(அ)நீதி கதைகள்
1935 வது வருஷம் நெய்வேலில வாழ்ந்து வந்த ஜம்புலிங்க முதலியார்ன்றவர் தன்னோட நிலத்துல ஆழ்துளைக் கிணறு தோண்ட கிணத்துல இருந்து கருமையான பொருள் வெளியேறி இருக்கு.அதை அவர் அரசாங்கத்துக்கு அனுப்ப அரசு,அதை ஆய்வுக்கு அனுப்பி பழுப்பு நிலக்கரின்னு உறுதி செஞ்சாங்க..
1935 வது வருஷம் நெய்வேலில வாழ்ந்து வந்த ஜம்புலிங்க முதலியார்ன்றவர் தன்னோட நிலத்துல ஆழ்துளைக் கிணறு தோண்ட கிணத்துல இருந்து கருமையான பொருள் வெளியேறி இருக்கு.அதை அவர் அரசாங்கத்துக்கு அனுப்ப அரசு,அதை ஆய்வுக்கு அனுப்பி பழுப்பு நிலக்கரின்னு உறுதி செஞ்சாங்க..
அதுக்கு அப்புறம் நெய்வேலிய சுத்தி அரசு ஆய்வு செஞ்சு அங்க ஏராளமான நிலக்கரி படிமங்கள் இருக்குன்னு உறுதியாச்சு.அப்புறம் 1956ல நிலக்கரி தோண்டியெடுத்து மின்சாரம் தயாரிக்க NLC நிறுவ அமைப்ப ஏற்படுத்துச்சு.இதுல ரொம்ப முக்கியமான விஷயம் என்னென்னா அத்திப்பட்டு,வேலுடையான்பட்டு,பாப்பனம்பட்டு,
வெண்ணைக்குழி இதுமாதிரி 23 கிராமங்கள்ள வாழ்ந்த மக்கள் தங்களோட நிலத்த NLC நிறுவனத்துக்கு கொடுத்திருக்காங்க.இந்த இடத்துலதான் NLC தொழிலாளர்களுக்கு குடியிருப்பும்,அலுவலகங்களும் கட்டப்பட்டுருக்கு..
யோசிச்சு பாருங்க!தலைமுறை தலைமுறையா வாழ்ந்த வந்த இடத்தையும்,வீட்டையும,விவசாயபூமியையும்
யோசிச்சு பாருங்க!தலைமுறை தலைமுறையா வாழ்ந்த வந்த இடத்தையும்,வீட்டையும,விவசாயபூமியையும்
நமக்காக,தமிழகத்தின் வளர்ச்சிக்காகன்னு 23 கிராம மக்கள் கொடுத்திருக்காங்கன்னா எவ்வளவு பெரிய நம்பிக்கையில வாழ்வாதார இடத்தை கொடுத்திருப்பாங்க!இந்த நிறுவனம் நல்லா போச்சுன்னா தனக்கோ,தன் சந்ததிக்கோ ஒரு வேலை கிடைக்கும்ன்ற நம்பிக்கையில.நினச்ச மாதிரியே NLC நிறுவனம் நல்லா போய்ட்டு இருக்கு
ஆண்டுக்கு 7146 கோடி வருமானம்.ஆனா மக்களோட நம்பிக்கை மேலதான் மிகப்பெரிய இடி விழுந்திருக்கு.சமீபத்துல NLC நிறுவனத்துல உள்ள 259 பட்டதாரி நிர்வாக பயிற்சியர்(Graduate Executive Trainee)பணிக்கான நேர்காணலுக்கு 1582 பேர அழைச்சிருக்காங்க.இதுல ஒரு விழுக்காடு கூட தமிழர் இல்ல.திட்டமிட்ட சதி
ஏன் இப்படி சொல்றோம்னா இப்போ இருக்குற NLC தலைவர் மற்றும் இயக்குனர்கள் 11 பேர்ல தமிழக அரசின் பிரதிநிதியா இருக்குற உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் தவிர மீதமுள்ள 10 பேர்ல 9 பேர் பிற மாநிலத்தவர்கள்.சரி.நமக்கு ஏன் இவ்வளவு வருதுன்னா இந்த பட்டதாரி நிர்வாக பயிற்சியர் வேலை கிடைச்சதுன்னா
பயிற்சியின் போது மாசத்துக்கு 1.25 லட்சம் சம்பளம்.பயிற்சி முடிஞ்சு அதிகாரியாயிட்டா மாசத்துக்கு 1.40 லட்சம் சம்பளம்.நம்ம தமிழ்நாட்டுல ஒரு நூறு இளைஞர்களுக்கு வேலை கிடைச்சதுன்னா கூட அவங்க குடும்பமே செட்டில் ஆயிடும்.கேக்கவே எவ்ளோ சந்தோஷமா இருக்கு!ஆனா நல்லா தெரிஞ்சுக்கோங்க.நிலத்தை