#கூர்க் பயணம்
கிறிஸ்துமஸ் விடுமுறையொட்டி கூர்குக்கு சுற்றுலா போகலாமானு நண்பன் ஒருத்தன் திடீர்னு கேட்டான். நாமளும் வீட்டுக்குள்ளையே பொட்டியைத் தட்டிக்கிட்டு இருக்கோமே, வெளிய கொஞ்சம் சுத்திப்பார்த்துட்டு வரலாம்னு சரினு சொல்லிட்டேன். நண்பன், நண்பனோட தம்பி, நான்-மொத்தம் 3 குடும்பம்.

நண்பனோட தம்பி மட்டும் ஊர்ல இருந்து வரணும்ங்கிறனால, நாங்க முன்னாடியே கிளம்பிடலாம்னு மைசூருக்கும் சேர்த்து திட்டத்தப்போட்டோம்.
எல்லாருமே மைசூர் இதுக்கு முன்னாடி போயிருக்கனால, எதெல்லாம் பார்க்கணும்னு பெருசா எதுவும் திட்டமிடலை. முதல் நாள் கிளம்பி, பிருந்தாவன் போயிட்டு அப்படியே ரூம்
எல்லாருமே மைசூர் இதுக்கு முன்னாடி போயிருக்கனால, எதெல்லாம் பார்க்கணும்னு பெருசா எதுவும் திட்டமிடலை. முதல் நாள் கிளம்பி, பிருந்தாவன் போயிட்டு அப்படியே ரூம்
எடுத்து தங்கிடலாம், மறுநாள் அவனோட தம்பி வந்ததுக்கப்புறம் கிளம்பி கூர்க் போகலாம்ன்றது தான் திட்டம்.
ஆரம்பமே அமர்க்களமான இருந்துச்சு. மைசூர் போயி சேரவே ராத்திரி 10 ஆகிருச்சு. நமக்கு ஒரு பிரச்சைனையோட எப்போ முடிஞ்சுருக்கு? அடுத்தது, புக் பண்ணின ரூம்க்கு போய் கேட்டா,
ஆரம்பமே அமர்க்களமான இருந்துச்சு. மைசூர் போயி சேரவே ராத்திரி 10 ஆகிருச்சு. நமக்கு ஒரு பிரச்சைனையோட எப்போ முடிஞ்சுருக்கு? அடுத்தது, புக் பண்ணின ரூம்க்கு போய் கேட்டா,
புக்கிங்.com ல இருந்து எதுவும் வரல. எங்களுக்கு அவுங்களோட கொஞ்சம் வாய்க்காதகராறு னு சொல்லுரானுங்க. அப்புறம் சரிடா என்ன பண்ணணு கேட்ட, அதே மாதிரி வேற ரூம் இருக்கு, கொஞ்சம் விலை கூடனு சொன்னான். பரவால்லன்னு சரினு சொல்லியாச்சு.
காலைல ஹோட்டல்ல, பக்கத்தில என்ன பார்க்கலாம்னு கேட்டதுக்கு
காலைல ஹோட்டல்ல, பக்கத்தில என்ன பார்க்கலாம்னு கேட்டதுக்கு
பால்ஸ் இருக்குனு சொன்னானுங்க. இருக்கிற இடத்தில இருந்து கொஞ்ச தூரம் தான் சரி போயிடு வருவோம்னு போனோம். பேரு - பல்முறி பால்ஸ். கேட்ட உடனே என்னமோ ஒரு 20,30 அடி உயரத்துல இருந்து தண்ணி விழுங்கும் நெனச்சீங்கன்னா, ஒண்ணும் சொல்லுறதுக்கில்ல. கீழ இருக்கிற படம் தான் அந்த இடம்.
சும்மா ஆத்துல தண்ணி ஓடுற மாதிரி இருக்கும். என்ன சின்ன பிரச்சனைனா, தண்ணிக்குள்ள கிடக்குற கல்லு. சின்ன குழந்தைங்க கண்டிப்பா விரும்புவாங்க. நாங்க வெள்ளனையே போயிட்டானால, கடைகள் எதுவும் திறக்கலை. இங்க மீன் கிடைக்கும்னு கூகிள் ரிவியுல போட்டிருந்தான். எதிர்பாராம போய் நல்லா அமைஞ்ச இடம்.
