திருநெல்வேலி – தூத்துக்குடி மாவட்டங்களில் அமைந்துள்ள நவகைலாயங்களையும் மற்றும் நவதிருப்பதிகளையும் எதற்காக வழிபட வேண்டும் என்பதின் பின்னால் உள்ள எவருக்கும் தெரியாத ஜோதிட ரகசியம் தொடர்பான பதிவு:

🙏🇮🇳1
திருநெல்வேலி – தூத்துக்குடி மாவட்டங்களின் ஊடே பாய்ந்தோடும் தாமிர பரணி நதியின் கரைகளில் நவகைலாயம் என ஒன்பது சிவாலயங்கள் அமைந்துள்ளன.

இவை நவகிரக பரிகார ஸ்தலங்களாக அமைந்துள்ளது. இந்த நவகிரக பரிகார ஸ்தலங்கள் விபரம் கீழே தரப்பட்டுள்ளது.

🙏🇮🇳2
ஊர்பெயர் -- நவக்கிரகம்
பாபநாசம் – சூரியன்
சேரன் மகாதேவி – சந்திரன்
கோடக நல்லூர் – செவ்வாய்
குன்னத்தூர் – ராகு
முறப்ப நாடு – குரு
ஸ்ரீவைகுண்டம் – சனி
தென்திருப்பேரை – புதன்
ராஜாபதி – கேது
சேர்ந்தபூமங்கலம் –சுக்கிரன்

🙏🇮🇳3
நவகைலாயங்கள் உருவான வரலாறு:

பொதிகை மலையில் இருந்து தவம் செய்த அகத்திய முனிவருக்கு முதல் சீடராக உரோமச முனிவர் என்பவர் பணிவிடைகள் செய்து வாழ்ந்து வந்தார்.

அவருக்கு சிவபெருமானைக் கண்டு அருள்பெற்று முக்தி அடைய வேண்டுமென்று விருப்பம்.

🙏🇮🇳4
அவர் தவ வலிமை மிக்கவர். அவர் சிவபெருமானையே நினைந்து வழிபட்டு வருபவர்.

சிவபெருமான் இவர் எண்ணத்தை கண்டு முனிவரது பெருமையை உலகிற்கு வெளிக்கொண்டு வர அகத்தியர் மூலம் திருவுளம் கொள்கிறார்.

🙏🇮🇳5
நீயும் எம்பெருமானைக் கண்டு பேரின்பம் எய்தி முக்தி அடைய வேண்டுமென்று விரும்பினாய்.

தாமிரபரணி சங்கமிக்கும் இடத்தில் நீராடினால் நீ விரும்பியது கிடைக்கும். நீ தாமிரபரணி ஆற்றங்கரையோரமாகவே செல்ல வேண்டும் ,உன்னுடன் ஒன்பது மலர்களை தண்ணீரில் அனுப்புகிறேன். 🙏🇮🇳6
இம்மலர்கள் ஒவ்வொன்றும் எங்கு ஒதுங்கி நிற்கிறதோ அங்கு சங்கு மூலம் நீராடி சிவனை வழிபட வேண்டும். நீவிர் வழிபடுகின்ற சிவபெருமான் அருள்மிகு கைலாசநாதர் என்றும் அம்மை சிவகாமி என்றும் அழைக்கப்படுவர். 🙏🇮🇳7
பின்னர் தாமிரபரணி சங்கமிக்கும் இடத்தில் நீராடினால் உமது எண்ணம் ஈடேறும் என்று அகத்தியர் கூறி உரோமேசரை அனுப்புகிறார்.

🙏🇮🇳8
அகத்தியர் கூறியவாறு அந்த மலர்களை தொடர்ந்து சென்ற உரோமச முனிவரும் மலர்கள் ஒதுங்கிய இடங்களில் தனது குரு கூறியபடி சங்கு மூலம் நீராடி சிவபெருமானை நவ கிரகங்களாக நினைந்து வழிபட்டு கடைசியாக தாமிரபரணி சங்கமிக்கும் இடத்தில் நீராடி முக்தி அடைந்தார் என்று புராண வரலாறு கூறுகிறது.

🙏🇮🇳9
அப்படி அகத்தியரால் தாமிரபரணி ஆற்றில் விடப்பட்ட ஒன்பது இடங்களில் ஒதுங்கின.அந்த ஒன்பது இடங்களிலும் உரோமச மகரிஷி சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து ஒன்பது கோயில்களை கட்டி நவகிரஹப் ப்ரீதி ஸ்தலங்களாக ஆக்கினார்.

அந்த ஒன்பது கோயில்களே தற்சமயம் நவகைலாசங்கள் என அழைக்கப்படுகின்றன.

🙏🇮🇳10
அகத்தியர் தாமிரபரணியில் விட்ட ஒன்பது மலர்களில் கடைசி மலர் சேர்ந்த இடமே சேர்ந்த பூமங்கலம் என அழைக்கப்படுகிறது.

தாமிர பரணி நதி கடலில் கலக்குமிடத்திற்கு அருகே சேர்ந்தபூமங்கலம் அமைந்துள்ளது.

🙏🇮🇳11
நவ கைலாயங்களைப் பற்றிய ஜோதிட ரகசியம்

திருநெல்வேலி – தூத்துக்குடி மாவட்டங்களில் அமைந்துள்ள நவகைலாசங்களை சர்ப்ப ரூபம் என குறிப்பிடுகின்றனர்.

