பொறுப்பு துறப்பு
இதுல நான் expert இல்ல. முழுக்க முழுக்க எனது சொந்த அனுபவம் மட்டுமே!
டீக்கடையார் ஒருதடவை பேசும்போது சொந்தவீடு'ங்கிறதுக்கு கூடடைதல் ங்கிற வார்த்தை யூஸ் பண்ணி அதுக்கான விதைய மொதல்ல வெதச்சுட்டார். Investmentங்கிறத தாண்டி வாங்குற வீடு கிட்டத்தட்ட ஒரு சமூக அந்தஸ்து தான் https://twitter.com/iParisal/status/1361593411434782723
இதுல நான் expert இல்ல. முழுக்க முழுக்க எனது சொந்த அனுபவம் மட்டுமே!
டீக்கடையார் ஒருதடவை பேசும்போது சொந்தவீடு'ங்கிறதுக்கு கூடடைதல் ங்கிற வார்த்தை யூஸ் பண்ணி அதுக்கான விதைய மொதல்ல வெதச்சுட்டார். Investmentங்கிறத தாண்டி வாங்குற வீடு கிட்டத்தட்ட ஒரு சமூக அந்தஸ்து தான் https://twitter.com/iParisal/status/1361593411434782723
வீடு வாங்கலாம்னு முடிவு பண்ணினதும் எல்லார் மாதிரியே இளவட்ட பசங்க திமுகவ திட்டறமாதிரி நானும் வீட்டு மனை தேட ஆரம்பிச்சேன். எனக்கு இடம் பாக்குறதுல சில requirement இருந்தது. அதாவது மனையோட முன் அகலம் மினிமம் 30 அடி இருக்கணும். நீளம் மினிமம் 25 அடி இருந்தா போதும்.
காரணம், வீடுகட்டும்போது ரெண்டு பாக்கணும் set back விட்டு கட்டலாம். கொஞ்சமாவது காத்தோட்டம் இருக்கும். அகலம் 30 அடி இருந்தா நாளபின்ன கார் வாங்கி ரோட்ல நிறுத்துனா நம்ம வீட்டு லிமிட்குள்ள நின்னுக்கும். எலிவேஷன் அருமையா டிசைன் பண்ணலாம். கண்டிப்பா ஒரு பால்கனி வைக்கலாம்.
இடம் வடக்கு அல்லது கிழக்கு பார்த்து அமைஞ்சு இருந்தா நல்லது. மேற்கு கூட ஓகே. தெற்கு கொஞ்சம் பாத்து தான் கட்டணும். வாஸ்து படி காட்டினா ரூம் அளவு சின்னச்சின்னதா அமைய வாய்ப்பிருக்கு. இதுவரை தெற்கு பார்த்த வீடுகளை விசிட் பண்ணின புரிதல்ல சொல்றது தான். Experts can explain better.
மேற்கு பார்த்து வீடு கட்டுனா நாள் பூரா வீட்ல வெளிச்சம் இருந்துகிட்டே இருக்கும். காத்தோட்டமும் இருக்கும். கிழக்கு மேற்குனா சூரிய உதயம் அஸ்தமனம் அப்போ direct sunlightனால கொஞ்சம் சூடு தெரியும். வீடுகள் பக்கத்துல அடர்த்தியா இருந்தா இந்த பிரச்சனை வராது.
வீட்டுமனை வாங்குறவங்க மினிமம் 25 அடி அகலம் ங்கிறதுல compromise பண்ணவேண்டாம். கோர்ஸ் விழுகுற மனைகளையும் பார்க்க வேண்டாம். வீட்டுக்கட்ட building square பண்ணும்போது இடம் வேஸ்ட் ஆக வாய்ப்பு அதிகம். 15x15 ஹால், 12x12 bedroom ரெண்டு, 9x9 kitchen, 2 பாத்ரூமொட வீடுகட்ட 950sq.ft தாராளம்.
மணல்கயிறு கிட்டுமணி மாதிரி இவ்ளோ கண்டிஷனோட மனை தேடுனா எங்க வாங்குறது? 2 வருஷம் STRக்கு பொண்ணு தேடுற TR மாதிரி சுத்திக்கிட்டே இருந்தேன். கைல இருந்தது வெறும் 3 லட்சம். மிச்சதுக்கு நகை கடன், தெரிஞ்சவங்க மூலமா ஏற்பாடு பண்ணலாம் ங்கிற ஒரு தைரியம்.
ஒரு மனை பாத்து ரேட் தெரிஞ்சு அதுக்காக பணம் சேர்த்து திரும்ப போய் பாத்தா ஒன்னு வித்திருக்கும், இல்ல ரேட் டபுள் ஆகியிருக்கும். சரி, அப்போவே புக் பண்ணலாம்னா அட்வான்ஸ் குடுக்க மட்டும் தான் பணம் இருக்கும், மிச்சதுக்கு லோன் போலாம்னா அங்க ஒரு ட்விஸ்ட் வச்சுருப்பானுக.
