“வாகை சூட வா” என்ற திரைப்படத்தில் ஓர் அற்புதமான பாடல் வரும். “சர சர சார காத்து வீசும் போதும்..” — சின்மயி உன்னதமாகப் பாடியிருப்பார்.

இந்தப் பாடலின் திரைக்காட்சியமைப்புகள் பிரமாதமாகவும் எளிமையாகவும் ஆக்கப்பட்டிருக்கும்.
அந்தக் காட்சியமைப்பில் ஒரு கட்டத்தில், மழைக்கால வெள்ளத்தில் அடிபட்டு, ஊருக்குள் வருகின்ற குளத்து மீன்கள், மரத்தில் ஏற முயற்சிப்பதும் அது முடியாமல் போய் கீழே விழுகின்றதுமான காட்சிகள் காட்டப்படும்.
கிராமிய சூழலின் பிரிக்கமுடியாத மண்வாசனையான பண்புகளை உங்களால் அந்தத் திரையில் பார்க்க முடியும்.

காட்சி மாறுகிறது.
பாடசாலையொன்றில் வகுப்பறையில் தொந்தரவு செய்து கொண்டிருந்த அந்தச் சிறுவனுக்கு தேவைப்பட்டதெல்லாம் ஆதரவும் அரவணைப்பும் அறிவுரைகளும் தான்.

பாடசாலையில் பொருத்தமான அறிவுரை சொல்வதில் அனுபவமுள்ள ஆசான் மயில்வாகனத்திடம் சிறுவன் அனுப்பி வைக்கப்பட்டான்.
இந்தச் சிறுவன் பாடசாலையில் தரும் தொந்தரவு எல்லையை தாண்டியிருந்தது. பாடசாலையை விட்டு இவனை வெளியேற்றி, விஷேட கவனிப்பு அவனுக்குத் வழங்க வேண்டும் என்பது போன்ற அபிப்பிராயங்கள் அங்கு பேசப்பட்டன.
பலரும் அவனோடு, அவன் குணம் சார்பாகக் கதைத்து அறிவுரை பலவும் சொல்லியிருந்தனர். ஆனால், அவனை மயில்வாகனம் சார் இதுவரையில் சந்திக்கவில்லை.

“நீ, குழப்படி செய்யாத, தொந்தரவு செய்யாத ஏதாவது வகுப்புகள் உண்டா?,” அந்தச் சிறுவனிடம், ஆசிரியர் மயில்வாகனம் கேட்டார்.
“நான் மைதிலி டீச்சரின் வகுப்பில் குழப்படி அதிகம் செய்வதில்லை” என்றான் அந்தச் சிறுவன்.

“அப்படி மைதிலி டீச்சரின் வகுப்பில் என்ன வித்தியாசமிருக்கிறது?” என்று கேட்ட ஆசிரியர் மயில்வாகனத்திற்குக் கிடைத்த பதில்கள் பலதையும் சொல்லின.
“மைதிலி டீச்சர், என்னை அன்போடு வகுப்பிற்குள் வரவேற்பார். அவர் தருகின்ற பாடம் எனக்கு நன்றாக புரிகின்றதா என்பதைக் கவனிப்பார். எனக்குச் செய்யக் கூடியதான பாட அப்பியாசங்களையே மட்டுமே அவர் எனக்குத் தருவார்” என்று அந்தச் சிறுவன் வித்தியாசங்களை அடுக்கிக் கொண்டிருந்தான்.
மேற்சொன்னவற்றில் ஒன்றைத் தானும் வேறு எந்த ஆசிரியரும் செய்வதில்லை என்பதையும் அவன் சொல்லிய பதில் சுட்டி நின்றது.

மற்ற ஆசிரியர்களை அணுகி, இந்த விடயங்களை தங்களின் பாடவேளைகளில் சேர்த்துக் கொள்ள வேண்டுமென மயில்வாகனம் சார் பரிந்துரைத்தார்.
அவர்களும் அப்படியே செய்தனர். என்னவோர் ஆச்சரியம், அந்தச் சிறுவன் குழப்படி ஏதும் செய்யாமல் பாடங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினான்.

எதுவெல்லாம் வேலை செய்யவில்லை என்பதை நோக்கியே உங்களின் அவதானத்தை செலுத்த வேண்டும் என்ற வகையில் நீங்கள் வளர்க்கப்பட்டுள்ளீர்கள்.
வேலைசெய்யாதவைகள் பற்றி மூச்சுத்திணற முறைப்பாடு செய்வதிலும் முழுக் கவனம் செலுத்துகிறீர்கள்.

ஆனால், “இன்று எது வேலை செய்கிறது? அதனை எவ்வாறு மேம்படுத்தி நன்றாகச் செயற்படுத்தலாம்?” என்பதைப் பற்றிய புரிதல்கள் கொண்டவர்களாய் உங்களை உருவாக்குவதில் உள்ள பயனை பலவேளை மறந்து விடுகிறீர்கள்.
உங்கள் வாழ்க்கையில், வேலைத்தளத்தில், ஏன் வீட்டில் பலதையும் மாற்றிக் கொள்ள நீங்கள் நினைத்து முயன்றிருப்பீர்கள்.

எது வேலை செய்யவில்லை என்பதைப் பற்றி மட்டும் யோசித்துக் கொண்டு, வேதனையை விலை கொடுத்து வாங்காமல் இருக்கப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
எது வேலை செய்கிறது, அதனை எப்படி மேம்படுத்தலாம் என்பதை அவதானித்து காரியம் செய்தாலே மாற்றங்கள் மலரும்.
காட்சிகள் இரண்டும் இணைகின்றன.

“எல்லோரும் மேதைகள் தாம். மீனொன்றின் ஆற்றலை அது மரத்தில் ஏறும் திறமையை வைத்து கணிப்பீடுவீர்களாயின், அந்த மீன் வாழ்நாள் முழுவதும் தன்னை முட்டாளென்றே நம்பிக் கொண்டிருக்கும்” என்ற அல்பர்ட் ஐன்ஸ்டைனின் அமுதவாக்கு முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியதொன்று.
You can follow @ThariqueAzeez.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.