தம்பி ஊர்ல இருந்து வந்துட்டான். அவங்களும் குளிச்சி கிளம்பி ரூமை காலி பண்ணியாச்சு. காலைல யாருமே சாப்பிடல. அதனால எங்க சாப்பிடலாம்னு கேட்டப்போ, நான் சொன்ன இடம் ஹோட்டல் ஹனுமந்து. இந்த இடத்தை எனக்கு சொன்னதே சகோ @Karthicktamil86 தான். ஊருக்கு போற கடைசி நிமிஷத்துல தான் மைசூர்ல சாப்பிடுற
இடங்களை பத்தி அவர்கிட்ட கேட்டேன். போற வழில எங்க ராத்திரி சாப்பாடு, அப்புறம் காலை சாப்பாடு, மதிய சாப்பாடு. கூடவே சாயங்காலம் வடை, காபி குடிக்குறதுக்கூட இடம் சொன்னாரு. எப்போனாலும் கூப்பிடுங்கனு வேற சொன்னாரு. எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். அவருக்காகத்தான் இந்த போஸ்டே.
ஆனால் அவரு சொன்னதில நாங்க போனது இந்த ஹோட்டலுக்கு மட்டும் தான். 12:30 க்கே போயிட்டோம். அங்க ஏற்கனவே சாப்பிட ஆரம்பிச்சுட்டானுங்க. சகோ சொன்ன முக்கியமா அயிட்டம் மட்டன் புலாவ். ஆவி பறக்க தாமரை இலைல கொண்டு வந்து வச்சான். சாப்பிட ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்திலேயே எனக்கு சந்தேகம் வந்துச்சு.
இது ஆடா இல்ல கோழியானு. கறி ஒவ்வொண்ணும் அவ்வளவு மிருதுவா இருந்துச்சு. கூடவே கோழி பிரை. அரை பிளேட் புலாவ்வே 2 பேர் சாப்பிடலாம் போல. பக்கத்துக்கு டேபிள்ள ரெண்டு பேர் full பிளேட் வாங்கிட்டு ஒருத்தனை ஒருத்தன் திருதிருனு பார்த்துக்கிட்டு இருந்தானுங்க. ஒன்னு வாங்கினா,
கண்டிப்பா ரெண்டு பேர் சாப்பிடலாம். சாப்பாடு அவ்வளவு அருமையா இருந்துச்சு. அடுத்து கூர்க். குடகு மாவட்டத்தில் முக்கியமா மடிகேரி, குஷால்நகர். இதில முக்கியமான சுற்றுலா இடங்கள் மடிக்கேரிய சுத்தித்தான் இருக்குனு நினைக்குறேன். மடிக்கேரி போன உடனே முதல் இடம் ராஜா சீட். ஒரு வியூ பாயிண்ட்.
அப்புறம் குழந்தைங்க விளையாட பூங்கா மாதிரி இடம். அவ்வளவு தான். முடிஞ்சு பிடிச்சிருந்த காட்டேஜுக்குப் போனோம்.
அந்த இடம் காட்டுக்குள்ள இருந்தா மாதிரி இருந்துச்சு. விராஜ்பெட்ன்ற ஊருக்கு போற வழில ஒரு பாதைல இருந்துச்சு. விராஜ்பெட் போற மெய்ன் ரோடு ரொம்ப ரொம்ப மோசம்.முழுசும் மண்ணு தான்.
அந்த இடம் காட்டுக்குள்ள இருந்தா மாதிரி இருந்துச்சு. விராஜ்பெட்ன்ற ஊருக்கு போற வழில ஒரு பாதைல இருந்துச்சு. விராஜ்பெட் போற மெய்ன் ரோடு ரொம்ப ரொம்ப மோசம்.முழுசும் மண்ணு தான்.
மேடும் பள்ளமுமா வேற இருக்கும் பாதி தூரத்துக்கு. Form ஹவுஸ்ன்னு சொல்லலாம். ஒரு முழு 2BHK வீடு. நல்லா பெருசா இருந்துச்சு. சாப்பாடு சொன்னோம்னா, வீட்டில இருந்து செஞ்சு வந்து கொடுப்போம் அதுக்கு தனி காசுன்னு முன்னாடியே சொல்லிருந்தாங்க. நாங்களும் சப்பாத்தி, புரோட்டா சொல்லிருந்தோம்.
ராத்திரி கொண்டு வந்து கொடுத்தாரு. வந்த அலுப்புல நல்லா தூங்கியாச்சு. இந்த வீட்டில என்ன ஒரு முக்கியமான விஷயம்னா, எந்த நெட்வொர்க்கும் வராது. ஏர்டெல் மட்டும் ஏதாவது ஓரத்திலே வரும். ஜியோ வேணும்னா, எங்கேயாவது மரத்து மேல தான் ஏறணும். அந்த ஏரியா முழுக்கவே இப்படித்தான்.
