இளைஞர்கள் தன்னோட Tshirtல அதிகமாக யூஸ் பண்ண பிரபலங்கள் போட்டோன்னு பார்த்தா ஒன்னு சே , இன்னொரு ஆள் பாப் மார்லி இங்க பல பேர பொறுத்த வரைக்கும் பாப் மார்லி ஒரு கஞ்சா அடிப்பார் , சிங்கர் ஆனா அதை தாண்டி ஒரு அவர் ஒரு இசை போராளினு சொல்லலாம்
அப்பா நார்வல் சிங்ளேர் மார்லி, ஒரு வெள்ளையினத்தவர். அம்மா செடெல்லா, ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர். தேயிலைத் தோட்டத்தின் மேலாளராகப் பணிபுரிந்த 60 வயதான நார்வல், 18 வயதான செடெல்லாவைத் திருமணம் செய்துகொண்டார். பாப் மார்லி சிறுவனாக இருந்தபோதே தன் தந்தையை இழந்தார். அதன் பிறகு தன்
ஏழ்மையின் துயரை மறக்க, இசையின் பக்கம் வந்தார். தன் பள்ளி நண்பன் லிவிங்ஸ்டனுடன் இணைந்து பள்ளியில் கித்தார் வாசிக்க ஆரம்பித்தார். அங்கிருந்துதான் இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான இசைக்கலைஞன் உருவாக ஆரம்பித்தான்.
தன்னைப்போலவே இசைப் பித்து பிடித்த தன் நண்பர்கள் பலருடன் இணைந்து `வெய்லர்ஸ்' (The Wailers) என்ற இசைக்குழுவைத் தொடங்கினார்.1960-களில் ஜட்ஜ்நாட், சிம்மர்ஸ் டவுன், சோல் ரெபல்ஸ், கேட்ச் எ ஃபயர், கஞ்சா கன், எக்ஸோடஸ், சர்வைவல் என வெளியான ஆல்பங்கள் அவருக்கு உலகெங்கும்
ரசிகர்களைப் பெற்றுத் தந்தன. கித்தாருடன் மேடையேறி எந்தவித ஆர்பாட்டமுமின்றி மார்லி பாடும் பாடலை, பல ரசிகர்களும் தங்களுக்கான கீதமாகக் கொண்டாடினர்.1962ஆம் ஆண்டு பாப் மார்லி ஆரம்பித்தார். இந்த ஆண்டு ‘Judge not’, ‘One cup of coffee’ போன்ற பாடல்களை வெளியிட்டனர். இந்தப் பாடல்கள் பெரிதாக
அனைவரது கவனத்தையும் ஈர்க்கவில்லை. இருப்பினும், மார்லி தனது முயற்சியை கைவிடவில்லை. கடும் முயற்சியின் பலனாக மார்லி ரெகே என்ற இசை முறையை உலகுக்கு அறிமுகப்படுத்தினார். கிதாரின் சீரான தாள அமைப்பு ரெகே இசையின் முக்கிய அம்சமாகும்.
இந்த இசையில் விடுதலை போராட்டம், விடுதலை கொண்டாட்டம், வலி, ஒற்றுமை எல்லாம் இருந்தது.1966ஆம் ஆண்டு பெப்ரவரி 10ஆம் திகதி பாடகியான ரீட்டா எண்டர்சனை மார்லி திருமணம் செய்துகொண்டார். ரீட்டா மூலம் ரஸ்தபாரி எனும் மதம் மார்லிக்கு அறிமுகமானது. பின்னர் அந்த மதத்தையே மார்லி தழுவினார்.
டொஸ் மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோரும் ரஸ்தபாரி மதத்தையே தழுவினர். எத்தியோப்பிய மன்னன் இந்த மதத்தின் கடவுளாக கருதப்படுகிறார். கிறிஸ்தவர்களுக்கு எதிராக ஆபிரிக்க பழங்குடிகள் தங்களது கலாசார பின்னணியுடன் உருவாக்கிக்கொண்ட பிரத்தியேக கிறிஸ்தவ மதம் ரஸ்தபாரி மதமாகும். ஜமைக்காவில் அதிகமாக
கஞ்சா விளைந்தது. அது ரஸ்தபாரி மதத்தில் புனிதப் பொருளாக பார்க்கப்பட்டது. மேலும் மூலிகையாகவும், தியான நிலைக்கு உகந்ததாகவும் கருதப்பட்டது. மார்லி மாமிசம் உண்பதை தவிர்த்து சைவ உணவுகளை உண்ணத் தொடங்கினார். மேலும், இந்த மதத்தைப் பின்பற்றுவோரின் தலைமுடி சிக்கு பிடித்தது போல் இருக்கும்.
இந்த இரண்டையும் பின்பற்றினார் மார்லி. பின்னர் அவரது இந்த சிகை அலங்காரம் உலகப் புகழ் பெற்றது.1975ஆம் ஆண்டு வெய்லர்ஸ் குழுவிலிருந்து மூவர் வெளியேறினர். மார்லியின் மனைவி ரீட்டா உட்பட மார்ஷியா, மோவாட் ஆகிய மூன்று பேரும் பாடகிகளாக சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.
பிறகு பாப் மார்லியும் வெய்லர்ஸூம் (Bob Marly & the Wailers) என குழுவின் பெயர் மாற்றப்பட்டது. இந்தக் குழு ரெகே இசையை உலகம் பூராகவும் கொண்டுசேர்க்க கடுமையாக முயற்சி செய்தது. இதன் பலனாக ‘No Woman No Cry’ என்ற பாடல் வெளியாகி மிகவும் பிரபலமானது.
உலகம் முழுவதும் கண்ணீர் சிந்தும் கோடிக்கணக்கான பெண்களுக்காக அவர் இந்த பாடலை இயற்றினார்.மார்லி தன்னை ஆபிரிக்க வம்சாவளிசைச் சேர்ந்த கருப்பினத்தவன் என்று அறிமுகம் செய்துகொள்ள – அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பினார்.
வெள்ளையர்களால் அடிமைத்தனமாக கருப்பினத்தவர்கள் அடிமைப்படுத்தப்படுகின்றமையைக் கண்ணுற்றதனாலேயே மார்லி இந்த முடிவுக்கு வந்தார்.

