#Business 2 - முதல் பாகத்தோட தொடர்ச்சி படிக்காதவங்க அதை படிச்சிட்டு இதை படிங்க. நான் முன்னாடி சொன்ன மாதிரி பிளான் பண்ணாம பிஸ்னஸ்ல எதுவுமே பண்ண முடியாது. சரி இப்போ நாம பிளான் பண்ணி கடையை தொறந்தாச்சு. ஆனா கஸ்டமர எப்படி வரவைக்கிறது. ஒரு தொழில்ல ரொம்ப முக்கியமான விஷயமே https://twitter.com/Karthicktamil86/status/1349917607130931200
1.Creating customers - கஸ்டமர்ஸ உருவாக்குறது தான் ஒரு தொழிலை நடக்கவும் வைக்கும் ஒடவும் வைக்கும். அதுக்கு நாம கிட்டத்தட்ட குட்டி கரணமே அடிக்கனும். தொழில் தெரிஞ்சவங்க அதுக்கான நேரத்துக்கு தகுந்தாப்ல எல்லாத்தையும் பண்ணுவாங்க‌ . அப்படி என்ன பண்ணுவாங்க.
a) Seasonal Products - ஒரு கதை சொல்றேன். எனக்கு தெரிஞ்சவரு எனக்கு விவரம் தெரிஞ்சதுல இருந்து ஸ்டேஷனரி அப்புறம் வளையல் கடை தான் வச்சிருக்காரு. அது ரொம்ப சின்ன கிராமம்.அது ரொம்ப பெரிய கடை எல்லாம் இல்ல ஒரு 12 அடிக்கு 12 அடி இருக்கும் அவ்வளவு தான்.2 வாரத்துக்கு ஒரு தடவை மதுரைக்கு போய்
சரக்கு எல்லாம் வாங்கிட்டு வருவாரு. ஆனா அவர் கடையில நான் உக்காரப்ப இதுவரை யாரு எந்த பொருள் கேட்டும் இல்லைன்னு சொன்னதுல ரேரா எப்பவாவது சொல்லுவாரு. நான் அது நிறைய தடவை பார்த்ததால ஒரு தடவை அவர்கிட்ட கேட்டுட்டேன். எப்படி மாமா இப்படி சின்ன கடையில எல்லா பொருளும் வச்சிருக்கேன்னு
அதுக்கு அவரு. சிம்பிளா ஒரு வார்த்தை தான் சொன்னாரு தொழில் நுணுக்கம். அது என்ன நுணுக்கம்னு கேட்டா எந்த சீசனுக்கு என்ன கேட்டு வருவாங்கன்னு நல்லா தெரியும். அதாவது பொங்கல்,திபாவளி, லவ்வர்ஸ் டே இந்த நேரத்தில தான் கார்ட் எல்லாம் கேட்டு வருவாங்க. அப்போ வீட்ல வச்சிருக்க ஸ்டாக்க இங்க
கொண்டு வருவாப்ல. அதேமாதிரி ஸ்கூல் ஒபன் பண்ற டைம்ல தான் நிறைய நோட் புக்ஸ் சேல் ஆகும். அதுனால அப்போ அந்த ஸ்டாக் அதிகமா வைப்பாரு. ஆனா அதுவே செருப்பு, வளையல் எல்லாம் டெய்லி வாங்குவாங்க‌. அதுனால அது எப்பவும் கடையில இருக்குற மாதிரி பார்த்துப்பேன். விஷேஷ நாள்ள கொஞ்சம் அதிகமா
வாங்குவாங்க அப்போ ஸ்டாக் இன்கிரிஸ் பண்ணுவேன். அப்போ ஒரு சின்ன 12க்கு 12 கடைக்கு அவர் பண்ற பிளான் எவ்வளவு பெருசு பாருங்க. அவர் கடைய பெருசாக்குன அவருக்கு கரண்ட் பில் கடை வாடகைக்கு நிறைய செலவு இருக்கு. அதுனால அதையும் பிளான் பண்ணி தான். பண்ணணும்.இப்போ இதுல இன்னொரு பாயின்ட் எடுக்கலாம்
B) Stock maintenance - Jk tyres factoryல நான் ஒர்க் பண்றப்ப எங்களுக்கு சொல்ற முதல் விஷயம் 100% sales Forecasting. எதுக்காக அதை கேக்குறாங்கன்னா. அவங்க அதுக்கு தகுந்தாப்ல தான் டயர் புரோடக்ஷன் பண்ணணும். ஒரு தடவை நாங்க ஃபேக்டரி சேல்ஸ் மீட்டிங்ல இருக்குறப்ப.
