"தமிழர்களுக்குப் பிச்சை போடுகிறீர்களா?' 🤔

கொதித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள்:

"பிற மாநிலங்களில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் பணி வழங்கிவரும் நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் பிற மாநிலத்தவர்கள் அதிக எண்ணிக்கையில் அரசுப் பணிகளில் நியமிக்கப்படுவது ஏன்?''
இப்படி ஒரு கேள்வியை எழுப்பியிருப்பது தமிழர் உரிமை சார்ந்து போராடும் இயக்கங்களோ, மாநில சுயாட்சி பேசும் அரசியல் கட்சிகளோ அல்ல.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள்தான் இப்படியொரு கேள்வியை தமிழக அரசை நோக்கி எழுப்பியிருக்கிறார்கள்.

எதற்காக நீதிபதிகள் இப்படி ஆக்ரோஷமானார்கள்.?
ஊட்டி ஆயுதத் தொழிற்சாலையில், கெமிக்கல் பிராசஸிங் பிரிவில் 140 பணியிடங்களை நிரப்ப 2015-ல் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.

அந்தப் பணிக்கான எழுத்துத் தேர்வில் ஓட்டப்பிடாரத்தைச் சேர்ந்த சரவணன் 40 மதிப்பெண்கள் பெற்றார்.

ஆனால், அவருக்கு வேலை கிடைக்கவில்லை. பின்பு யாருக்கு கிடைத்தது.?
அவரைவிடக் குறைவான மதிப்பெண் பெற்ற வெளிமாநிலங்களைச் சேர்ந்த ஆறு பேருக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது.

அந்த ஆறு பேரின் பணி நியமனத்தை ரத்துசெய்யக் கோரியும், தனக்குப் பணி வழங்கக் கோரியும் சரவணன், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அவருக்குப் பணி வழங்க உத்தரவிட்டார்.

ஆனால், நீதிபதியின் ஆணையை ரத்துசெய்யக் கோரி ஆயுதத் தொழிற்சாலை சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போதுதான் நீதிபதிகள், இப்படியொரு கேள்வியைத் தமிழக அரசை நோக்கி எழுப்பியிருக்கின்றனர்.

"வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அவர்களின் தாய்மொழியான இந்தியில் தேர்ச்சி பெற இயலாத நிலையில், தமிழ் மொழியில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று, வட மாநிலத்தவர்கள் பணி நியமனம் பெறுவது எப்படி..?
பணித் தேர்வுகள் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நடைபெற வேண்டும்.''

இந்த வழக்கின் விசாரணையில் மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுப்பையா "ஆயுதத் தொழிற்சாலை பணியில் 140 பணியிடங்களில் 50 சதவிகிதம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்” என்று கூறினார்.
அப்போது உடனடியாகக் குறிக்கிட்ட நீதிபதி என். கிருபாகரன், "தமிழ்நாட்டுக்கு என்ன பிச்சை போடுகிறீர்களா?’’ என்று மிகக் காட்டமாகக் கேட்டிருக்கிறார்.
கேட்டது உயர் நீதிமன்ற நீதிபதி.
கேட்டது ஆளும் அரசை.

நீதிபதிகள் இந்த விஷயத்தில் இவ்வளவு தீவிரமாகக் கருத்து தெரிவிக்கக் காரணம் என்ன?
"வட மாநில இளைஞர்கள், அரசுத் தேர்வுகளில் இந்தியில் ஃபெயிலாவதும், தமிழில் அதிக மதிப்பெண்கள் எடுத்து பாஸாவதும் இயல்பாகவே இந்தத் தேர்வு முறைகளிலுள்ள முறைகேடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டி விடுகின்றன.

இங்கு இருக்கும் அரசுத் துறைகளில் வட மாநிலத்தவர்கள் உள் நுழைக்கப்படுகிறார்கள்.
இந்த முறைகேடுகள் அரசியல் காரணங்களுக்காகவும் நடைபெறுகின்றன.

தவிர, பிற மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் இது போன்ற முறைகேடுகளுக்குத் துணை போகின்றனர்.

இந்த அரசு யாருக்கானது?
தமிழர்களுக்கா? #டவுட்

#என்னமோ_போடா_மாதவா மொமண்ட்.

#வெற்றிநடை_போடும்_தமிழகமே
#இந்த_நாடும்_நாட்டு_மக்களும்...
You can follow @ChennaiViswa.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.