🚨 #THREAD🚨

மலையாளமும் தமிழ் திரைப்படதுறையும்(Tamil & Malayalam Film Industry)

இந்தியாவில் சிறந்த திரைப்படங்கள் வரும் மாநிலம் எது என்று யாரிடம் கேட்டாலும், கண்னை மூடி கொண்டு மலையாளம் என்று அனைவரும் சொல்வார்கள். அந்த அளவிற்கு சிறந்த திரைப்படங்களை கொடுத்து கொண்டு இருக்கிறார்கள்.
100% Education உள்ளது, அதனால் தான் நாங்கள் தரமான திரைப்படங்களை ரசிக்கிறோம் என்று நமது சேட்டாக்களை கேட்டால் கூறுவார்கள்..

மலையாளிகள் அந்த அளவிற்கு அறிவாளிகளா? திறமையானவர்களா? யோசிக்கும் சக்தி அதிகம் உள்ளவர்களா? ஏன் அது மற்ற மாநிலத்தவரிடம் இல்லை...👇
இந்த அளவிற்கு தரமான படங்களை கொடுக்க இயலவில்லை... புத்திசாலிகள் திறமையானவர்கள் இல்லையா... இருக்கிறார்கள். என்னை பொருத்தவரை மலையாளம் சிறந்த திரைப்படதுறை என்பதை விட சிறந்த தயாரிப்பாளர்கள் கொண்ட Industry எனவே கூறுவேன்..

அங்கு உள்ள தயாரிப்பாளர்கள் Scriptகளை புரிந்து கொள்கிறார்கள்.👇
Visualization Knowledge அதிகம் உள்ளது. தயாரிப்பாளர்கள் புத்திசாலிகளா உள்ளனர். ஆனால் தமிழில்? ஒரு இரண்டு மூன்று தயாரிப்பாளர்கள் தவிர்த்து, ஒரு சினிமா புன்னைகை அறிவும் இல்லாத ஆட்களே அதிகம். கும்பலாங்கி நைட்ஸ் கதையை கதையாக சொன்னால் அவ்வுளவு நன்றாக இருக்காது.. அது ஒரு அனுபவம்...💕👇
பார்த்தால் தான் ரசிக்கலாம்... இதை இங்கே போய் ஒரு தயாரிப்பாளரிடம் இந்த கதையை கூறினால் , இது எல்லாம் ஒரு கதை தூக்கிட்டு வந்துட்டாரு என திட்டுவார்கள்... மலையாளத்தில் தயாரிப்பாளர்களிடம் Visualization Knowledge அதிகம்... இங்கே அது ஒரு சொட்டு கூட கிடையாது...👇👇👇
இருட்டு அரை மாதிரி ஒரு கதை சார் என்று சொல்ல ஆரம்பித்தால்.. இங்கே பல தயாரிப்பாளர் தலை ஆட்டுவார்கள், இதே மலையாளத்தில் தயாரிப்பாளரிடம் கூறினால்.. அதான் Already அப்படி ஒரு Styleல படம் வந்துருச்சே... பிறகு எதற்கு என கேட்பார்கள். அதனால் தான் அங்கே Different Genres படங்கள் வருகிறது...
ஆனால் இங்கே அப்படியா? ஒரு படம் Hit ஆகி விட்டால் போதும். அந்த Pattern Follow பண்ணி முப்பது படங்கள் வரும்.அனைத்தும் Flop.. யாமிருக்க பயமே என்று ஒரு படம்.. நகைச்சுவையான பேய் படம். Hit அடித்தது... உடனை அந்த Pattern Follow பண்ணி ஒரு இருபது படம் வந்து இருக்கும். அனைத்தும் flop..👇👇👇
அப்புறமும் அறிவு வர வில்லை... இருட்டு அரை Hit... உடனை அதை Follow பண்ணி சில திரைப்படங்கள்... உங்கள போடனும் Sir என்று அகில உலக super star ஜித்தன் ரமேஷ் hero... இரண்டு நாட்கள் கூட ஒடவில்லை

