ரஜினி ரசிகர்களைக் கேவலப்படுத்தி துக்ளக் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது. அவர்கள் அரசியல் நமக்குத் தெரிந்த ஒன்றுதான். என்றாலும் துக்ளக் விழாக்களில் தவறாமல் கலந்து கொள்ளும் ரஜினிக்கு அவர்களைப் புரிந்து கொள்ள இது ஒரு வாய்ப்பு.
எடுத்தவுடனே "நேர்மையாக வரி செலுத்தும்" என டாப் கியர்
எடுத்தவுடனே "நேர்மையாக வரி செலுத்தும்" என டாப் கியர்
போட்டுத் துவங்குவதிலேயே இதன் அபத்தத்தை ரஜினி உணர்ந்து கொண்டிருப்பார். ரஜினி மீதும், அவர் குடும்பத்தின் மீது பல்வேறு வரி ஏய்ப்பு வழக்குகள் நடந்து முடிந்ததையும், நடந்து கொண்டு வருவதையும் ரஜினி அறியமாட்டாரா என்ன? (வாடகை பாக்கி, வரி பாக்கி வழக்குகள் தனி. அவரே ட்வீட் போட்டிருக்காரே).
ஆனால், நான் அறிந்து ரஜினி ரசிகர்கள் மீது இதைப் போல எந்த வரி ஏய்ப்பு வழக்குகளும் இல்லை. அண்மைக் காலங்களில் பாஜகவில் இணைபவர்கள் போல ஆள் கடத்தல், கூலிப்படை கொலைகள், போதை மருந்து கடத்தல் வழக்குகள் எல்லாம் அவர்கள் மீது இல்லை.
எனக்குத் தெரிந்த ரஜினி ரசிகர்கள் முரட்டுக்காளை, போக்கிரி
எனக்குத் தெரிந்த ரஜினி ரசிகர்கள் முரட்டுக்காளை, போக்கிரி
ராஜா காலத்திய மனிதர்கள். அவர்கள் ஒவ்வொரு திரைப்பட வெளியீடுகளுக்கும் கொண்டாடிய கொண்டாட்டங்கள், செய்த செலவுகளை நான் அறிவேன். எங்க ஊர் ரஜினி மன்றத் தலைவர் டி.எம் சுப்ரமணியம் பூக்கடை நடத்தி வந்தார். ஒவ்வொரு பட ரிலீசுக்கும் தியேட்டரே பூக்களால் தோரணம் கட்டப்பட்டிருக்கும். ரஜினியின்
பிறந்த நாள் அன்று பேப்பர் விளம்பரங்கள், அன்னதானங்கள் என ஒவ்வொரு ஆண்டும் சக்திக்கு மீறி செலவிட்டதை ஊரே பார்த்தது. அவர் குடும்பத்திலேயே பலர் கேலி கூட செய்திருப்பார்கள். வேலூர் மாவட்டத்தில் சோளிங்கர் ரவி என்றொரு ரஜினி ரசிகர் மன்றத் தலைவர். நான் அவரைப் பார்த்ததில்லை. ஆனால் அவரோட
பெயர் அத்தனை பரிச்சயம். டிசம்பர் 10 அன்று அவர் ஏற்பாடு செய்யும் ரஜினி பிறந்தநாள் கொண்டாட்டங்களை வட மாவட்டங்கள் முழுவதும் அறியும். 90 களிலேயே லட்சங்களில் செலவு செய்த ரவி, பஸ் ஸ்டாண்டில் சின்ன வியாபாரம் செய்பவர் என கேள்விப்பட்டிருந்தேன். இதெல்லாம் ஒரு சில உதாரணங்கள்தான். தமிழகம்
முழுவதுமான ரஜினி மன்றத் தலைவர்களின் பின்னணி, உழைப்பு, ஈடுபாடு, செய்த செலவுகளை என்னை விட ரஜினி அதிகம் அறிவார். இவர்கள் யாரும் பின்னாளில் ரஜினி கட்சித் தொடங்குவார்! அதை வைத்து நாம் அமைச்சர்கள் ஆகலாம் என வந்தவர்கள் அல்ல! பின்னாளில் வந்து ஒட்டிக் கொண்ட துக்ளக் குரூப்களுக்கு
வேண்டுமானால் அதிகாரக் கனவு இருந்திருக்கலாம்! அவர்கள் அப்பாவிகள். அவர்கள் உழைப்பின் விளைவுதான் ரஜினிக்கு வந்து சேர்ந்த சூப்பர் ஸ்டார் பட்டம். அவர்களுக்கு அரசியல் ஆசையைத் தூண்டி விட்டது ரஜினியும், இந்த மேல்தட்டு ஊடக மாஃபியாக்களும்தான். இதையும் ரஜினியின் மனசாட்சி அறியும். எனவேதான்
தனது ரசிகர்கள் அவரவர் விருப்பம் போல எந்தக் கட்சிகளிலும் சேர்ந்து கொள்ளலாம் என அறிக்கையும் வெளியிட்டார். அதன் பிறகும், துக்ளக் மாமாக்களுக்கு வயிறு எரிச்சல் தாள முடியவில்லை என்றால், அவர்களை ரஜினியும், அவர் ரசிகர்களும் புரிந்து கொள்ள வேண்டும். இதே அந்த ரசிகர்கள் பாஜகவில் சென்று
சேர்ந்திருந்தால் இந்தக் கதறல் வந்திருக்குமா? அவர்கள் திமுக, அதிமுக போன்ற திராவிடக் கட்சிகளுக்கு செல்வதில்தான் இத்தனை எரிச்சல் என்பதை சொல்லத் தேவையில்லை. ஒரு மனிதன் தான் ஈட்டிய பொருளை, நேரத்தை, உழைப்பை ஒரு நடிகனுக்காக செலவிட்டப் பின்னரும், தன் விருப்பப்படி தான் எடுக்கும் .
முடிவுக்கு வேறொருவன் கதறி சாபம் விடுகிறான் என்றால், அந்த ரசிகன் நிலை பரிதாபம்தான். தனது ரசிகர்களை இழிவுபடுத்தி தனது நண்பர் குருமூர்த்தி ஆசிரியராக இருக்கும் துக்ளக் பத்திரிக்கையின் இந்த இழிச் செயலை ரஜினி கண்டிக்க வேண்டும். கண்டிப்பார் என எதிர்பார்க்கிறேன். மனசாட்சி இருந்தால்...