இதுல ஹைலைட்டு என்னன்னா, அவருக்கு காசு கொடுக்கக்கூட நெட் இல்ல.
ரெண்டாவது நாள், தலக்காவேரி மற்றும் abbey நீர்வீழ்ச்சி. இந்த ரெண்டு இடத்துக்கே நாள் முடிஞ்சது. ஏன்னா தலைக்காவேரி கொஞ்சம் தூரம் ஊருக்குள்ள இருந்து. தலைக்காவேரில கோவிலுக்கு மட்டும் தான் போனோம். அடுத்து நேரா பால்ஸ் தான்.

அடுத்து நேரா பால்ஸ் தான். இதை நீங்க மேல பக்கவாட்டில் இருந்து பார்க்க மட்டும் தான் முடியும். போட்டோ எடுத்துக்கலாம் அவ்வளவு தான். போற வழியெல்லாம் காப்பித்தோட்டம் தான்.
திரும்ப அறைக்கு போறதுக்குள்ள எல்லோருக்குமே களைப்பு சூழ துவங்கியது. நான் மட்டும் கொஞ்சம் ஆர்வத்துடன் ஆவலாக இருந்தேன
திரும்ப அறைக்கு போறதுக்குள்ள எல்லோருக்குமே களைப்பு சூழ துவங்கியது. நான் மட்டும் கொஞ்சம் ஆர்வத்துடன் ஆவலாக இருந்தேன
அதற்கு காரணம் - கேம்ப் பயர் , தந்தூரி. வேண்டுமென்றால் கேம்ப் பயர் ஏற்பாடு செய்வதாக உரிமையாளர் கூறியிருந்தமையால், முதல் ஆளாக ஏற்பாடு செய்யச்சொல்லியாயிற்று. தந்தூரி தான் சிறிது சொதப்பி விட்டது. சின்ன இரும்பு அடுப்பில், கரியைக்கொட்டி, கறியை மாட்டி விட்டுவிட்டு,
நீங்களே பார்த்துக்கோங்கன்னு சொல்லிட்டுப்போய்ட்டார்.
நிஜமாகவே அந்த இரவு நல் இரவாகவே முடிந்தது. குளிர், தீ, ஆடல்/பாடல், தந்தூரி, காரசாரமான பிரியாணி. இவை முடிந்தவுடன் சீட்டு வேறு. தூங்கச்செல்ல 2 மணி ஆகிவிட்டது. காலை 7 மணிக்கெல்லாம், அறையை காலிசெய்து கிளம்பவேண்டும் என்று திட்டம்.

ஆனால், காலையில் மின்சாரம் இல்லாததால், குளிக்க முடியாமல் 9 மணிக்கே கிளம்ப முடிந்தது. காலை சாப்பாடு முடித்து சென்ற இடம் - துபரே யானைகள் முகாம். இது இருப்பது குஷால்நகரில். முதல் நாள் பார்க்க வேண்டும் என்று போடப்பட்ட திட்டம் இப்பொழுது கடைசி நாளுக்கு மாறிவிட்டது.
வழக்கம் போல தாமதமா கிளம்பினதால, அங்க போகவும் நேரமாகிடிச்சு. நல்ல கூட்டம். காலைல 11:30 வரைக்கும் தான் அனுமதி. இது எப்படின்னா ஒரு போட்டு வச்சு ஆத்துக்கு அந்த பக்கம் யானைகள் இருக்கிற இடத்தில கொண்டு போய் விடுவாங்க. அப்புறம் யானைகளை பார்த்துட்டு வரலாம்.
ஆனால் நிக்கும்போதே அங்க யானைகளை குளிக்க கூட்டிக்கிட்டு வந்ததை பார்த்தாச்சு. போட்டு வேணாம்னா, கொஞ்சம் தள்ளி தண்ணி கம்மியா போற இடத்தில நடந்துகூட போகலாம். வரிசைல நின்னு காத்திருந்து, கடைசியா நாங்க போறப்போ, எவ்வளவோ தான் நேரம் முடிஞ்சுடுஞ்சுனு சொல்லி அனுப்பிட்டானுங்க.
பக்கத்திலேயே தனியார் படகு வேற விடுறாங்க. இதுக்குப் பேரு river rafting. தண்ணிக்குள்ள ஒரு ரப்பார் படகுல கூட்டிக்கிட்டு 1kimi போயிட்டு வர்ற கட்டணம் தலைக்கு ரூ.200. சரினு போயாச்சு. அங்க போனா, கொஞ்ச தூரத்தில சில பேர் இதே மாதிரி படகுல போயி, இறங்கி குளிச்சிக்கிட்டு இருந்தாங்க.