இங்கே மலையாளைத்தை விட சிறந்த இளம் இயக்குனர்கள் இருக்கிறார்கள்.👇👇👇
அற்புதமான படைப்புகளை வைத்து கொண்டு.. ஆனால் இவர்கள் தயாரிப்பாளர் மற்றும் கதாநாயகர்களிடம் சிதைந்து கொண்டு இருக்கிறார்கள்.. வேறு வழி இல்லாமல் தன் Scriptயை தூக்கி போட்டு விட்டு இவர்களுக்காக படம் பண்ணி மாட்டி கொள்கிறார்கள்... இதில் மற்றோரு Category Directors உண்டு...👇👇👇
திறமை சுத்தமாக இருக்காது ஆனால் காக்கா பிடிப்பதில் வலலவர்கள்..இப்படி Sir அப்படி sir , intro கொடுக்கிறங்க Audience சில்லறை தெரிப்பாங்க..இந்த மாதிரி ஆட்களால் தான்.. சந்தானம், பிரசாந்த் கெட்டு போனது.. ஏற்றி விட்டு ஒரேடியாக கவுத்து விடுவார்கள்..👇👇👇
விஜய் சேதுபதி இவர்களை போன்ற ஆட்களை கிட்ட சேர்க்க மாட்டார் போல. இல்லை என்றால் மாஸ்டர் , பேட்ட படங்களில் வில்லனாக நடித்து இருக்க மாட்டார். வளர்ந்துட்டு இருக்கிங்க இப்போ போய் வில்லனாக நடிக்கலாம என்று கவுத்து விட்டு இருப்பார்கள்.. ஒருவனை சுய விருப்பத்தை எடுக்கவே விட மாட்டார்கள்.👇
தயாரிப்பாளரே முன் வந்து நல்ல படஙகளை எடுக்க நினைத்தால், இது எல்லாம் ஒடாது சார் என சொல்ல ஒரு group இருக்கு.. என்னமோ சினிமாவை கரைத்து குடித்தவர்கள் போல பேசுவார்கள்....

ஓரு முறை இரண்டு மூன்று டப்பா படங்களில் கதாநாயகனாக நடித்த ஒருவரிடம் கதை சொல்ல சென்றேன்... 👇👇👇
கதை கூறுவதற்கு முன்பே அந்த ஆள் எத்தன fight, song என்று கேட்டார். mood சரி இல்லை அப்புறம் வந்து கதை கூறுகிறேன் என்று வந்த விட்டேன். பெரிய ரஜினி இவர்க்கு opening fight வேண்டுமாம்.. அடிங்க கொங்ப்ப மவனே. தமிழில் இல்லாத சிறந்த இயக்குனர்களா மலையாளத்தில் இருக்கிறார்கள்? இல்லவே இல்லை..👇
இங்கே அதற்கும் மேலே சிறந்த படைப்பாளிகள் உள்ளனர். chance கிடைக்கவில்லை அவ்வுளவு தான். இங்கேயும் சில சிறந்த தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள்.அதனால் தான் நமக்கு கார்த்தி சுப்புராஜ், நலன், லோகஷ், வினோத், பிரேம், ராம்குமார், etc etc..என அண்மையில் சிறந்த இயக்குனர்கள் கிடைத்தார்கள் 👇👇👇
இல்லை என்றால் நாம் இன்னமும் பேரரசு படங்களை தான் பார்த்து கொண்டு இருக்கும் நிலைமை இருக்கும்..

சிறந்த தயாரிப்பாளர்கள் வரும் வரை சிறந்த படங்கள் குறைவாக தான் வரும். மலையாளத்தில் சிறந்த தயாரிப்பாளர்கள் நிறைய உள்ளனர்... மலையாளத்தை விட சிறந்த Audience நம் ஆட்கள் தான்.😎😎😎👇👇
ஒர் இரு படங்களை தவிர, சிறந்த படங்களை கொண்டாட தவறியதே கிடையாது.. மலையாளத்தில் " Trance " என்ற படத்திற்கு பணத்தை வாரி இரைத்தார்கள் அது Worth,🔥 இங்கே பிகில் என்ற படத்துக்கு வாரி இரைத்தார்கள்.. எது worth என்று புரிந்து கொள்ளுங்கள்.. This is the difference between us and them..👇👇👇
450 கோடி 2.0 Worth or 7 கோடி #Kumbalangi_Nights worthஆஆ...

சிறந்த தயாரிப்பாளர்கள் கிடைக்கும் வரை சிறந்த படங்கள் வராது.. Audience குறை கூறுவது மிக தவறு. அவர்கள் எப்போதும் புத்திசாலிகள்... அவர்களுக்கு இது புடிக்கும் அது புடிக்கும் என நீங்கள் Calculate செய்வது மிக தவறு...👇👇👇
சிறந்த படங்களை கொடுங்கள்.. கொண்டாடுவார்கள்...
End of The Day நானும் ஒரு Audience தான்.. கொண்டாடுவேன்..❤❤❤

நன்றி 🙏🙏🙏
You can follow @GodisLove_007.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.