#DrShanta சென்னை மயிலாப்பூரில் (1927) பிறந்தவர். உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி சர். சி.வி.ராமன் இவரது தாத்தாவின் சகோதரர். நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி டாக்டர் எஸ்.சந்திரசேகர் இவரது தாய்மாமா. சென்னை மருத்துவக் கல்லூரியில் 1949-ல் MBBS 1955-ல் MD பட்டம் பெற்றார். நாட்டின் முதல் பெண்
மருத்துவரான முத்துலட்சுமி ரெட்டியின் முயற்சியால் சென்னை அடையாறில் தொடங்கப்பட்ட மருத்துவமனையில் எம்.டி. பட்டம் பெற்ற உடனே பணியில் சேர்ந்தார். கொள்கைப் பிடிப்பும், தொலைநோக்கும், கண்டிப்பும் கொண்ட டாக்டர் எஸ்.கிருஷ்ணமூர்த்தியை தனது குருவாகப் பெற்றார். 12 படுக்கைகளுடன் இயங்கி வந்த
அடையாறு மருத்துவமனையை தனது குருவுடன் சேர்ந்து உலகத் தரம்வாய்ந்த புற்றுநோய் சிகிச்சை மையமாக மாற்றினார். இவரது தன்னலமற்ற மருத்துவ சேவையால் அடையாறு புற்று நோய் மருத்துவமனை பல சாதனைகளைப் படைத்துள்ளது. 63ஆண்டுகளாக இந்த மருத்துவமனையையே தன் வீடாக மாற்றிக்கொண்டவர். புற்றுநோய் தொடர்பாக
தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் ஆயிரக்கணக்கில் கட்டுரைகள் எழுதியுள்ளார். மகசேசே விருது, பத்மவிபூஷண், நாயுடம்மா நினைவு விருது, அவ்வையார் விருது, அன்னை தெரசா விருது உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். விருதுகள் மூலம் கிடைக்கும் தொகை முழுவதையும் மருத்துவமனை வளர்ச்சிக்கே செலவு
செய்வார். உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றிருந்தார். இந்திய வேளாண் ஆய்வுக்கழக குழுவின் உறுப்பினர், அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினர், இந்திய புற்றுநோயியல் கழகத் தலைவர் என மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளார். உலகில் எந்த மூலையில் புற்றுநோய் ஆராய்ச்சி
நடந்தாலும், புதிய மருந்துகள், புதிய மருத்துவ முறைகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவற்றை உடனடியாக அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் அறிமுகம் செய்துவிடுவார்.
எளிமை, பணிவு நிறைந்தவர். ஓய்வின்றி நாள் முழுவதும் உழைப்பவர். நோயாளிகளுக்கு உதவுவதுடன் ஆயிரக்கணக்கான மருத்துவர்களுக்கு
வழிகாட்டியாக செயலாற்றி வந்தார். சிறிதும் சுயநலம் கூடாது என்பதையும், பெறுவதைவிட கொடுப்பதே சிறந்தது என்ற கொள்கையையும் குடும்பத்தினர் மற்றும் ஆசிரியர்களிடம் இருந்து கற்றதாகக் கூறியிருக்கிறார். மகோன்னத மருத்துவ தொண்டாற்றி மகேசன் திருவடியை இன்று காலை அடைந்துள்ளார் செல்வி Dr.சாந்தா🙏🏾
You can follow @anbezhil12.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.