ஃபேக்டரி யூனியன் லீடர் கெஸ்ட்டா வந்திருந்தாப்ல. எல்லாரும் யாருடா இவன்னு பாக்குறப்ப. திடிர்னு எழுந்த அவன் நான் தான் ஃபேக்டரி யூனியன் லீடர். உங்களால தினமும் நாங்க MD கிட்ட இருந்து திட்டு வாங்குறோம்னு ஆரம்பிச்சான். அடேய் நீ யாருன்னே இப்போ தான்டா பாக்குறோம்னு முழிச்சா.
நீங்க ஒருத்தர் கூட எங்களுக்கு சரியான ரிப்போர்ட் கொடுத்து சப்போர்ட் பண்ணல. அதுனால இப்போ factory ஒட inventory increase ஆகிடுச்சு. உங்க ரிப்போர்ட் எதுவுமே சரியா இல்ல. ஒரு நாள் அந்த டயர் ஸ்டாக் இருந்தா அதோட விலைக்கு 8% வட்டி போட்டா MDக்கு எவ்வளவு நட்டம் தெரியுமா உங்களாளன்னா.
எங்களுக்குன்னா பக்குன்னு ஆகிடுச்சு இவன் என்னடா மார்வாடிய விட மோசமா நாள் வட்டி போடுறான்னு. Sir. This market is unpredictableன்னு ஏதோ சொல்லப்போக. அதுக்கு தானே படிச்ச உங்கள வேலைக்கு எடுத்திருக்காங்கன்னு அசிங்க படுத்திட்டான். ஆனா அதுல ஒரு உண்மை இருந்தது. ஒரு நாளைக்கு 8% வட்டி
போடாட்டியும். அங்க நாம இன்வெஸ்ட் பண்ண காசு தூங்கிட்டு இருக்கும். அது வித்தா தான் நமக்கு காசு. அப்போ அதை நாம எவ்வளவு கரைக்ட்டா மெயின்டெயின் பண்ணணும். கஸ்டமருக்கு தேவையான பொருள நாம ஸ்டாக் வைக்கனும் அதுவும் தேவையான அளவுள மட்டுமே. இப்போ கஸ்டமரும் நம்ம கூட இருப்பான். நம்ம காசையும்
நாம வேற பொருள்ள இன்வெஸ்ட் பண்ண முடியும்.

C) Introducing New product:
இது கொஞ்சம் டெக்னிக்கலான விஷயம். எல்லாரும் கொசுவ ஒழிக்க கொசு வத்தி மட்டும் வித்திட்டு இருந்தப்ப. அந்த கொசுவ அடிக்க பேட் introduce பண்ணாங்க பார்த்திங்களா அது மாதிரி. அந்த முக்குல வந்துருக்க புது கடையில
புதுசு புதுசா வச்சிருக்காங்க டி ன்னு சொல்ல வைச்சா அந்த ஏரியால உங்கள அடிச்சிக்க ஆள் இல்லைன்னு முடிவு பண்ணிடலாம். எங்க ஊர்ல கிஃப்ட் சாப்னா அது ஸ்டார் கிபட்ன்னு சொல்லுவாங்க. ஏன்னா 2000 தோட தொடக்க காலத்தில அவ்வளவு புது வெரைட்டி கிஃப்ட் எல்லாம் வச்சிருப்பாங்க. என் ஃபிரண்ட்ஸ் அவங்க
லவ்வருக்கு வாங்குறது நிறைய தடவை போயிருக்கேன். இல்ல உன் லவ்வர்னு கமென்ட்ல‌ சொல்றவன் ரத்தம் கக்கி சாவான். அந்த வெரைட்டிஸ் தான் சுத்தி இருக்குற எல்லா கிராமத்து ஆளுங்களையும் அங்க வந்து கிஃப்ட் வாங்க வச்சது. இல்லாட்டி 50கிமி தள்ளி மதுரை போய் தான் வாங்கனும். அந்த புதுமைய எப்பவும்
பிஸ்னஸ்ல வைங்க. அதை விட பெரிய மார்க்கெட்டிங் எதுவும் கஸ்டமர இழுத்துட்டு வராது.

