The Great Indian Kitchen (2020)

உண்மையிலேயே இந்த படம் ஆண் வர்க்கத்துக்கே ஒரு செருப்படிதான். 'எங்க வீட்ல எல்லாம் இப்படி இல்லப்பா' என்று சொல்லும் எல்லாருக்குமே எங்கேயாவது சின்ன உறுத்தல் ஆச்சும் வந்திருக்கும்.
என் அம்மாவோட கர்ப்பபை அகற்றுற சந்திர சிகிச்சைக்கு பிறகு 2 மாதம் ஓய்வு தேவைப்பட்டுச்சு. அப்போதான் முதல் முதலா சமையல் வேலைகள் பார்க்க வேண்டியதாகிச்சு.
அதுக்கு முன்னர் எல்லாம் 'தேங்காய் திருவு, வெங்காயம் உரி' என்று சின்ன சின்ன வேலைகள் மட்டுமே செய்துகொடுத்திருப்பேன்
'சமைக்கிறதெல்லாம் ஒரு விசயமா?' என்ற கேள்விதான் மனதில இருந்திச்சு. ஆனா அந்த 2 மாசமும் என்னோட தப்பை உணர்ந்தேன். இன்னொரு விஷயத்தில எங்க அம்மாவை நான் பாராட்டுவேன். சின்ன வயசிலேயே இருந்தே மற்ற எல்லா வேலைகளையும் நானேதான் செய்யணும்னு சொல்லி குடுத்துட்டாங்க.
இதோ மேலே சொன்ன இரண்டு பந்திகளிலும் நான் 'The great Indian Kitchen' படத்தில் வரும் ஆண்கள் போல அல்ல என்று என் சல்லித்தனமான புத்தியைக் காட்டுகிறேனல்லவா? இப்படித்தான் பலரும் பல இடங்களில் தப்பிக்கொள்ள பார்க்கிறோம்.
இந்த படம் பற்றி எழுதும்பொழுது, அம்பையின் 'வெளிப்பாடு' சிறுகதையை பற்றியும் மீனம்மா எழுதி இருந்தாங்க. அதில்,"அந்த சுரபி பத்திரிகைல வர கதேல அந்தாளு கூப்பிடுறான்னு இவ போயிருக்கா. தொடரும் போட்டுட்டாக. அவன் கெடுத்திடுவான்னு பயமா இருக்குது. இவ போகக் கூடாதில்ல?" என்று ஒரு வசனம் வரும்.
அப்படியே 'Kappela (2020)'தான் 'வெளிப்பாடு' சிறுகதையை ஞாபகப்படுத்திச்சு. 'பாதுகாப்பும் ஒரு அடக்குமுறைதான்'னு ஒரு வசனம் 'வெளிப்பாடு' சிறுகதையில் வரும். நிதர்சனமான உண்மை. அந்த சிறுகதையின் ஒவ்வொரு பந்தியிலும் ஒரு அறை உங்களுக்கு காத்திருக்கும்.
'The Great Indian Kitchen' பார்த்ததும் உடனே ஞாபகத்துக்கு வந்தது அம்பை எழுதிய 'வீட்டின் மூலையில் ஒரு சமையலறை' சிறுகதைதான். அப்படியே சிறுகதையின் பிரதிபலிப்பு TGIK படத்தில் இருக்கிறது. இன்னும் நிறைய கதைகள் தமிழில் இருந்தும் இப்படியொரு படத்தை தமிழில் எடுக்க முடியவில்லையல்லவா?
எப்படி முடியும்?
பெண்களை வெறும் கவர்ச்சிப்பிண்டமாக மட்டும் பார்க்கும் தமிழ் சினிமாவில் ஒன்று இரண்டு விதிவிலக்கு. 'தரமணி' படத்தில் நடித்த ஆண்ட்ரியாவின் speech ஒன்றை இணைத்துள்ளேன் பாருங்கள். அவர் கடைசியாக மாஸ்டர் இல் நடித்திருப்பார்.
அப்படியே Freedom@Midnight குறும்படத்தையும் பார்த்துவிடுங்கள்.
◾Freedom @ Midnight



◾வீட்டின் மூலையில் ஒரு சமையலறை - அம்பை

https://azhiyasudargal.blogspot.com/2011/05/blog-post.html?m=1
TGIK🔥
You can follow @peru_vaikkala.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.