மீசை
ஐந்து வருடம் முன்ன மச்சினன் ஊர்ல கோயில் கொடை சமயம் , பங்காளி, மச்சினங்கனு 6 பேர் plus ஒரு மீசை மாமா ( வட்டத்துல அவரு கொஞ்சம் வயசு கூட) , cheers ன என்னனு அர்த்தம் தெரியாம சொல்லி சரக்கடிச்சு பேசிட்டு இருந்த ஒரு மாலை. நான் வறுகடலைக்கும் பேச்சுக்காக மட்டுமே
ஐந்து வருடம் முன்ன மச்சினன் ஊர்ல கோயில் கொடை சமயம் , பங்காளி, மச்சினங்கனு 6 பேர் plus ஒரு மீசை மாமா ( வட்டத்துல அவரு கொஞ்சம் வயசு கூட) , cheers ன என்னனு அர்த்தம் தெரியாம சொல்லி சரக்கடிச்சு பேசிட்டு இருந்த ஒரு மாலை. நான் வறுகடலைக்கும் பேச்சுக்காக மட்டுமே

(சரக்கு லோக்கல் என்பதும் பதிவு செய்யனும்) கூட இருப்பேன்.பேச்சு எங்க ஊர்ல முடிஞ்சு போன சித்திரை திருவிழா தகராறு சம்மந்தமா , ரெண்டு வெவ்வேறு சாதிக்கார பயலுகளுக்கு (ஒரே தெரு)நடுவ நடந்த சண்ட முத்தி குத்துபட்டவன் ,குத்துனவன் ரெண்டு பேர் சாதிக்காரங்களுக்கும் மேற்கொண்டு
கலவரம் வராம தடுக்க திருவிழா கொண்டாட்டங்கள தடை செஞ்சிட்டாங்க . மச்சினன் ஊர்ல அத போலத் தகராறுகள் இல்லாம சுமூகமா கொடை(திருவிழா) நடக்கும் காரணம் சமூக நீதி ,சமத்துவம் முற்போக்கு , பண்பு இதெல்லாம் ஒரு வெங்காயமும் இல்ல ஊர் முழுக்க ஒரு சாதிக்காரனீ மட்டுமே இருந்து திருவிழா
நடத்துனா அப்படித்தான்.பிரச்சினைகள பேசும்போது பதின்ம வயது தம்பி ஒருத்தன் ( சித்தப்பா பையன் )சரியா படிப்பு ஏறாம போலிஸ் வேலைக்கு போக பத்தாவது முடிக்க வேண்டி பரிட்சைய ( படிச்சு தான் எழுதனும்ங்கற அந்த மனத்தடைகள் எல்லாம் தகர்த்தெறிந்தவன்
)மட்டும் சின்ஸியரா எழுதிட்டுருப்பான் .

போலிஸ் ஊர்ப்பெரியவங்கள(இரு சமுதாயமும்) வச்சு மத்தியஸ்தம் பண்ணுன ஊர்க்கூட்டத்துல இவன் ரொம்ப துள்ளி மத்தவன அடிக்கப் போயி , சித்தி அவன இழுத்துட்டு போச்சுனு சரக்கடிச்சுட்டுருந்த மீசை மாமா பெருமையா சிரிச்சு சொல்லிட்ருக்காரு.என்ன மாமா சின்ன பயலுங்கள எதுக்கு
ஊர்க்கூட்டங்கள்ள பேச விடுறிங்க சண்டல தான் முடியும்னேன்.மருமகனே வீரம் விளைஞ்ச மண்ணு ( பூசணி விளையலங்கிற என் அங்கலாய்ப்பு போன த்ரெட்ல இருக்கும்) நம்ம ஊரு ,நீங்க என்ன இப்படி சொல்றீய, அத்தான் உங்கள வேற வேற ஊர்களில் படிக்க வைக்கப்போய் இனத்தான் கூட சேராம வளந்து நிக்கிறீக
சாதிக்கான பரம்பரை வீரம் நெஞ்சுல கை வச்சு ( அவரோட) எப்பயும் இருக்கணும் மருமகனென்னாரு .மேற்கொண்டு எதுவும் பேசுனா சுபாஷ் சந்திர போஸ இழுத்துட்டு வருவார்னு சரிதான் மாமான்னு சிரிச்சு தலையாட்டிட்டு கடலயில் கவனம் செலுத்துனேன்.இந்த முறை ஊர்ல பாத்தேன் அந்த வன்ம குடோன் மாமா சிமேண்ட் குடோன்
முன்னாடி நின்னாப்ல (டால்மியா சிமெண்ட் டீலர்சிப் எடுத்துருக்காரு )முன்னாடி கேபிள் ஆப்பரேட்டர்.அவரு சொன்ன வீரம் விளைஞ்ச மண்ணு படிப்ப தொடராம மங்களூர் கேஸ் கம்பெனில லுங்கியோட லாரி டிரைவரா இருக்குது. சிமெண்ட் குடோன்ல நின்னாலும் அவரு சட்டை வேட்டி மட்டும் தூசி இல்லாம பள பளன்னு வெள்ளையா
தான வச்சுருப்பாப்ல.இப்பவும் பக்கத்தில் கடைக்கு போகும்போது பாத்தா மருமகனே எப்ப வந்திங்க அம்பாசமுத்திரம் பக்கம் பொண்ணு இருக்கு அங்காகிட்ட துப்பு சொல்லவான்னாரு ,நீரு ஒரு வெண்ணையும் சொல்ல வேண்டாம் மயிராண்டி மாமா னு கோவமா மனசுக்குள்ளசொல்லி அது வாய் வழியா "மீசை சூப்பர் மாமா" னு
பண்பா வெளில வந்துச்சு ,தேவி படிக்கிறாளா, அத்த நல்லா இருக்கான்னுட்டு நடந்தேன் அதே மண்ணுல .
@Gayathr58287793 @AshmithaTenet @peru_vaikkala @priya_prabu @Karthicktamil86 @MohanaVenkatra2 அனுமதியின்றி tag பண்றதுக்கு