“எனக்கு ஒரே ஒரு வேண்டுதல் இருக்கிறது. அந்த சந்தர்ப்பத்தைக் காண என் மனம் அலைபாய்கிறது. கருப்பு, வெள்ளை, சீனம் என்ற அனைத்து இன மக்களும் மனிதன்
என் அடிப்படையில் ஒன்று சேர்வதே எனது கனவாகும். எனது அப்பா வெள்ளையர். அம்மா கருப்பினத்தைச் சேர்ந்தவர். நான் இவ்விரு இனத்தையும் சேராதவர் என கூறுகிறார்கள். உண்மைதான். நான் எவரின் பக்கத்தையும் சார்ந்திருக்க விரும்பவில்லை. நான் கடவுளின் பக்கம் இருக்கிறேன். என்னை
இந்த உலகத்துக்கு அனுப்பிய கடவுளையே நான் சார்ந்திருக்கிறேன்” என்று கூறினார் ஒரு போராளியின் சிந்தனையுடன் கூடிய இவ்வாறான வரிகள் மார்லியின் பாடல்களில் வெளிப்பட்டதால் அவற்றைக் கேட்டு மக்கள் எழுச்சி பெறுவதைக் கண்டு அதிகார வர்க்கம் சற்று அதிர்ந்தது என்றுதான் கூறவேண்டும்.
புரட்சி ஏதும் ஏற்பட்டுவிடுமோ என அஞ்சியது. அதனால் அவரை கொல்ல அதிகாரவர்க்கம் முடிவுசெய்தது. 1976ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் இரவு கிங்க்ஸ்டன் தேசிய வீரர்கள் பூங்காவில் இசை நிகழ்ச்சிக்காக ஒத்திகையில் ஆயுததாரிகளால் மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சியிலிருந்து மார்லி தப்பியிருந்தார்.
மார்லியை பரிசோதித்த வைத்தியர் விரல் காயம் மூலம் புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் கால் ஒன்றை இழக்கவேண்டி ஏற்படலாம் என்றும் தெரிவித்திருக்கிறார். உடனே சத்திரசிகிச்சை ஒன்றை செய்துள்ளார். தன்னுள் வேறூன்ற ஆரம்பித்திருக்கும் நோயிலிருந்து
தனது கடவுள் காப்பாற்றுவார் என மார்லி நம்பியிருந்தார். மார்லி ஜமைக்காவில் நேரம் கிடைக்கும்போது தனது நண்பர்களுடன் கால்பந்து விளையாடுவதை பொழுதுபோக்காகக் கொண்டிருப்பார். அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில்தான் கால் விரலில் காயம் ஏற்பட்டிருக்கிறது.
ஜமைக்காவின் பிரதமரும் மக்கள் தேசியக் கட்சியைச் சேர்ந்தவருமான மைக்கல் மன்லே, பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் தலைவர் எட்வர்ட் சீகா ஆகியோரை மேடைக்கு அழைத்து கைகுலுக்க வைத்தார். அன்றைய தினம் ஜமைக்கா அரசியல் வரலாற்றில் முக்கிய ஒரு தினமாக இன்றும் கருதப்படுகிறது.
மார்லியின் இந்த முயற்சிக்காக 1980ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை அமைதிப் பரிசை வழங்கியது.

1981ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் திகதி பாப் மார்லி தனது 36ஆவது வயதில் அமெரிக்காவின் மியாமி நகரிலுள்ள வைத்தியசாலையொன்றில் மரணமடைந்தார்.
ஜமைக்கா மக்கள் மார்லியை ஒரு விடுதலைப் போராளியாகவே கருதினர். 1981ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் திகதி இறுதிக் கிரியை அரச மரியாதையுடன் நடத்தப்பட்டு மார்லியின் பிறந்த இடமான நைன் மைல் பகுதியில் உடல் புதைக்கப்பட்டது.
ஜமைக்கா பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உட்பட முப்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் இறுதி நாளில் மார்லிக்கு அஞ்சலி செலுத்தினர்.அவரது பிறந்த தினமான பெப்ரவரி 6ஆம் திகதி ஜமைக்காவில் தேசிய விடுமுறை தினமாக அரசால் 1990ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டது.
ஜமைக்காவின் நைன் மைல் பகுதியில் பாப் மார்லி வாழ்ந்துவந்த வீடு பின்னர் மார்லியின் அருங்காட்சியகமாக மாறியது

#BobMarley76
You can follow @Yuvantwits.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.