#வாசிப்பு

மூன்றாம் வகுப்பு படிக்கும் போது தொடங்கியது என்று நினைக்கிறேன்..

வீட்டு பக்கத்தில் உள்ள டீக்கடையில் தினசரி பத்திரிக்கைகள் இருக்கும்

சிந்துபாத்
டார்ஜான்
மந்திரவாதி மாண்டராக்
படக்கதை தொடரை படிப்பதற்காக தினம்
ஆஜராகி விடுவேன்
படக்கதை படிக்க தொடங்கி
கொஞ்சம் கொஞ்சமாக1/2
செய்திகளையும் எழுத்து கூட்டி படிக்க ஆரம்பித்தேன்
டீக்கடைக்கு வரும் பெரியவர்கள் நான் அந்த வயதில் செய்தித்தாள் படிப்பதை ஆச்சரியமாக பார்ப்பார்கள்..
வாசிக்கத்தெரியாத பெரிசுகள் என்னை சத்தமாக செய்தியை படிக்கச் சொல்லி கேட்பார்கள்
அதில் நமக்கு ஒரு கெத்து
பிறகு
பாக்கெட் மணியில்2/3
அம்புலிமாமா,கல்கண்டு முத்தாரம் புத்தகங்கள் வாங்கி வாசிப்பது விரிவடைந்தது

பதின்மூன்று வயதில்
முதன்முறையாக நூலகத்திற்குள் நுழைந்து அங்கே உள்ள தினசரி
வாராந்திர மாதாந்திர பத்திரிக்கைகளை மேயத்தொடங்கியாச்சு
பள்ளிக்கூடம் விட்டா மாலையில் லைப்ரேரிதான் கதி வீட்டுப் பாடம் இரண்டாவதுதான்3/4
லைப்ரேரியில் இருந்து வெளியே வந்தால் கண்ணை கட்டி கிர்னு இருக்கும் அந்த மாதிரி வாசிப்பு வெறி
பசியடங்கல பிறகு அங்கேயே உறுப்பினர் கார்டு வாங்கியாச்சு
கைக்கு கிடைத்த கண்ணுக்கு அகப்பட்ட புத்தகமெல்லாம் படிக்கவும் லைப்ரேரியனே மிரண்டு போய் "தம்பி நீ படிக்கத்தான் எடுத்துட்டு போறியா?இல்ல4/5
யாருக்காவது எடுத்துட்டுப்போறியா?"என்று கேட்பார் எனக்கு தான் என்றாலும் நம்பாமல் எனக்கு அந்த புத்தகத்தில் இருந்து டெஸ்டெல்லாம் வைத்திருக்கிறார்..
பிறகு அவரே நமக்கு ப்ரண்டாகி நிறைய ரெப்ரன்ஸ் புக்ஸ் எல்லாம் எடுத்து கொடுப்பார்..
அப்புறம் ஆண்டுகள் பல சென்றவுடன் சூழல்களால் லைப்ரேரி4/5
போக முடியவில்லை
ஆனாலும் விட முடியுமா?
செலவுகளில் பாதி புத்தகங்களை விலைக்கு வாங்கி படிக்க ஆரம்பித்தேன்
என்னை அப்போது அடையாளம் சொல்வதே கையில் ஒரு புத்தகத்தோட திரிவானே அவன்தானே?
என்று சொல்லும் அளவிற்கு..

இன்றும் நான் தொடர்ந்து செய்து வரும் நல்ல பழக்கங்களில்
திருமண விழாக்களில்5/6
புத்தகங்களையே பரிசளித்து வருகிறேன்..
இன்றைய இளைய தலைமுறையினர் எந்த தகவலையும் கூகுளில் தேடும் பழக்கத்தை கடைப்பிடிக்கிறார்கள்
நான் அதை தவறென்று சொல்லவில்லை
ஆனால் அதில் உள்ள தரவுகள் முழுமையாகவோ,முழுவதும் உண்மையாகவோ இருப்பதில்லை
நுனிப்புல் மேய்ந்த அறிவுதான் அங்கே என்பது எனது6/7
அனுபவம்
இன்றும் என்னை விட அதிகம் கல்விகற்ற நண்பர்கள் என்னிடம் சந்தேகம் கேட்கிறார்கள் என்றால் அதற்கு அவர்கள் கூறும் காரணம் எனது வாசிப்புபழக்கம்தான்
பல நண்பர்கள் உன்னை பார்த்துதான் புத்தகம் படிக்கும் வழக்கம் வந்தது என்பது பெருமையான விஷயம்..
புத்தகங்கள் படிப்பது பொது அறிவை 7/8
வளர்ப்பது,விஷய ஞானத்தை வளர்ப்பது மட்டுமல்ல..
அது நமது சிந்தனை திறனை வளர்க்கிறது,கற்பனைத் திறன்,படைப்பாற்றலை,மொழியறிவை வளர்க்கிறது,தன்னம்பிக்கையை கூட்டுகிறது,மூளையின் செயல் திறனை மேம்படுத்துகிறது..
வாசிப்பதால் நம்மை மேம்படுத்திக்கொள்வது மட்டுமல்ல நமது சந்ததிகளுகளுக்கு சிறந்த8/9
வழிகாட்டியாகவும் நாம் இருக்கலாம்
புத்தகங்கள் வாசிப்பதால் இந்த சமூகத்திற்காக சிந்திக்கக்கூடிய
ஒரு படைப்பாளியை எழுத்தாளரை ஊக்கப்படுத்துகிறோம்,உற்சாகப்படுத்துகிறோம் அதனால் அறிவு ஜீவி சமூகம் பெருக நாம் காரணியாக இருக்கலாம்
நாம் வாசிப்பது மட்டுமல்ல நமது குழந்தைகளை உறவுகளை9/10
படிக்கத்தூண்டுங்கள்..
உங்கள் மீதான மதிப்பும் கூடுவதை காணலாம்..
உங்கள் பரிசு தொகுப்பில் புத்தகங்களே முக்கிய இடம் பிடிக்க செய்யுங்கள்..
இதை விட வேறு எளிய வலிமையான சமூகத்தொண்டு எது?

ஆகவே
வாசித்திருப்போம்
புத்தகங்களை நேசித்திருப்போம்....

🙏🙏🙏
You can follow @Sathiya1967.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.