உண்மை. (7/7)

#தலைவர் @rajinikanth
You can follow @parthispeaks.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.