பெருமைக்கு சொல்லவில்லை. படிக்கும் போது வீட்டில் அவ்வளவு கஷ்டம். அப்பா வருமானம் இல்லை. அண்ணனின் வருமானம் மட்டும்தான். அரசு வேலை போயே ஆகணும்னு வெறி. டிகிரி படிக்க ஆரம்பிக்கும் போதே டிஎன்பிஎஸ்சி எழுத ஆரம்பிச்சாச்சு. பிஎஸ்சி முடிச்சதுமே பி.எட். 2012 டிஎன்பிஎஸ்சி குரூப் 4
குரூப் 2
குரூப் 2
டெட் மூணும் பாஸ். குரூப் 4 விஏஓ வேண்டாம்னுட்டு ஸ்கூல் ஜாய்ண் பண்ணி இரண்டாவது மாதம் க்ரூப் 2 அசிஸ்டண்ட். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம். நிறைய யோசனைக்கு பிறகு வேண்டாம்னுட்டாங்க வீட்ல. இப்ப வரை டீச்சரா கண்டின்யூ. படிக்கிறப்ப புக் படிக்கிறது மட்டும்தான் பொழுதுபோக்கு. வீட்ல
விகடன். லைப்ரரில அஞ்சு பேரா உட்கார்ந்து எக்ஸாம்க்கு ப்ரிபேர் பண்ணி நாலு பேர் பாஸ். ரெண்டு பேர் ரெவின்யூ. ஒரு ப்ரண்ட் PWD. எங்க சீனியர் LCF la அசிஸ்டண்ட். ஒரே வருசம் ஜாய்ண் பண்றோம். எனக்கு இன்ஸ்பிரேசன் அண்ணனும். எங்க அண்ணியோட தம்பியும். இரண்டு வயசு வித்தியாசம்.
2012ல நாகப்பட்டிணம் கலக்டர் ஆபீஸ். அப்புறம் ராம்நாட். இப்போ திருவாடனை தாலுகா ஆபீஸ். எலக்சன் டிடி. இரண்டு பேருக்கும்தான் இப்போ வீட்ல பேசி முடிச்சிருக்காங்க. ராம்நாட். மாமா வீட்ல விவசாயம்னாலும் அவர் படிச்சது வேலைக்கு போனதுலாம் ஒரே எய்ம் வச்சுதான். ஏன் சொல்றேன்னா படிக்கறப்பவே நல்ல
வழிகாட்டல் இருந்தா படிக்கிறப்ப தெளிவான குறிக்கோள் இருந்தால் வேலை கிடைக்கிறது பெரிய விஷயம் இல்லங்கறதுதான். என்னை விட அவருக்கு வீட்ல விவசாயம் பார்க்கதான் விருப்பம். இவர்தான் கவர்மெண்ட் வேலைக்கு போயே ஆகணும்னு வெறியா இருந்தார். இது நான் பார்த்த வரை. இப்ப எங்க ஸ்கூல்ல என்கூட வேலை
பார்க்கிற எட்டு பேர்ல 3 பேர் 2014. ஒருத்தங்க 2017 அப்பாய்ண்மெண்ட். வயசு எல்லோருக்குமே 30க்குள்ளதான். என்னை தவிர எல்லோரும் பி.சி. நாங்க எம்பிசி. இங்க வேலை கிடைக்காதது கல்யாணம் ஆகாததுனு நிறைய பேர் கஷ்டப்படுறதா சொல்லும்போது பெருசா பாதிக்க மாட்டேங்குது. காரணம் படிக்கிறப்பவே வேலைக்கு
செலக்ட் ஆனது. எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்து விடுவதில்லை.அதுக்கு பல்வேறு காரணிகள் இருக்கலாம்.ஆனா படிக்கறப்ப சில தியாகங்களை பண்ணியது சில விஷயங்களில் காம்ப்ரமைஸ் பண்ணிக்காமல் திடமாக இருந்தது.தடுமாறாமல் இருந்தது.இப்போவும் தாலுகா ஆபிஸில் போஸ்ட் ஆபீஸில் பேங்கில் சிறுவயது பசங்களையும்
பொண்ணுகளையும் பார்க்கறப்ப என் கருத்து சரின்னுதான் படுது. உரிய காலத்தில் சரியான முயற்சியை உறுதியாக எடுத்தால் வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக ஜெயிக்கலாம் என்பதே. இப்போ எங்க ஸ்கூலுக்கு வர்ற போஸ்ட் உமன் வயது 24. SSSLC மார்க் 491. படிச்ச இன்ஜினியரிங் படிப்பு வேலை தரல. SSLC வச்சு வேலை
எனவே..