தமிழகத்தில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுத் துறையில் முக்கிய திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டி ஆற்றிய உரையில் இருந்து #UrjaAtmaNirBharta
உங்களை யோசிக்க வைக்கும் இரண்டு முக்கிய விஷயங்களைப் பகிர்ந்து கொண்டு நான் தொடங்க விரும்புகிறேன். 2019-20 ஆம் ஆண்டில் தன் தேவையில் 85 சதவீத கச்சா எண்ணெய் மற்றும் 53 சதவீத இயற்கை எரிவாயுவை இந்தியா இறக்குமதி செய்தது. பன்முகத் திறமை கொண்டுள்ள நம்மைப் போன்ற ஒரு நாடு, எரிசக்தித் தேவைக்க
ு இறக்குமதியை சார்ந்திருப்பது சரிதானா? யாரையும் குறை சொல்ல நான் விரும்பவில்லை. இதுபோன்ற திட்டங்களில் இன்னும் முன்னதாகவே நாம் கவனம் செலுத்தி இருந்தால், நமது நடுத்தரக் குடும்பத்து மக்கள் சிரமப்பட்டிருக்கும் நிலை ஏற்பட்டிருக்காது என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
இப்போது நாம் - தூய்மையான, பசுமைவழி ஆதாரங்கள் மூலம் எரிசக்தி தயாரித்தல், வெளிநாடுகளைச் சார்ந்திருக்கும் நிலையை குறைத்தலில் கவனம் செலுத்த வேண்டிய கூட்டுப் பொறுப்பு நமக்கு உள்ளது.

நடுத்தர மக்களின் கவலைகள் குறித்து எங்கள் அரசு அக்கறை காட்டி வருகிறது.
அதனால் தான் இப்போது, விவசாயிகள் மற்றும் நுகர்வோருக்குப் பயன் கிடைக்கும் வகையில் எத்தனால் பயன்பாட்டை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துகிறோம். மக்களின் வாழ்க்கை நிலையை எளிதாக, ஆக்கபூர்வமானதாக ஆக்கிட பொதுப் போக்குவரத்து வசதிகளை ஊக்குவிக்கிறோம். எல்.இ.டி. பல்புகள் போன்ற மாற்று ஆதாரங்களை
ஊக்குவிக்கிறோம். இதனால் நடுத்தரக் குடும்பங்களுக்கு சேமிப்பு கிடைக்கிறது.பல லட்சம் மக்களுக்கு உதவும் வகையில், பழைய வாகனங்களை ஒதுக்கித் தள்ளும், ஸ்கிராப்பிங் கொள்கையை அரசு அறிவித்துள்ளது. ஏற்கெனவே நிறைய நகரங்களில் மெட்ரோ சேவை தொடங்கப்பட்டுள்ளது.
சூரியசக்தியால் இயங்கும் மோட்டார் பம்பு செட்டுகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவை விவசாயிகளுக்கு பெரிதும் உதவியாக உள்ளன. மக்களின் ஆதரவு இல்லாமல் இவை சாத்தியமாகி இருக்காது. அதிகரித்து வரும் மின்சார தேவையை பூர்த்தி செய்ய அரசு முயற்சிகள் எடுத்து வருகிறது.
அதேசமயத்தில் நமது இறக்குமதி ஆதாரங்களையும் விரிவுபடுத்தி வருகிறோம்.
நுகர்வோரை மையமாகக் கொண்ட பாஹல், பிரதமரின் உஜ்வாலா யோஜ்னா போன்ற திட்டங்களால், இந்தியாவின் ஒவ்வொரு குடும்பமும் பயன் பெறுகின்றன . எரிவாயு பயன்படுத்தும் நுகர்வோரில் 90 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் மானியத் தொகையை நேரடியாக வங்கிக் கணக்கில் பெறுகின்றனர்.
