மஹாபலிச் சக்கரவர்த்தி 99 அசுவமேத யாகம் செய்துவிட்டு நூறாவது அசுவமேத யாகம் செய்யும்போது பெருமாள் வாமன அவதாரத்தில் வந்து அவரிடம் தானம் கேட்கிறார். ( குட்டை பையன் - வாமன அவதாரத்தை குறிக்கிறது. )
ஆனால் சுக்ராச்சாரியார் மஹாபலி தாரை வார்ப்பதைத் தடுக்க வண்டாக உருமாறி கமண்டலத்தின் வாயை நீர் வராதவாறு அடைத்துக்கொள்கிறார். அப்பொழுது நம் குட்டைப் பையன் வாமனர் என்ன செய்யறார்?
ஒரு குச்சியை (கட்டை) எடுத்து கமண்டலத்தின் குழாயை குத்தி சுக்ராச்சாரியருக்கு ஒரு கண் ஊனமாகி விடுமாறு செய்கிறார். பின் சுக்ராச்சாரியார் தன் தவறை உணர்ந்தார்.
அவரை மன்னித்து, கொடுப்பதில் வள்ளலான மஹா பலிச் சக்கரவர்த்தியின் புகழை உலகறிய செய்தவர் பெருமாள்.
தானம் கேட்கும் வறியவர்களுக்கு தட்டாமல் வழங்குபவர் தான் தட்டான்/தட்டாதவன். ( தட்டான் - மஹாபலிச் சக்கரவர்த்தி )

*தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான்*

இது தான் “தட்டானுக்குச் சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான்…” என்பதற்கான விளக்கம்…!!
இந்த விடுகதையானது சாதாரணமாக வரும் உளறலோ பிதற்றலோ அல்ல, இது ஒரு தெய்வீக சமாச்சார விடுகதை.

தட்டானுக்கு சட்டை போடுவது என்றால் தானம் கொடுக்க நினைப்பவரின் எண்ணத்தை தடுப்பது அதாவது அவரின் ஈகை உள்ளத்தை மறைப்பது என்று பொருள். நம் முன்னோர்கள் சொல்வது எல்லாம் இறைவனை அடையும் உபாயங்களே
ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏🙏🙏
You can follow @stpalraj.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.