#Thread #டுபாக்கூர்சீமான்

நீங்களே லாஜிக்கா யோசிங்க !

கோவை.ராமகிருஷ்ணன் அவர்களோ, கொளத்தூர் மணி அவர்களோ, வைகோ அவர்களோ ஈழத்துக்கு தலைவர் பிரபாகரன் ஏன் அழைத்தார் ?

ஏற்கனவே தனக்கும்,தனது இயக்கத்திற்கும், ஈழ விடுதலைக்கும் உறுதுணையாக இருந்து ஆயுதம் தயாரித்தல்,
1/n
ஆயுத பயிற்சிக்கு ஏற்பாடு செய்தல்,காயமுற்ற புலிகளுக்கு அடைக்கலம் கொடுத்தல் என பல உதவிகளை செய்த இவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக தான் தலைவர் ஈழத்திற்கு அழைத்தார்.

ஆக தலைவர் மரியாதை நிமித்தமாக ஒருவரை ஈழத்துக்கு அழைத்து மரியாதை செலுத்த வேண்டுமானால்
2/n
அந்த நபர் ஈழ விடுதலைக்கும்,விடுதலைப்புலிகளுக்கும் அதற்கு முன்பே உறுதுணையாக இருந்திருக்க வேண்டும் !

எனவே சீமான் ஈழம் சென்றது என்பது புலிகளின் அழைப்பின் பெயரில் அல்ல, ஏனென்றால் அதற்கு முன்பு ஈழ விடுதலை பற்றி சீமான் மேடைகளில் பேசியதை தவிர
3/n
புலிகளோடு எந்தவித நேரடி தொடர்பும் இல்லாதவர்.
ஆக சீமானை நேரடியாக அழைப்பதற்கு எந்தவித முகாந்திரமும் இருந்திருக்கவில்லை.

அப்படி இருக்க சீமான் எப்படி சென்றார் ?

அன்றைய சூழலில் ஈழவிடுதலையை பற்றி கலை வடிவிலும் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டிய தேவை இருந்ததால்,
4/n
தமிழ்நாட்டில் இருக்கும் உணர்வுள்ள இயக்குநர்களும்,திரைதுறையினரையும் அனுப்பும்படி அண்ணன் கொளத்தூர் மணி, அண்ணன் வன்னியரசு முதலானோருக்கு தகவல் தரப்பட்டது.

அதனடிப்படையில் தான் இயக்குநர் மகேந்திரன் மகன், ராஜ்கிரண் போன்றோர் செல்லத் தயாராகினர்.
5/n
இப்படி ஓர் குழு தயாராவது தெரிந்து, இந்த வாய்ப்பு கிடைத்தால் தானும் ஈழத்தை பார்த்துவிடுவேன் எனக் கூறி சீமான் அவர்கள் கொளத்தூர் மணி மற்றும் வன்னியரசிடம் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், அவர்கள் புலிகளின் கலை பிரிவு பொறுப்பாளரான சேரலாதன் அவர்களிடம் பேசி
6/n
சீமானையும் அந்த குழுவில் இணைத்து விட்டனர்.

ஆக இப்படி பத்தோடு பதினொன்றாக தான் சீமான் அன்றைக்கு ஈழம் சென்று வந்தாரே ஒழிய.
தலைவரிடம் துப்பாக்கி பயிற்சி எடுக்கும் அளவுக்கோ, உலக அரசியல் பேசும் அளவுக்கோ, இவர் எடுத்த மொக்கை படம் தோல்வியடைந்ததர்காக
7/n
தலைவர் பிரபகாரன் அவர்கள் வருத்தப்படும் அளவுக்கோ எல்லாம் முக்கியமான நபராக இல்லை.

இன்னும் சொல்லப் போனால் தலைவருக்கு அப்போது சீமான் என்ற நபர் யார் என்றே கூட தெரியாமல் இருந்திருக்கிலாம்,
8/n
காரணம் நான் மேற்க்கூறியபடி அதற்கு முன்பு சீமான் விடுதலைப்புலிகளுக்கு எந்த ஒரு உதவியும் செய்தது இல்லை.

ஏற்கனவே தங்களுக்கு உதவிய பெரியார் இயக்கத்தினர் அனுப்பிய நபர் என்ற அடிப்படையில் "வணக்கம்,எப்படி இருக்கீங்க"
9/n
என்ற விசாரிப்பை தாண்டி வேறு எதையும் கூட தலைவர் பேசியிருக்க வாய்ப்பில்லை !

உண்மையில் தலைவருடனான சந்திப்பு நடந்ததே மொத்தம் 7 நிமிடங்கள் கூட இருக்காது !

ஆனா என்னவோ தலைவரும் இவரும் ஒன்னா ஸ்கூல் படிக்கற காலத்துல இருந்து நண்பர்கள் போல பேசறார் பாருங்க கூச்சமே இல்லாமல் !

10/n
நீங்க பேசுபா !! காசா பணமா !! அடிச்சு விடுங்க சீமான் 🤦🤦🤦!!
You can follow @Sivaji_KS.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.