Awareness thread....!!
ஆன்லைன் வகுப்புகள் நடக்கும் இந்த நேரத்தில், குழந்தைகள் கையில் தனி மொபைல் வாங்கி தரும் பெற்றோர்கள் கவனத்திற்கு. தனி மொபைல் கையில் கிடைத்ததும் நம் பிள்ளைகள் அதில் என்ன செய்கிறார்கள் என்று முழு நேரம் நம்மால் கண்டிப்பாக பார்த்து கொண்டு இருக்க இயலாது. அதற்காக1/n
ஒரு எளிய வழி முறை... நான் பயன்படுத்தும் முறை இதுவே... Google Play Store Family link என்னும் செயலி.. முதலில் உங்கள் குழந்தை மொபைலில் அவர்களுக்காக ஒரு Child google அக்கவுண்ட் ஆரம்பித்து பின்பு அவர்கள் மொபைலில் கூகுள் பேமிலி லிங்க் ஃபார் சில்ரன் செயலி மற்றும் 2/n
நமது மொபைலில் google family link பார் பேரன் செயலியையும் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். இந்த இரண்டு செயலியை இணைப்பதன் மூலம் அவர்களது மொபைல் முழு கண்ட்ரோல் நமது கையில் வந்து விடும்.. 3/n
எனக்கு பிடித்த அம்சம் daily limit மற்றும் Bed time... இதன் மூலம் உங்கள் குழந்தை ஒரு நாளுக்கு எவ்வளவு நேரம் மொபைல் பயன்படுத்த வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்ய முடியும்... 4/n
கூகுள் பிளே பேரண்டல் கன்ட்ரோல் மூலமாக உங்கள் குழந்தை எந்த மாதிரியான விஷயங்களை playstore மற்றும் chrome பார்க்க வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்ய முடியும்.ஒவ்வொரு முறையும் அவர்கள் ஏதாவது செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டுமென்றால் உங்களிடம் அனுமதி கேட்டு மட்டுமே செய்ய முடியும்5/n
மேலும் அவர்கள் எந்த செயலி எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறார்கள் என்பதையும் கண்காணிக்க முடியும்.. தனித்தனியாக ஒவ்வொரு செயலுக்கும் அவர்கள் பயன்படுத்த வேண்டிய நேரத்தை நாமே நிர்ணயம் செய்யவும் முடியும்..6/n
கையில் மொபைலை எடுத்துக்கொண்டு வெளியே செல்லும் பதின்ம வயது குழந்தைகள் எங்கே செல்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளும் வகையில் Location Tracking வசதி இந்த செயலியில் உள்ளது. இதன் மூலம் உங்கள் குழந்தை எங்கே செல்கிறார் எங்கே இருக்கிறார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள முடியும். 7/n
நம் குழந்தைகள் எல்லா நேரமும் என்ன செய்கிறார்கள் என்று கவனித்துக் கொண்டே இருக்க முடியாவிட்டால் கூட அவர்கள் என்ன செய்கிறார்கள் என்றே தெரிந்தது கொள்ளாமல் நாம் இருந்துவிடக்கூடாது. இக்காலக் குழந்தைகள் பல வகையில் நம்மை விட முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள் 8/n
அவர்களுக்கு ஒரு நல்ல பாதையை அமைத்து தர வேண்டியது பெற்றோர்களின் கடமையாகும் அதற்கான ஒரு சிறு முயற்சியே இந்த செயலி. பலருக்கு இதை பற்றி தெரிந்திருக்கலாம் தெரியாத சிலருக்காக இந்த பதிவு. 9/n

முற்றும் ...
You can follow @Sha_eevaa.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.