#Business - என்கிட்ட நிறையபேர் DMல கேட்ட விஷயம். எப்படி ஜீ பிஸ்னஸ் ஆரம்பிக்கிறது? இந்த பிஸ்னஸ் பண்ண என்ன பண்ணணும்? இப்போ பொதுவான ஒரு கருத்தை தான் இங்க வைக்கப்போறேன். முதல்ல வடிவேல் பாணியில சொல்லனும்னா பிளான் பண்ணாம எதுவும் பண்ணக்கூடாது. பிளானிங் தான் முக்கியம்.
1.Planning.
a) Money - முதல்ல உங்க Resources எல்லாத்தையும் Calculate பண்ணுங்க. எந்த காரணத்தை கொண்டும் பெரிய கடன்ல ஒரு தொழில ஆரம்பிக்காதிங்க. அது வந்தா மலை போன மயிறு இல்ல‌.போனா உயிரு தான். அதுனால முதல்ல எவ்வளவு பணம் இருக்குன்னு பாருங்க.
அதுக்கு மேல முடிஞ்ச வரைக்கும்
வட்டி இல்லா கடன் முடியுமான்னு பாருங்க. அதுக்காக ரிஸ்க்கே எடுக்காம விட்டுட்டா என்ன மாதிரி திரட்டு தான் போடனும் பிஸ்னஸ் பண்ண முடியாது.

B) What do you know - உங்களுக்கு என்ன தெரியுமோ அதை பண்ணுங்க. தெரியாததை கத்துக்கிட்டு பண்ணுங்க. அதாவது நீங்க நினைக்கிற மாதிரி எல்லா தொழிலும் காசு
இருந்தா மட்டும் பண்ணிடமுடியாது. நம்மள ஏமாத்த ஊர்ல பத்துல 8 பேர் இருப்பான். அதுனால முதல்ல உங்களுக்கு தெரிஞ்ச தொழில தேர்ந்தெடுங்க. இல்லாட்டி அதை கத்துக்கிட்டு பண்ணுங்க. ஒரு வேலை என்கிட்ட காசு இருக்கு ஆனா வேற வேலை எதுவும் கத்துக்கிட்டு பண்ண முடியாதுன்னா அதுக்கு இருக்கிற ஆப்ஷன்
ஒண்ணே ஒண்ணு தான் அதுதான் Franchise எடுக்குறது அதாவது இந்த KFC, Beauty parlour மாதிரி உங்களுக்கு மேனேஜ்மென்ட் அறிவு இருந்தா மட்டும் போதும்.

