ரசிகர்களையும் மக்களையும் தலைவர் ஏமாத்திட்டாரு அப்படின்னு வருத்தப்படும் நண்பர்களுக்கு இந்த thread
"ரஜினி மக்கள் மன்றத்துடன் நான்"
மன்ற நிர்வாகிகளே ஒதுங்கி இருந்தபோது அவர்களுக்கு ஊக்கத்தை கொடுத்தது பணிகளை தொடங்கியவன் நான் (1)
ஒருங்கிணைந்த நிர்வாகிகள் அற்புதமா திட்டங்களை செய்து முடித்தார்கள்..
நன்றி அண்ணன் மோகன், ரகு செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள்🙏
47 booth committee ஆட்கள் போடறது அவ்வளவு சாதாரண விஷயம் இல்லை எவ்வளவு நேர விரையும், உழைப்பு, பணம் தேவை என்று களத்தில் உழைத்தவர்களுக்கு தெரியும்🤷‍♂️(2)
அதிமுக ஒருத்தருக்கு 500rs
திமுக 200 (பிரியாணி & 🥃) கொடுத்து booth க்கு 70 நபர்களை சேர்த்தாங்க...
அப்போ 47 booth each booth should consist of 15 members இதை செய்ய நாக்கு தள்ளியது எங்களுக்கு தான் தெரியும்🤷‍♂️(3)
Booth committee கூட்டம், அதில் உள்ள உறுப்பினர்கள் கூட்டம் பலமுறை நடத்தி...ward wise விழிப்புணர்வு கூட்டத்துக்கு கால அட்டவணை போட்டு செயல்படுத்திக் கொண்டு இருந்தோம் ,3 ward என் தனிப்பட்ட மேற்பார்வையில் நடைபெற்றது..
திராவிட கட்சிகள் ல இருந்து அதிருப்தி அவர்களை ஒன்றிணைத்தும்...(4)
நான் மற்றும் என் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து எங்களால் இயன்ற மக்கள் நலப்பணிகள் செய்து வந்தோம்..( என்ன நலப்பணி அப்படின்னு கேக்குறாங்க நேரடியா வரலாம் ) அனைத்துக்கும் bill இருக்கு...
இவ்வளவு செய்தும் தலைவர் அரசியலுக்கு வரலனு சொன்ன அடுத்த நாளே 3 booth heads திமுகவின் தூண்டுதலில்..(5)
கொடுத்துவிட்டு வந்து அவர்கள் கொண்டுவந்த நபர்களின் photos & form கேட்டு பிரச்சனை செய்தார்கள்.. இல்லையென்றால் திமுக பேசிய தொகையை எங்களிடம் கேட்டார்கள்..
இவர்களுக்கு பொறுப்புக்கள் தர என்னைப் போன்று வேலை செய்த பலர் பொறுப்புக்கள் வேண்டாம் என்று விட்டுக் கொடுத்தோம்...(6)
பணம் மட்டும் தான் வாழ்க்கை..
எவன் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்று சீரழிந்து இருக்கும் சமூகம்🤷‍♂️
நாங்க சேர்த்த 40 booth committee ஆளுங்க இப்போ திமுக/ அதிமுகவுக்கு வேலை செய்யறாங்க..
" அரசியல் தொழில் இல்லை சேவை" ஆனால் திராவிடக் கட்சிகள் அதை தொழிலா மாத்திட்டாங்க, அந்த மனநிலையில்..(7)
இருக்கும் மக்களை மாற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த தலைவர் களத்துக்கு வந்து பிரச்சாரம் பண்ணனும்..
அவர் உடல் நிலை அதுக்கு ஒத்துழைக்காது..
பெருசா ஓட்டுக்கு பணம் கொடுக்க வேண்டாம் வந்து வேலை செய்யும் ஆட்களுக்கு சாப்பாடு , விளம்பரம் மற்றும் சில செய்தாலே 2 கோடி ஒரு தொகுதிக்கு வேணும்..(8)
திராவிட கட்சிகள் 8 to 10 கோடி செலவு செய்வார்கள்..
தலைவர் கட்சி ஆரம்பிப்பது பிரச்சாரத்தில் உடல்நிலை சரியில்லாமல் போனால் அவரை நம்பி தொகுதிக்கு 2 கோடி செலவு செய்த நபர் நிலமை என்ன?
இதையெல்லாம் மனதில் வைத்துத் தான் தலைவர் இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பார்..(9)
சும்மா பேருக்கு கட்சி ஆரம்பித்து வீட்டிலிருந்து பிரச்சாரம் செய்து 10 to 15% வாக்குகள் பெற்று அடுத்த தேர்தல்ல 500 கோடி திராவிடக் எங்களிடம் பெற்றுக்கொண்டு கூட்டணி அமைக்க தலைவர் எதுக்கு?
DMDK,MDMK,NTK,VCK,communist,
TVK என்று பல கட்சிகள் இருக்கு (10)
13 வருடம் அனைத்து கட்சிகளுடன் இணைந்து தொழில் செய்த நான் கடந்த 2 வருடமாக எதுல சிரிக்க முடியல🤷‍♂️
நடுநிலைவாதி என்ற பெயர் போய் " ரஜினி மக்கள் மன்றத்திற்கு" ஆல் பிடித்தவன் என்ற பெயர்தான் மிச்சம்😊
தலைவர் வரல அப்படின்னு எனக்கும் வருத்தம் இருக்கு ஆனா அதை(11)
தமிழக மக்கள் செய்த தவறுக்கு கடவுள் கொடுத்த தண்டனையா எடுத்துக்கறேன்🙏
இப்போ சொல்லுங்க தலைவர் எடுத்த முடிவு சரியா தப்பா?
தப்புனா என்ன பண்ணலாம் என்று நீங்களே சொல்லுங்க...
வெளியேறிய/ வெளியேற போகும் நிர்வாகிகளுக்கு எனது தாழ்மையான கேள்வி...
தலைவர் RMM உருவாக்கும் பொழுது சொன்ன வரிகள்
" அரசியல் தொழில் இல்லை சேவை"
"பணம் சம்பாதிக்கணும் நினைக்கிறவங்க இப்போவே போயிடுங்க"
நேரடி அரசியலுக்கு வராமல் மக்கள் பணி தொடரும் சொல்லியிருக்கிறார்...(13)
மக்கள் மன்றத்தை என்னும் க கலைக்கவில்லை...
பதவியையும் நீங்க resign பண்ணல அவ்வளவு அவசரமா திமுகவில் சேர அவசியம் என்ன? பணம் பதவி தான் பிரதானம் நா...
அப்போ தலைவர் மாற்றம் என்று சொன்னபொழுது நீங்க நீ வெளிய போகல🤷‍♂️
You can follow @ganeshjayabalan.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.