மனைக்கு பேங்க்ல லோன் தாராங்க. உடனே வாவ் ங்க வேணாம். மனையோட guideline valueல 75%க்கு தான் லோன் தருவான், market valueக்கு அல்ல. அதாவது 20லட்சம் market value உள்ள மனைக்கு guideline value 4 லட்சம்கூட இருக்காது. அதுல 75% 3லட்சம் லோன் தருவான். அந்த கருமம் தான் கைல இருக்கே? மிச்சதுக்கு?
போக Plot லோன்க்கு வட்டி அதிகம், வாங்குனா சில பேங்க்ல 6 மாசத்துக்குள்ள வீடு கட்டணும்னு கண்டிஷன் வேற போடுவானுக. சில பேரு ஏன் personal லோன் போக கூடாதுன்னு போய் மாட்டிப்பாங்க. அது போனா உறுதியா வீடு கட்ட முடியாது. லோன் கட்டி முடிகிறதுக்குள்ள போதும் போதும்னு ஆகி மூடே போய்டும்.
இப்போ என்ன தான்யா பண்ணனும் ங்கிற ங்கறீங்களா? இதுக்கு தான் Private பேங்க்கள் ஒரு டகால்ட்டி வேலை பாக்குறானுக.
Plot பாத்துட்டேன் - 25 லட்சம் வருது
உடனே வீடு கட்டப்போறேன்
வீடு கட்ட 25 லட்சம் ஆகும்
ஆக மொத்தம் 50 லட்சம் தேவை
கைல 5 லட்சம் தான் இருக்கு
என்ன பண்ணலாம்?
Plot பாத்துட்டேன் - 25 லட்சம் வருது
உடனே வீடு கட்டப்போறேன்
வீடு கட்ட 25 லட்சம் ஆகும்
ஆக மொத்தம் 50 லட்சம் தேவை
கைல 5 லட்சம் தான் இருக்கு
என்ன பண்ணலாம்?
அதாவது முக்காவாசி Private banks RBI வகுத்த regulationsகளை வளச்சுதான் home loan process பண்றங்க. ஒரு regular salaried income இருந்து மேற்சொன்ன requirements இருக்கும் பட்சத்துல home loan sales teamக்கு நீங்க ஒரு தலப்பாக்கட்டு பிரியாணி. சத்தியமா விடமாட்டானுக. Procedure சிம்பிள் தான்
Plot முடிவு பண்ணிட்டு உடனே ஒரு Builderர புடிக்கணும் (கொத்தனார் அல்ல). கொத்தனார் வச்சு காட்டினாலும் பேருக்காவது ஒரு Builder தேவை. உடனே Plot ஓனருக்கும் Builderக்கும் ஒரு அட்வான்ஸ் போட்றணும். Plot ஓனர்க்கிட்ட பேங்க் லோன் மூலமா தான் அவருக்கு amount செட்டில் ஆகும்ங்கிறத புரியவைக்கணும்
அட்வான்ஸ் பண்ணினதும் Plot ஓனர் ஒப்புதலோடு போர் போட்டு basement எழுப்பிடணும். Building approval, EB temporary connection details குடுத்துட்டா மிச்சத்த sales team பாத்துப்பாங்க.
அதாவது 50 லட்சம் estimation சொன்னேன் இல்லையா (Plot+house). அதுல 80% வரை லோன் கிடைக்க வாய்ப்பு இருக்கு. கிட்டத்தட்ட 40 லட்சம் தேத்திடலாம் (if eligible).
40 லட்சத்துக்கு இன்னிக்கி தேதிக்கு 7.1% தான் வட்டி. 20 வருஷம் repayment வச்சா 35 ஆயிரம் தான் வரும். இது எல்லாம் தனிவீடுக்கான கணக்கீடு. அபார்ட்மெண்ட் பத்தின ஐடியா இல்ல எனக்கு. மாசம் 15 ஆயிரம் வாடகை குடுக்குறவங்க தைரியமா இந்த ரிஸ்க் எடுக்கலாம்.
இதுல நல்ல விஷயம் என்னன்னா Plot வாங்க வீடு கட்ட தனித்தனியா அமௌன்ட் ரெடி பண்ண அலைய தேவையில்லை. மேல சொன்ன மாதிரி basement போட்டு advance பண்ண மட்டும் பணம் இருந்தா போதும். ஒரு 6 மாசம் building வளர பேங்க் பாத்துக்கும். மிச்சத்த எப்படியும் ஏற்பாடு பண்ணிடலாம் ங்கிற தைரியம் வந்துடும்.
இன்னும் முக்கியமான சில விஷயங்கள் சொல்ல வேண்டியதா இருக்கு. ட்ராவல்ல இருக்கேன். நாளைக்கி தரவுகளோட பதிவிடறேன்.
