இயக்குனர் ராம் படங்களோட posters ஒவ்வொன்னையும் சேர்த்து வைக்கணும்னு நினைச்சேன். ஒவ்வொன்னுலேயும் ரொம்ப cute ஆன, யோசிக்கவைக்கிற விசயங்கள்னு பார்த்து பார்த்து செஞ்சிருப்பாங்க. அப்டியான எல்லாத்தையும் இந்த threadல சேர்த்துருக்கேன். படிச்சு பாருங்க நல்லா இருக்கும்.
கற்றது தமிழ் படத்தோட இசை வெளியீட்டு விழா அழைப்பிதழின் முன் அட்டை.
முதலாம் பக்கம்

போஸ்ட் ஆபிஸை பார்த்த உடனேதான்
எனக்கு லெட்டர் எழுதணும்னு தோணிச்சு!
இந்த உலகத்துல எனக்கு
உன்னை விட்டா
லெட்டர் எழுத வேற யாரு இருக்கா?

You are a divine piece of god, ஆனந்தி
இரண்டாம் பக்கம்

இதுக்கு மெட்ராஸ்ல
லோக்கல் பேரு 'டப்பாஸு',
நார்த் மெட்ராஸ்ல பேர் சொல்ல
முடியாத ஒரு தெருவுல
இது கிடைக்குது..
விலை 42,500 ரூபாய்,

இதை எதுக்கு வாங்கினேன்னு
லெட்டர்ல்ல எல்லாம்
சொல்ல முடியாது.
மூன்றாம் பக்கம்

அன்று
மழை வந்தது...
குடை தந்தது...
உன் தோளில் சாயா
ஒரு தருணம் கிடைத்தது...

இன்று...
மழையும் இல்லை...
நீயும் இல்லை...

மரத்தோடு சாய்ந்து
மரமானேன்.
நான்காம் பக்கம்

புறாக்கள் வளர்க்கும் எதிர் வீட்டுக்காரர் என்னிடமிருந்து பறிக்கிறார் பூனை வளர்க்கும் சுதந்திரத்தை

நா.முத்துக்குமார்
ஐந்தாம் பக்கம்
ஆறாம் பக்கம்
ராமின் இரண்டாவது படமான தங்கமீன்கள் படத்தின் postersஐ ரொம்ப ரசிச்சேன்.
தங்கமீன்கள் படம் ரிலீஸ் நிறைய தடவை தள்ளி போயிட்டே இருந்திச்சு. அப்போ 'செல்லம்மாவின் குட்டியூண்டு தொடர்கதை' என்ற பெயரில ஹாசிப் கானின் ஓவியங்களுடன் தினமும் குட்டி குட்டிக்கதைகளை share பண்ணாங்க. செம cute stories.
அடுத்ததா வந்த தரமணி பட postersல சின்ன சின்ன கருத்துள்ள வசனங்கள் நிறைய வச்சிருப்பார்.
படத்தோட postersலேயும் emotionsஐ காட்ட முடியும்னு பேரன்பு posters பார்த்தப்போதான் புரிஞ்சுது.
You can follow @peru_vaikkala.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.