Telegram Movie Groups

காசு சம்பதிக்கணும் ன்னு நம்ம ட்விட்டர் ஆளுங்க நடத்துர டெலெக்ராம் குரூப்ல எதுலேயும் விளம்பரம் பாத்தது இல்ல, பல குரூப் ல 10k ஆளுங்க சேர்ந்த உடனே விளம்பரம் செய்ய ஆரம்பிச்சிடுவங்க (அந்த விளம்பரம் பத்தி கடைசியா சொல்றேன்) https://twitter.com/CinemAnalyst/status/1350465760519340034
நான் கம்ப்யூட்டர் சர்விஸ் என்ஜினியர், எனக்கு வேலை இல்லாத நேரத்தில், நான் பாத்த படங்கள் பத்தி இங்க எழுத ஆடம்பிச்சேன், அப்போ நிறைய பேர் படம் லிங்க் கேக்க ஆரம்பிச்சாங்க, அவங்களுக்கு அனுப்பலாம் ன்னு தான் குரூப் ஓபன் செய்தேன்,
என்னோட குரூப்ல இதுவரை 17,000 படங்கள் , சீரியஸ் எல்லாம் குடுத்துட்டு தான் இருந்தேன், 7000 ஆளுங்க இருந்தாங்க, இதுவரை வேறு விளம்பரம் ஏதும் நான் செஞ்சது கிடையாது, என்ன படம்/சீரியஸ் கேட்டாலும் கண்டிப்பா கிடைக்கும்,
ஆனா சில விதிமுறைகள் இருந்தது என்னோட குரூப்க்கு,
அது கொஞ்சநாள்ல நிறைய பேர் பின்பற்றவில்லை,
அதுக்கு நான் அவங்கள பிளாக் செஞ்சா DMல வந்து குடும்பத்தையே கழுவி கழுவி ஊத்துவங்க.
ரெண்டாவது லாக்டவுன் சமயம் எல்லாருக்கும் வீட்ல போர் அடிக்குமே ன்னு படம் லிங்க் கொடுத்துட்டு இருந்தேன், இப்போ எல்லாருக்கும் வேலை வந்துடுச்சு, சோ குரூப்ல ரெஸ்பான்ஸ் கம்மி ஆகிடுச்சு,

குரூப் களைத்து விட்டேன் 💐
கடைசியா காசு சம்பதிக்கிறது + விளம்பரம் = iphone11 = 7000
Samsung m30s = 6000

இப்படின்னு விளம்பரம் வரும், அதுக்கு வேற ஒரு குரூப் அதுல செருங்கன்னு சொல்வாங்க, நாமளும் செருவோம். அதுல இருக்க ஆளு மெசஜ்ல "இதோ பாருங்க இதுவரை நான் செய்த சாதனைகள்"ன்னு 10 போட்டோ போட்டு இருப்பார்,
இதே போல உங்களுக்கும் Iphone11 வேணுமா வெறும் 1000/2000 இந்த அக்கவுன்டுக்கு அனுப்புங்க, உங்க வீட்டு அட்ரஸும் அனுப்புங்க 1 வாரத்தில் பொருள் வரும் ன்னு சொல்வாங்க, நாம்ம ஆளும் அவர் சொன்ன amount அனுப்புங்க, அதோட அவர் நம்ம ஆளு IDய பிளாக் பண்ணிட்டு அடுத்த ஆளை பாத்துகிட்டு போயிடுவார்..
இதுல எப்படி அவ்ளோ சம்பாதிக்கிறதுன்னு கேக்கலாம், சதுரங்க வேட்டைல சொல்ற மாதிரி "ஆசையை தூண்டனும்",

Iphone11 எப்படியும் 60,000 ஆகும் அது எப்படி 6000க்கு கிடைக்கும்ன்னு நம்ம ஆளு கேள்வி கேக்க கூடாதுன்னு அவன் நம்ம ஆளை அசர அடிக்கிற மாதிரி ஒரு பதில் வச்சி இருப்பான்.
அது என்னன்னா கார்டிங் (CARDING), அப்டின்னா என்னன்னு புரியாதவங்களுக்கு சொல்றேன்..

கார்டிங் - அமெரிக்க டுப்ளிகேட் கிரெடிட் கார்டு வச்சி இவங்களுக்கு என்ன என்ன பொருள் வேணுமோ அதெல்லாம் ஆர்டர் பண்ணிகிரதுக்கு பேர் தான் கார்டிங்..
இது சாத்தியமா ?
2-5 வருசத்துக்கு முன்னாடி இது நடைமுறைல இருந்துச்சு நிறைய பேர் இப்படி பொருள் வாங்குனாங்க, ஆனா அப்போ பாதி விலை கேப்பாங்க,

இப்போ மாதிரி 60,000 க்கு வெறும் 6000 கேக்க மாட்டாங்க, 60,000 க்கு 30,000 குடுக்கணும்..
இப்போ சாம்பிளுக்கு சில போடோஸ் அப்லோட் பண்றேன்,

இதை யாரும் நம்ப வேண்டாம்

🔰 APPLE MACBOOK PRO 13-inch ORDER PLACED 🔰

🆕Price 14,000rs

✅ 7k Rs Advance & 7k Rs After Delivery 🚚

🌀 Guys I Don't Claim That I'm Trusted! But My Work Shows All About Me ❤️

Trusted 🆔
நாம கொஞ்சம் அறிவாளின்னு நெனச்சி பொருள் வரட்டும்ன்னு காசு தரேன்ன்னு சொன்னா,

அவன் அதை விட தெளிவா சொல்லிடுவான்,
ரெண்டு வருசமா இது (கார்டிங்) செஞ்சிட்டு இருக்கேன், இவ்ளோ போட்டோ போடுறேன்,
இதுக்கு மேல நம்பிக்கை இருந்தா வா, இல்லாட்டி நடைய கட்டுன்னு உசுப்பேத்துவானுங்க..
Telegram ல இதுவரை மூணு பேர் என்னிடம் இப்படி பணம் ஏமாந்துவிட்டேன்ன்னு சொல்லி இருக்காங்க.

அதுனால மறுபடி சொல்றேன்,

யாரும் இந்த கார்டிங் (CARDING) பத்தி நம்ப வேண்டாம்,

நாம எதுக்காக TELEGRAM போனோம் ?

படம், பாட்டு, PDF டவுன்லோட் செய்யத்தானே ?

அது மட்டும் செஞ்சிட்டு வந்துடுங்க..
உண்மையிலே உங்களுக்கு ஏதும் பொருள்கள் வாங்கனுமா ?

கீழ இருக்க இந்த நாலு ட்விட்டர் பக்கங்கள் Follow பண்ணிகோங்க, இவங்க நல்லவங்க தான்,

நிறைய பொருட்கள் நல்ல Offer வந்தா சொல்லுவாங்க

@Techglares
@dealsandalert
@Amazingdeals360
@dealztrendz

உங்களுக்கு வேற ஏதும் தெரிஞ்சாலும் சொல்லுங்க
கொஞ்சம் ஆளுங்களை கேக்காம TAG செய்து கொள்கிறேன்.

தயவு செய்து RT செய்துவிட்டு MUTE செய்து கொள்ளுங்கள்.
You can follow @rightclickcbe.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.