🙏🇮🇳12
வளைந்து நெளிந்து செல்லும் நதிக்கரையில் அமைந்துள்ள இத்திருகோயில்களை கற்பனைக்கோடுகளால் இணைத்துப்பார்த்தால் அது சர்ப்ப ரூபமாகவே காட்சியளிக்கிறது.

எனவே சர்ப்ப தோச நிவாரணத்திற்கு இந்த ஒன்பது கோயில்களையும் ஒரே நாளில் தரிசித்தால் பலன் கிடைக்கும்.

🙏🇮🇳13
மேலும் இந்த கோயில்கள் அமைந்துள்ள வரிசை முறையை கவனித்து பார்த்தால் ஒரு சூட்சும ரகசியம புலப்படுகிறது.

அதாவது கிரகங்களின் விம்சோத்தரி தசா வரிசை முறை எப்படி அமைந்துள்ளதோ, அதே வரிசைமுறையில் இந்த கோயில்கள் அமைந்துள்ளன.

🙏🇮🇳14
விம்சோத்தரி தசா வரிசை முறையில் கிரக வரிசை கேதுவில் தொடங்கி கேது – சுக்கிரன் – சூரியன் – சந்திரன் - செவ்வாய் – ராகு – குரு – சனி – புதன் என அமையும்.

🙏🇮🇳15
இந்த நவ கைலாயகோயில்கள் சூரியனில் தொடங்கி சூரியன் – சந்திரன் - செவ்வாய் – ராகு - குரு – சனி – புதன் - கேது – சுக்கிரன் என வரிசையாக அமைந்துள்ளன.

கும்பகோணத்தை சுற்றி உள்ள நவக்கிரக பரிகார ஸ்தலங்களாக ஒன்பது திருக்கோயில் அமைந்துள்ளன.

🙏🇮🇳16
அவைகளைப்பற்றிய விவரங்கள் கிட்டத்தட்ட எல்லா பஞ்சாங்கங்களிலும் கொடுத்திருக்கிறார்கள்.

கோட்சார கிரகங்களால் உண்டாகும் பாதிப்புகளிலிருந்து விடுபட மட்டும் இந்த திருக்கோயிகளில் பரிகாரங்கள் செய்யலாம்.

🙏🇮🇳17
தசா – புக்திகளால் உண்டாகும் பாதிப்புகளிலிருந்து விடுபட திருநெல்வேலி – தூத்துக்குடி மாவட்டங்களில் அமைந்துள்ள நவகைலாசங்களிலேயே பரிகாரம் செய்யவேண்டும். இந்த ரகசியம் பெரும்பாலானவர்களுக்கு தெரியாது.

🙏🇮🇳18
இதே போன்று தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டத்தை சுற்றி ஒன்பது பெருமாள் கோயில்கள் அமைந்துள்ளன.

இவை நவ திருப்பதிகள் என அழைக்கப்படுகின்றன. இங்கும் நவக்கிரக தோசத்திற்கு பரிகாரங்கள் செய்யப்படுகின்றன.

🙏🇮🇳19
ஸ்ரீவைகுண்டம் – சூரியன்
நத்தம் – சந்திரன்
திருக்கோளூர் – செவ்வாய்
திருப்புளியங்குடி – புதன்
திருக்குருகூர் – குரு
தென்திருப்பேரை – சுக்கிரன்
பெருங்குளம் – சனி
திருதொலைவில்லி மங்கலம் வடக்கு – ராகு
திருதொலைவில்லி மங்கலம் தெற்கு – கேது

🙏🇮🇳20
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள நவதிருப்பதிகளை கருட ரூபம் என குறிப்பிடுகின்றனர்.

அதாவது இந்த ஒன்பது திருப்பதிகளையும் கற்பனைக்கோடுகளால் இணைத்துப்பார்த்தால் கருட ரூபம் கிடைக்கிறது.

எனவேதான் இங்கு நடைபெறும் கருட சேவை விசேசமாக கருதப்படுகிறது.

🙏🇮🇳21
தன் தாய்க்காக அமிர்த கலசத்தை விண்ணுலகிலிருந்து தூக்கி வந்தவர் கருட பகவான். மேலும் இவர் சர்ப்பங்களின் எதிரி.

🙏🇮🇳22
எனவே ஜாதகத்தில் ராகு கேது எனப்படும் கிரகங்களால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து விடுபட நவதிருப்பதிகள் எனப்படும் இந்த ஒன்பது கோயில்களையும் ஒரே நாளில் தரிசித்தால் சர்ப்ப தோசம் நீங்கும்,தீராத வியாதிகள் அனைத்தும் தீரும் என்பதும் பெரும்பாலானவர்களுக்கு
தெரியாத ஜோதிட ரகசியமாகும்.

🙏🇮🇳23
இந்த அரிய ரகசியதகவல்களை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு உதவிய திரு.சித்தயோகி சிவதாசன் அவர்களுக்கு கோடானுகோடி நன்றி!

வாழ்க பாரதம் 🇮🇳🙏
வளர்க பாரதம் 🇮🇳🙏🇮🇳
You can follow @Raamraaj3.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.