D) Customer Relationship - எந்த ஒரு காரணத்துக்காகவும் கஸ்டமர்ட உங்க கோவத்த காட்டிடக்கூடாது. காலேஜ் படிக்கிறப்ப நான் தங்கி இருந்த ஊர்ல பஸ் ஸடான்ட் பக்கத்துல ஒரு கடை இருக்கும். சும்மா ஸ்நாக்ஸ் ஐட்டம்ஸ்
எல்லாம் வச்சி விப்பாங்க. எனக்கு அந்த கடை ஓனர் நல்ல பழக்கம். எவ்வளவு பழக்கம்னா கடை உள்ள உக்காந்தே தேன் மிட்டாய், முருக்கு எடுத்து சாப்பிட்டு அக்கெளன்ட் எழுதி வச்சிட்டு வந்துடுவேன். அன்னைக்கு அதே மாதிரி கடை உள்ள உக்காந்திருக்கப்ப. டெய்லி அவர் கடைக்கு வர ஆளு பஸ் வந்துடுச்சு
வேகமா எடுத்துக்கொடுன்னு கேக்க அப்போ அங்க அவருக்கு முன்னாடி 2 பேர் இருந்நதால யார் கேக்குறான்னு ஆள கவனிக்காம. கோபத்துல இருடா ஆளுங்க உனக்கு முன்னாடி இருக்காங்கள்ளன்னு சொன்ன உடனே அவன் பொருள வச்சிட்டு அப்படியே போயிட்டான். கடைக்காரன் அவன் போறத பார்த்துட்டு தான் அடடா இவனான்னு
தோணிட்டு அப்படியே ஆஃப் ஆகி உக்காந்தாபல்ல. ஏன்னா தினமும் 40₹க்கு வியாபாரம் பண்ற கஸ்டமர் போச்சு. பசங்க2 படம் பாத்துறுக்கிங்களா அதுல அந்த பையனோட அப்பாவுக்கு திருடுற வியாதி இருக்கும். 5ஸ்டார் ஹோட்டல்ல ஸீபூன் எடுத்து வச்ச உடனே‌. மேனேஜர் வந்து மெதுவா சொல்லுவாப்ல சார் உங்களுக்கு
வேணும்னா அந்த ஸீபூன நீங்களே கொண்டு போங்கன்னு. ஏன்னா ஒரு வெள்ளி ஸீபூன் ரேட் 200₹ இருக்கும். ஆனா அங்க ஒரு ஆளுக்கு சாப்பாடு ரேட்டு 2000₹ இருக்கும். அப்படி benefit calculateபண்றவன் கஸ்டமர் திருடுனாக்கூட Adjust பண்ணி வாய முடிட்டு ரிலேஷன்ஷிப் சில சமயம் பில்ட் பண்ணணும்‌
அதுக்காக திருடுறதே வேலையா வச்சிருக்கவன அப்படி விட சொல்லல. இப்படி கஸ்டமர் கிரியேட் பண்ண இன்னும் நிறைய வழிகள் இருக்கும். அடுத்த பாகத்தில் சந்திப்போம்
----------- தொடரும் -------------------
You can follow @Karthicktamil86.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.