காலை வணக்கம் தலைவா @rajinikanth.

இதை நீங்க படிப்பீங்களான்னு தெரியல.

இருந்தாலும் இந்த டிவிட்டர் ஒரு வழி குடுத்துருக்கு அதை பயன்படுத்தி சொல்றேன்.
உங்களை சினிமாவில் பார்த்து தான் ரசிகை ஆனேன்.

நாளடைவில் உங்கள் குணம் சினிமா தாண்டி ரஜினிகாந்த் என்ற மனிதரின் ரசிகையாக மாத்திடுச்சு(1)
உங்கள் ரசிகராக இருப்பவர்களில் 90% பேர் இப்படி தான்.அவர்களுக்கு ரஜினிகாந்த் என்ற தனி மனிதன் மீது நடிகர் ரஜினிகாந்த் விட அன்பு அதிகம்.

நீங்க அரசியலுக்கு வரணும் என 96இல் இருந்து பலர் விரும்பினார்கள்.(2)
என்னை போல் பலர் உங்களுக்கு கடவுள் அந்த ஆசி கொடுத்தால் நீங்களே வருவீங்கன்னு நினைச்சோம்.

அது மாதிரி ஒரு ஆசி பெற்ற நாளாக தான் இருந்தது டிசம்பர் 31,2017.

உங்கள் மனதில் ஏற்பட்டிருந்த அரசியல் மாற்றம் உங்கள் வார்த்தைகளில் மிகவும் அதிகமான மக்கள் அக்கைரையோட பிரதிபலித்தது.(3)
நீங்கள் அன்னைக்கு சொன்ன வார்த்தைக்காக இங்க பலர் அரசியல் மாற்றம் தேடி உழைக்க ஆரம்பிச்சாங்க.(இன்னும் உழைக்கிறார்கள்)
எனக்கு இந்த 3 வருடமாக நிச்சயம் தமிழ்நாட்டுக்கு ஒரு விடிவு வருது என்ற நம்பிக்கை இருந்துச்சு.
அது டிசம்பர் 3,2020 அதிகமாக மாறியது.(4)
ஆனால் டிசம்பர் 31,2020 உங்களிடமிருந்து வந்த அறிக்கை தலைவர் உடல்நலம் முக்கியம் என மாற்றிடுச்சு.

ஆனால் நீங்க சொன்ன "அதிசயம்,அற்புதம்" எப்படியாச்சும் நடந்திடும் என்ற எண்ணமும் நூறு சதவீதம் இருக்கு.

இப்ப ஏன் இதை சொல்றேன்,நீங்க அரசியலுக்கு வாங்க.

இதை இப்ப மறுபடி கேட்க காரணம் (5)
நேற்று அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டது.

முக்கால்வாசி மக்களை சோம்பேறி ஆக்கும் இலவசங்கள்.

படிக்க நல்ல கல்வி தர முடியல.கல்வியை வியாபாரமாக மாத்திட்டு மாணவர்களுக்கு லேப்டாப்,டேப் குடுக்க போறாங்களாம் (6)
ஏற்கனவே இந்த மொபைல் போனால் இருக்கும் ஆபத்து எப்படி தீரும் என தெரியல இதில் ரேஷன் அட்டைக்கு ஒரு அண்ட்ராய்டு போன் 🤦

இது போதாதுண்ணு எல். இ. டி டிவி , வாஷிங் மெஷின் etc..

எல்லாரும் சமமாக இருக்க வெறும் பொருட்கள் போதுமா தலைவா?? (7)
அடுத்து திமுக நிச்சயம் அதிமுக விட அதிக இலவசங்களை வழங்கும் தேர்தல் அறிக்கையோட தான் வரும்.

வெறும் இலவசங்களை குடுத்து மக்களை சோம்பேறி ஆக்கிட்டு, அரசியல்வாதிகள் இந்த இலவச பொருட்கள் வழங்கும் டெண்டர் முதல் விநியோகம் வரை ஊழல் செய்ய போரானுங்க. (8)
அத்தியாவசிய தேவைகளான காய்கறி,பேருந்து கட்டணம், கேஸ் சிலண்டர்,மின்சாரம்,பெட்ரோல்,டீசல் எல்லாம் விலை உயர்த்திட்டு சோம்பேறியாக மாற்ற அத்தியாவசியம் இல்லாததை இலவசமாக தராங்க.

இன்னும் உங்கள் மேல் இருக்கும் நம்பிக்கையில் தான் கேட்கிறேன் தலைவா இவனுங்க கிட்ட இந்த தமிழ்நாடு நாசமா (9)
போக விடாதீங்க. நீங்க வந்தால் நிச்சயம் அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றம் வரும்.

இது நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை.

மக்களுக்காக அரசியலுக்கு வர நினைத்த உங்கள் தூய எண்ணம் நிறைவேற வேண்டும்.🙏

கொரோனா அச்சம் இப்ப மக்கள் மத்தியிலும் இல்லை ஆட்சியாளர்களிடம் இல்லை.(10)
நீங்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து நிச்சயம் அரசியலுக்கு வர முடியும்.

இன்னும் இங்க நீங்க சொன்ன தலைவருக்கான வெற்றிடம் இருக்கு.

உங்க உடல் நலமும் முக்கியம் தமிழ்நாட்டின் நலனும் முக்கியம்.

நிச்சயம் நீங்க நல்ல முடிவு எடுத்து வச்சிருப்பீங்க சீக்கிரம் சொல்ல போறீங்க(11)
உங்களில் ஆன்மீக அரசியல் இந்த நாட்டிற்க்கு தேவை தலைவா 🙏🙏🙏

தயவு செய்து #மறுபரிசீலை_செய்யுங்கள்_தலைவா

நான் தப்பா எதும் பேசல.நேற்றிலிருந்து இருந்த ஆற்றாமை.நிச்சயம் நீங்க இதை படிப்பிங்க என நம்புகிறேன் 🤩

சீக்கிரம் நல்லா செய்தி சொல்லுங்க தலைவா
#அதிசயம்அற்புதம் நடக்கும்

நன்றி 🤘
You can follow @Thalaivarrasi12.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.