#ஆண்_பாவங்க

இது ஒரு புலம்பல் பதிவு. இந்த வெளியூர்ல போய் வேலை பாக்கிற ஆம்பளைங்க இருக்காங்க பாருங்க, அவங்கள்லாம் கல்யாணம் பண்ணாம இருக்கிறதே தன் சொந்த வாழ்க்கைக்கு அவங்க பண்ற நல்ல காரியம். (1/n) https://twitter.com/Karthicktamil86/status/1346476493656842248
முன்னாடிலாம் சொல்லுவாங்க, பெண்களுக்கு எப்பவும் ரெண்டு வீடுன்னு. நாட்டில வளர்ச்சி மாதிரி, இதுவும் இப்போ பரிணாம வளர்ச்சி அடைஞ்சி வெளியூர்ல வேலை பாக்குற ஆம்பிளைங்களுக்கு மூணு வீடுன்னு மாறிடுச்சு. ஆனா இந்த வளர்ச்சி ஆம்பிளைங்கக்கு மட்டும் தான்.பொண்ணுங்களுக்கு இப்பவும்(2/n)
#ஆண்_பாவங்க
அதே ரெண்டு வீடுதான். அப்படிலாம் இல்லையே னு நிறையே பேரு சொல்லலாம். அப்படி நிஜமாவே இல்லாதவங்களுக்கு சந்தோசம் தான். குறிப்பா ஆண்களுக்கு.

கொஞ்சம் 40's,50'ஸ் ல இருக்கிற பெண்கள்கிட்ட பேசும்போது (அல்லது) உங்க வீட்டில இருக்கிற அம்மா, , சித்தி, அத்தை இந்த மாதிரி ஆளுங்க (3/n)
#ஆண்_பாவங்க
கிட்ட பேசும்போது கவனிச்சீங்கன்னா ஒன்னு புரியும். அவங்க வீடு, அவங்க அம்மா வீடு. இந்த ரெண்டு வார்த்தையும் சரியா பயன்படுத்துவாங்க. ஆனால் இப்போ இருக்கிறவங்களுக்கு இதோட அர்த்தமே வேற. அவங்க வீடுன்னா, அவங்க, வீட்டுக்காரர், குழந்தைங்க மட்டுமே இருக்கிற (4/n)
#ஆண்_பாவங்க
வீட்டுக்குப்பேர் தான் அவங்க வீடு. ஊர்ல இருக்கிற வீடு அவரோட/அவனோட வீடு அதாவது மாமியார் வீடு. அது வேற இது வேறன்ற கணக்கு தான்.

எதாவது பண்டிகைன்னு வந்தாத்தான் தெரியும் அவனவன் கஷ்டம். ஊருக்கு போறப்பவே முடிவு எடுத்திடுவாங்க. (5/n)
#ஆண்_பாவங்க
அவுங்க வீட்டில எத்தனை நாள், நம்ம வீட்டில எத்தனை நாள்னு. இதில ஒரே ஊர்ல வாக்கப்பட்டுருந்தோம், செத்தோம். உங்க வீட்டில (கவனிக்கவும்) இவ்வளவு நாள்/நேரம் இருந்திட்டோம், எங்க வீட்டுக்கு போகலாம்னு ஆரம்பிச்சுடுவாங்க. ரெண்டு பக்கமும் நமக்கு அடி விழுக ஆரம்பிக்கும். (6/n)
#ஆண்_பாவங்க
சரி நாமளும் எப்படியோ சமாளிச்சு வீட்டுக்குக் கூட்டிட்டிபோனா, அங்க நம்ம வீட்டில இருக்கிறவங்க (பெரும்பாலும் அம்மா) நமக்குன்னே எதாவது செய்வாங்க. வீட்டுக்காரம்மாவும் ஒவ்வொரு விஷயத்தையும் கண்ணாலே அளந்து பார்த்து தன்னோட மெமரிலே போட்டு வச்சுக்குவாங்க. (7/n)
#ஆண்_பாவங்க
நம்ம வீட்டில தங்க சொன்ன , வேலை பார்க்க சொன்ன ஒன்னும் செய்ய மாட்டாங்க. ஆனால் இதே அவங்க வீட்டுக்கு போயிட்டா, அவங்க அண்ணன்/தம்பி மனைவி இவங்களுக்கு ராஜ உபசாரம் பண்ணி கவனிக்கனும். (8/n)
#ஆண்_பாவங்க
இப்போல்லாம் பொண்ணுங்க ரொம்ப தெளிவா இருக்காங்க. கல்யாணம் ஆகிட்டா, அவனை அந்த பொண்ணுக்கு எழுதி கொடுத்திட்டதா அர்த்தமாக்கிக்கிறாங்க. கல்யாணத்துக்கு முன்னாடி இருந்த வாழ்க்கையை அவன் கனவிலே யும் நினைக்க முடியாது. (9/n)
#ஆண்_பாவங்க
எல்லாத்துக்கும் அவங்கள யோசிச்சு தான் முடிவெடுக்கணும். ஊருக்கு போறது, செலவு பண்றது, வீட்டுக்கு காசு அனுப்புறதுன்னு எல்லாத்திலேயும். ஒரு ஆணா தன்னோட கடமையைக்கூட செய்யிறதுக்கு இங்க பல வீடுகள்ல உரிமை இல்ல. இதில ஆணாதிக்கம்னு ஒரு பொங்கல்ஸ் வேற. (10/n)
#ஆண்_பாவங்க
இதெல்லாம் ஆரம்பகாலத்தில நடக்காது. கொஞ்ச நாள் ஆனா பின்னாடி, அந்த பையன் தன் குடும்பம்னு யோசிக்க ஆரம்பிச்சு கொஞ்சம் பொறுப்பா மாற ஆரம்பிக்கும்போது தான் தொடங்கும். கணவரோட குடும்பத்தில இருக்கிற எல்லாத்தையும் பத்தி ஒரு விதமான தப்பான assumption ல ஆரம்பிக்கிறது (11/n)
#ஆண்_பாவங்க
அப்படியே சந்திரமுகி மாதிரி பொதுப்படையா என்ன பண்ணினாலும் குத்தம்னு வந்து நிக்கும்.

ஒரு காலத்தில பொண்ணுங்க தான் வீடு உடைஞ்சு போகாம பாத்துக்குவாங்க. இப்போ பல வீடுகள்ல, ஆம்பளைங்க அமைதியா இருந்து தான் காப்பாத்திக்கிட்டு இருக்காங்க. (12/n)
#ஆண்_பாவங்க
ஆனால் அம்மா, பொண்டாட்டின்னு ரெண்டு பக்கமும் நல்ல பேரு கிடையாது.

இன்னும் பொங்கலுக்கு என்னென்ன பஞ்சாயத்துகள் இருக்கோ... (n/n)
#ஆண்_பாவங்க
You can follow @Jolly_Payyan.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.