ஒரு ரயில்வே ஊழியரின் மகள். எளிய சுகுடும்ப சூழலில் வளர்ந்தவர். தமிழகத்தில் பிறந்து கல்லூரிப்படிப்பை முடித்தவர். JNU வில் படித்தாலும் அங்கு உள்ள அழுக்குகள் தன மேல் படாமல் வெளிவந்தவர். தெலுங்கரை காதல் திருமணம் செய்து கொண்டவர். வெளிநாடுகளில் பணி புரிந்து பரந்த அனுபவம் பெற்றவர்.
மாமியாரும் கணவரும் காங்கிரஸ் எம் எல் ஏ க்கள். ஆனால் இவர் குடும்ப அரசியல் மூலம் தன்னை முன்னிலைப் படுத்திக்கொள்ளவில்லை.
ஒரு நிகழ்ச்சியில் இவரது ஆளுமையை உற்று நோக்கிய சுஷ்மா ஸ்வராஜ், இது வைரம், கூழாங்கல் அல்ல என்று உணர்ந்து பா ஜ க வில் இணைத்தார். ஊடகப்பிரிவில் அருண் ஜெயிட்லியால்
பட்டை தீட்டப்பட்டவர். மோடி என்ற தேர்ந்த பொற்கொல்லனால் மத்திய அமைச்சரவை என்ற ஆபரணத்தில் பாதிக்கப்பட்ட கோஹினூர் வைரமாக ஜொலிக்கிறார் நிர்மலா சீதாராமன்.
ஜி எஸ் டி அறிகுகமான பொது அதை தொழில் கூட்டமைப்புக்குள், வணிகக் குழுக்களிடம் விளக்கி அவர்களின் கருத்துக்களை உள் வாங்கி அவற்றை
ஜி எஸ் டி கவுன்சிலில் விளக்கி தேவையான மாற்றங்களுடன் குறைகள் களையப்பட்டு வர்த்தகர்கள் ஆதரவுடன் ஜி எஸ் டி மேம்படுத்தப்பட காரணமானவர்களுள் இவரும் ஒருவர்.
பிரதமர், உள்துறை அமைச்சர், வெளியுறவுத்துறை அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், நிதி அமைச்சர் ஆகியோர் அடங்கிய
Cabinet Committee On Security என்ற உயர் அமைப்பில் உள்ள இரண்டு இலாக்காக்களை அலங்கரித்த குடும்ப ராசியில் மூலம் வராத ஒரே பெண் என்ற பெருமைக்குரியவர்.
அவரை மடக்கி மடக்கி கேள்வி கேட்பதாக நினைத்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் லாவகமாக பதில் அளித்த பிறகு நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்
என்று பத்திரிக்கையாளரைக் கேட்டால் அசடு வழிவார்கள். இப்படி அடிபட்ட நரிகள் அவரை திமிர் பிடித்தவர் என்று காட்ட முயல்கின்றன. ஊழலற்ற, நேர்மையான, எடுத்துக்கொள்ளும் விஷயத்தில் புலமை உள்ள மனிதர்களின் சாதாரண நேரடி பதில்கள் கூட திமிர் பேச்சாகத்தான் தோன்றும். சாதாரண லாரி டிரைவரின் மகன்
தேஜஸ்வி சூர்யா பேசுவது கூட திமிராகத்தான் தோன்றும். நேர்மையான திறமைசாலிகள் நெஞ்சை நிமிர்த்தி எதையும் எதிர்கொள்கின்றனர். இவரும் விதி விலக்கல்ல.
நிதி அமைச்சராக அமைதியாக பணி ஆற்றுகிறார். கொரோனா முடக்கத்திற்குப் பின் இந்திய பொருளாதாரம் சட்டென எழுந்து நிற்பதை உலகமே வியக்கிறது.
You can follow @YeskayOfficial.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.