உஜ்வாலா யோஜ்னா மூலமாக, தமிழகத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் 32 லட்சம் குடும்பங்களுக்கு புதிய இணைப்புகள் தரப்பட்டுள்ளன. பிரதமரின் கரீப் கல்யாண் யோஜ்னா மூலம் 31.6 லட்சம் குடும்பங்களுக்கு இலவசமாக மாற்று எரிவாயு உருளைகள் வழங்கப் பட்டுள்ளன. #PMUY
ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி வரையில் 143 கிலோ மீட்டர் நீளத்துக்கான இயற்கை எரிவாயு குழாய் திட்டம் இன்று தொடங்கப்படுவதால், ஓ.என்.ஜி.சி. எரிவாயு உற்பத்தி வளாகங்களில் கிடைக்கும் எரிவாயுவுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். ரூ.4,500 கோடி செலவில் நிறைவேற்றப்படும் பெரியதொரு
இயற்கை எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இத் திட்டம் அமைந்துள்ளது. இதன் மூலம் எண்ணூர், திருவள்ளூர், பெங்களூரு, புதுவை, நாகப்பட்டினம், மதுரை, தூத்துக்குடி பகுதிகள் பயன் பெறும். நகர எரிவாயு திட்டங்களை செயல்படுத்தவும்
இந்த எரிவாயுக் குழாய் திட்டம் உதவிகரமாக இருக்கும். தமிழகத்தில் 10 மாவட்டங்களில் ரூ.5,000 கோடி செலவில் இத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வீடுகளுக்கு சுத்தமான எரிவாயு கிடைப்பது, பி.என்.ஜி. வசதி, வாகனங்களுக்கு சி.என்.ஜி. போன்ற மாற்று எரிபொருள் வசதி,
உள்ளூர் தொழிற்சாலைகளுக்கு தேவையான வசதிகள் இதன் மூலம் கிடைக்கும்.ஓ.என்.ஜி.சி. எரிவாயு உற்பத்தி வளாகத்தில் இருந்து தூத்துக்குடியில் உள்ள ஸ்பிக் வளாகத்துக்கு நேரடியாக எரிவாயு வழங்கப்படும். உரம் தயாரிப்பதற்காக, குறைந்த விலையில் ஸ்பிக் நிறுவனத்துக்கு இதன் மூலம் எரிவாயு கிடைக்கும்.
சேமிப்புக் கிடங்கு வசதி எதுவும் இல்லாமல், தொடர்ச்சியாக கச்சா பொருளாக இந்த எரிவாயு கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது. இதன் மூலம் வருடம் தோறும் உற்பத்திச் செலவில் ரூ.70 முதல் ரூ.95 கோடி வரையில் மிச்சமாகும். இதனால் உரத்தின் உற்பத்தி விலை குறையும்.
இந்தியாவின் எரிசக்தி தேவையில் எரிவாயு மூலம் 6.5 சதவீதம் பூர்த்தி செய்யப்படுகிறது. இதை 15 சதவீதமாக உயர்த்துவதற்கு திட்டமிடப் பட்டுள்ளது.வளர்ச்சித் திட்டங்களால் ஏராளமான பயன்கள் கிடைக்கின்றன. நாகப்பட்டினத்தில் அமையும் சி.பி.சி.எல்.-ன்
புதிய சுத்திகரிப்பு வளாகத்தில் சுமார் 80 சதவீதம் அளவுக்கு உள்நாட்டு பொருட்கள் மற்றும் சேவைகள் பயன்படுத்தப்படும். போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவது, பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலைகள் மற்றும் அதைச் சார்ந்த சிறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்க இது உதவும்.
பி.எஸ்.-6 விதிமுறைகளின்படி தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய எம்.எஸ். மற்றும் டீசலை இந்த சுத்திகரிப்பு நிலையம் உற்பத்தி செய்யும். மதிப்புகூட்டிய பொருளாக பாலிபுரப்பலீனும் உற்பத்தி செய்யப்படும்.
கடந்த ஆறு ஆண்டுகளில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு துறைகளில் ரூ.50 ஆயிரம் கோடி அளவிற்கான திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதே காலக்கட்டத்தில், 2014க்கு முன் ஒப்புதல் அளிக்கப்பட்டவற்றில், ரூ.9100 கோடி அளவிற்கான திட்டங்கள் முடிக்கப் பட்டுள்ளன.
மேலும், ரூ.4,300 கோடி அளவிலான திட்டங்கள் வரவுள்ளன. நமது உறுதியான கொள்கைகள் மற்றும் இந்தியாவின் நீடித்த வளர்ச்சிக்கான முன் முயற்சிகள் என்ற கூட்டு முயற்சியால், தமிழகத்திற்கு இந்த அனைத்துத் திட்டங்களும் கிடைத்துள்ளன .
தமிழகத்தில் எரிசக்தித் துறை மேம்பாட்டுக்கு நடவடிக்கை எடுத்த, தொடர்புடைய அனைத்து தரப்பினருக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். நமது உயர் லட்சியங்களை நாம் தொடர்ந்து அடைவோம் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1698842
You can follow @ganeshbv1.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.