அங்க போகலாமுன்னு போட்டு ஒட்டுகிறவர்கிட்ட கேட்டா, இன்னும் கொஞ்ச தூரம் கூட்டிக்கிட்டு போய் அங்க தண்ணில இறக்கி விட அரைமணி நேரத்துக்கு 100ரூ தலைக்கு. அதுவும் கொடுக்குறோம்னு சொல்லி இறங்கி 1மணி நேரம் நல்ல ஆட்டம். ஆனால் அங்க அங்க தண்ணி கொஞ்சம் வேகமாகத்தான் வருது.
வீட்டம்மாவை கொஞ்ச தூரம் இழுத்துக்கிட்டு போனதில எல்லாரும் கொஞ்சம் ஜெர்க் ஆகிட்டாங்க. ஆனால் இந்த பாவப்பட்ட ஏழைக்கு நல்லதோ கெட்டதோ, வீட்டம்மா பத்திரமாக காப்பற்றப்பட்டார்.
வந்து என்ன பண்ணீங்க நீங்க என்னை காப்பாத்த வராமனு கேட்டாங்க, நானே தண்ணில நிக்க முடியாம, எவனும் வந்து என்ன புடிச்சுப்பானான்னு உயிரை கைல பிடிச்சுக்கிட்டு நின்னுக்கிட்டு இருக்கேனு சொன்னதுக்கப்புறம் தான் சமாதானம் ஆனாங்க. இத்தனைக்கும் தண்ணி நெஞ்சளவுக்குத்தான் இருக்கும்.
கூடுதல் தகவல் கொடுத்தாரு படகு ஓட்டுனவரு. இப்போதான் இவ்வளவு கம்மியா தண்ணி இருக்கு, மழைக்காலங்கள்ல இன்னும் 3 மடங்கு தண்ணி இருக்கும்னு. வரிசைல நின்ன இடங்கள்லாம் தண்ணிக்குள்ள போய்டும் அர்த்தம்.
வந்ததுக்கு பின்னாடி தான் இன்னொரு யோசனை வந்தது. மக்கள் நடந்து போற அளவு தண்ணி
வந்ததுக்கு பின்னாடி தான் இன்னொரு யோசனை வந்தது. மக்கள் நடந்து போற அளவு தண்ணி
உள்ள இடத்திலேயே கொஞ்சம் உக்காந்து குழந்தைங்களை வச்சி குளிச்சிக்கிட்டு இருந்தாங்க. 1400ரூ செலவு பண்ணினத்துக்கு பதிலா இங்கேயே குளிச்சிருக்கலாமேன்னு தோணுச்சு. கண் கேட்டபின் சூரிய நமஸ்காரம். இந்த படத்தில இருக்கிறதா விட அதிகமாத்தான் தண்ணி இருந்துச்சு.
அங்க பொண்ணுங்களுக்கு உடை மாத்த கட்டண அறை இருந்தது. எல்லாம் முடிஞ்சு கிளம்பி மத்திய சாப்பாட்டுக்கு நண்பன் பரிந்துரைத்த ஒரு ஓட்டலுக்கு போனோம். சாப்பாடு நல்லாவே இருந்தது. கண்டிப்பா சாப்பிட வேண்டிய ஐட்டம் - கூர்க் சிக்கன். செம்ம டேஸ்டு. என்னன்ன order பண்ணிருக்கீங்கனு ஒருக்கா சர்வர்
கிட்ட confirm பண்ணிக்கோங்க. பக்கத்துக்கு டேபிள்ள என்ன மீன் சாப்பிடுறாங்கனு கேட்டதுக்கு, அதையே கொண்டு வந்து நீங்கதானே கேட்டீங்கனு சொல்லிட்டான். Pomfret (வாவல் மீன்) விலை 900ரூ. அப்புறம் கொஞ்சம் சண்டை போட்டு கேன்சல் பண்ணினோம். அங்கேயே மிட்டாய்கள் விக்குறான்.
சாப்பிட்டு அடுத்தது போனது நிசர்கதாமா. குழந்தைகளுக்கான இடம். அங்க கொஞ்ச நேரம் விளையாண்டிட்டு கிளம்பி வெளிய வந்தா முழுசும் கடைகள் தான். கூட வந்த பழனிகண்ணுகளுக்கெல்லாம் கேக்கவா வேணும். ஷாப்பிங் ஸ்ட்டார்டு. அப்புறம் ஊரு வந்து சேர்ந்தோம்.