முன்ன எல்லாம் #mnm பத்தின செய்திகளை ஊடகங்கள் இருட்டடிப்பு செய்றாங்கனு கவலை பட்டோம்.
ஆனா இப்போ நம்ம சைடு கொஞ்சம் திரும்பி பாக்குறாங்க. ஆனா நம்ம அத முழுமையா பயன் படுத்திக்குறோமா????
#mnm கட்சி சார்ந்த விவாதங்கள நா தொடர்ந்து பாத்துட்டு வரேன்.

நம்ம சைடு சார்பா கலந்துகொள்ளும் ஆட்கள் மீது எனக்கு மிகுந்த வருத்தம் சொல்லப்போனா கோபம் இருக்கு.
நிகழ்ச்சியில #mnm பேச்சாளர்களின் பேச்சை மிக மிக அரிதாகவே கேட்க முடிகிறது.

சொல்ல போனால் 10 நிமிடத்துக்கு குறைவான நேரத்தை மட்டுமே வழங்கியதாக நெறியாளரிடம் 3, 4 தடவை வாக்கு வாதத்தில் ஈடுபட்டு இருப்பதை பாக்க முடிஞ்சது.
அதையும் மீறி வாய்ப்பு கொடுக்க பட்டால் நெறியாளரின் கேள்விக்கு மட்டும் பதில் கூறிவிட்டு அமைதி ஆகி விடுகின்றனர்.

அப்படி கேட்கும் கேள்விகளுக்கும் கூட 100% சரியாக பதில் அளிக்கிறார்களா என்றால்???
இதில் நடுநிலையாளர்கள் போர்வையில் உள்ள அரசியல் விமர்சர்கள், பத்திரிக்கையாளர்கள் போற போக்குல #mnm மேல பொய், அவதூறு பண்ணிட்டு போய்டுறாங்க.

அதுக்கு நம்ம சைடு ல இருந்து வினையாற்றி இருக்கிறார்களா???
இங்கு பலபேர் தங்கள் வேலைகளை படிப்பை சரியா கவனிக்காம நல்ல மாற்றத்துக்காக #mnm கு கடுமையா வேல செய்றாங்க.

ஆனா கட்சி சார்பா விவாத நிகழ்ச்சியில் பதில் சொல்ல வேண்டியவர்கள் சரியா செயல்படுறாங்களா???

சொல்ல போன ஒரு சுணக்கம் தெரியுது.
நம் கட்சியின் மேல் தொடர்ந்து 10 முதல் 15கேள்விகள் தான் மாத்தி மாத்தி கேக்குறாங்க.
நல்லா homework பண்ணி எல்லா கேள்வியையும் அடுச்சு தூக்கலாம்.

நம்ம சைடு ப்ரீபார்டா யாராவது அணுகுறாங்களா???
ஒரு தலைப்பு கொடுத்து விவாதிக்க சொன்ன தலைவர் சொன்ன கருத்தையே சொல்லிட்டு ஆப் ஆயிடறாங்க.

#MGR டாபிக் உதாரணத்துக்கு சொல்லலாம். தலைவர் ஒரு சில நிகழ்வுகள் எண்ணங்களை மட்டும் தான் தன் வாயால் சொல்லமுடியும்.
ஆனா நம்மக்கு அப்படி இல்ல.
அவ்வளவு சுலபம் இல்லை ஊலவாதிகளை தோற்கடிப்பது.

மேல கேட்ட கேள்விகளுக்கு பதில் இனி வரும் செயல்பாடுகளில் தெரிந்தால் மகிழ்ச்சி.
பி. கு : நா இத யாரையும் குறிப்பிட்டு சொல்லல.
நா ஏன் இத திரும்பி திரும்பி சொல்றேன்னா.

நம்ம கட்சிக்குனு தனி தொலைக்காட்சி கிடையாது.
நீங்க பேசுற பேச்சை எதிர் கட்சி காரன் முதல் நம் கட்சி தொண்டர்கள், பொது வாக்காளர் வரை பாக்குறாங்க.
உங்க பேச்சை வெச்சு தன் நம்ம கட்சியை எடை போடுவாங்க.
தலைவர் ஒருவரால் மட்டுமே மாற்றத்தை உருவாக்க முடியாது.
ஊர் கூடி தேர் இழுத்தே ஆகவேண்டும்.
#நாளை_நமதே
@drmahendran_r
@CKKumaravel @MMMTRICHY
You can follow @maiamtrends.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.