C) Place or Location - ரொம்ப முக்கியமான விஷயம் இது. அதாவது நம்ம சம்பாதிக்க போற காசுல ஒரு பெரும் பகுதியை சாப்பிட போறது இது தான்.
அதுனால எப்பையுமே இதை ரொம்ப பாதுகாப்பா செல்க்ட் பண்ணணும். நீங்க ஒரு இடத்தில ஆரம்பிக்கிறிங்கன்னா அங்க அந்த தொழில் நல்லா நடக்குற மாதிரி இருக்கனும். அதாவது Burger king கடைய நாம 3முட்டு சந்து இருக்குற குறுக்கு தெருவுல வைக்கக்கூடாது. அந்த கடைக்கு தேவை Visibility. அது கிடைச்சா தான் நாம
அந்த தொழிலை பண்ண முடியும். அதுவே ஒரு சின்ன இட்லிக்கடை போட அந்த முட்டு சந்து போதும். இப்படி ஒவ்வொன்றுக்கும் அதுக்கான இடம் தான் முதல்ல அதை தீர்மானிக்குது. என் ஃபிரண்ட் ஒருத்தன் சலூன் கடை வச்சிருக்கான் ஊர்ல அவன் தொழில் நல்லா நடக்குது. இன்னொருத்தன் ITல வேலை பார்த்தான்.
வேலைய விட்டுட்டு ஊருக்கு வந்து ஹோட்டல் ஆரம்பிச்சான் ஊர்ல. நான் ஊருக்கு சலூன் கடைக்கு போறப்ப அவன்கிட்ட என்னடா அவன் கடை ஆரம்பிச்சிருக்கான் எப்படி போகுதுன்னு கேட்டேன். அவன் சரியா இன்னும் 3 மாசத்தில கடையை சாத்திடுவான் பாருன்னு சொன்னா. எதுக்குடா அப்படி சொல்றேன்னு கேட்டதுக்கு
அவன் சொன்ன முதல் காரணம் அவனுக்கு தெரிஞ்ச வேலையில்ல இது. தெரிஞ்சிக்க வந்திருக்க வேலை. அவன் உக்காந்து வேலை பார்த்து பழகுனவன். அவனால ஹோட்டல் வேலை செய்யமுடியாது ஆள் போட்டாலும். அடுத்தது நம்ம ஊர்ல இருக்கிற ஜனங்கக்கிட்ட ஒரு டேஸ்ட் கொண்டுபோய் சேர்க்க குறைஞ்சது 6 மாசம் ஆகும்
அது முடிக்கும் நிளைச்சு நிக்க அந்த கடை வாடகை காசாவது கலைக்ட் ஆகனும். இல்லாட்டி யாரா இருந்தாலும் முடியாதுடான்னு சொன்னா. அவன் சொன்னது 100 சதவிகிதம் நடந்தது. அதே மாதிரி கடைய மூடிட்டு திரும்ப சென்னை போயிட்டான். இது அவனோட அனுபவப்பாடம். உடனே அப்படி ஜெயிச்சவங்க இருக்காங்கன்னு சொல்லிட்டு
வரவேண்டாம். ஜெயிக்க முடியும் ஆனா அந்த struggle பண்ண தனித்திறமை வேண்டும். இங்க நான் அதுபத்தி சொல்ல வரல. சரி அடுத்த பாயின்ட் போகலாம்.
D) Transportation - இது எல்லா தொழிலுக்கும் முக்கியம்னு சொல்ல முடியாது. ஆனா நீங்க விக்க போற பொருளையும் பிஸ்னஸையும்
பொருத்து இது மாறுபடும். ஆனா உங்களுக்கான மூலப்பொருள் அதாவது நீங்க விக்க போற பொருளோ இல்ல அதை அடிக்கடி வாங்குற இடமோ. உங்க பிஸ்னஸ் நடக்குற இடத்துக்கு பக்கத்தில இருக்கிற மாதிரி பார்த்துக்கோங்க‌. ஏன்னா உங்க டிரான்ஸ்போர்ட் காஸ்ட் குறைஞ்சா உங்களோட லாபம் கூடும்.
இப்போ உங்க ஊர்ல பக்கத்தில ஏதாவது ஃபேக்டரி இருந்தா கொஞ்சம் யோசிங்க ஏன் இந்த ஃபேக்டரி எல்லாம் இங்க இருக்குன்னு அதுல முக்கியமான ஒரு காரணமா இந்த Transportation இருக்கும். நான் விருதுநகர் ராம்கோ சிமெண்ட் ஃபேக்டரி பேஸ் பண்ணி இந்த கதையை சொல்றேன். எத்தனை பேர் பாத்திருப்பிங்க தெரியல
அந்த ஃபேக்டரி இருக்கிறது விருதுநகர்ல அதோட இன்னொரு end point எது தெரியுமா பந்தல்குடின்னு சொல்ற ஊர். கிட்டத்தட்ட 23கிமீட்டர். இந்த 23கிமீட்டர் இடையில இருக்குறது மைன்ஸ் அவங்களுக்கு தேவையான சுண்ணாம்பு கல்லு அந்த பந்தல்குடில கிடைக்குது. அதை கொண்டுவந்து உடைக்கிற மைன்ஸ் அங்கையே இருக்கு
அதுக்கப்புறம் ஜீப்சம் கலந்து சிமென்ட்டா ரெடி பண்றது RR Nagar plantல இவங்க இந்த மொத்த இடத்தையும் அவங்க கன்ட்ரோல்ல தான் வச்சிருக்காங்க. அப்புறம் இந்த சிமெண்ட் ஃபேக்டரி RR nagarல plant போட இன்னும் 2 முக்கிய காரணம் இருக்கு. ஒண்ணு விருதுநகர் ரயில்வே ஸ்டேஷன்.
இரண்டாவது தூத்துக்குடி துறைமுகம். இவங்க இங்க தயாரிக்கிற பொருள செலவு கம்மியா அனுப்ப இந்த Transportation உதவுது. Ramco cement factory உள்ள தனியா ஒரு ரயில்வே டிராக்கும் ரயில் இன்ஜினும் இருக்கும்‌. இப்படித்தான் அவங்க production & Transportation costஅ குறைக்குறாங்க.
இது எல்லாமே பிளானிங்ன்னு சொல்ற முதல் ஒரு ஆப்ஷன்ல வர பாதி விஷயங்கள் இன்னும் முக்கியமா எதை எல்லாம் நாம consider பண்ணணும்னு அடுத்த அடுத்த திரட்டில சொல்றேன். தவறு இருந்தால் மன்னிக்கவும்.

----- தொடரும்----
You can follow @Karthicktamil86.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.