#தமிழ்க்கடவுள்
#விநாயகர்
#பிள்ளையார்

"முருகன் தமிழ்க் கடவுள், ஆனால் பிள்ளையார் வடநாட்டுத் திணிப்பு" என்ற அறிவிலிப் பிரச்சாரம் செய்யும் திராவிட மற்றும் போலித் தமிழ் இயக்கங்களுக்கு,

பிள்ளையார் பெருமான் தமிழ்க் கடவுளே. ஆதாரங்களைப் பார்க்கலாமா?
@thirumaofficial
@SeemanOfficial +
"கைத்தல நிறைகனி" திருப்புகழ் பாடல் என்ன சொல்கிறது?

"முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே"

அதாவது,
முத்தமிழின் பெருமையை மூத்த மலையாகிய மேருவில் முதலில் எழுதினாராம் முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமான்!

எப்படி! தென்பொதிகைத் தமிழ் வடமேருவில், விநாயகரால்+
எழுதப்பெற்றது. இது எப்படி இருக்கு!

சரி, திருப்புகழ் ஆதாரம் பார்த்தோம். அடுத்து, தேவார ஆதாரங்கள்.

திருநாவுக்கரசர் தேவாரம்:
"சுண்ணவெண் சந்தனச் சாந்தும்" பாடலில்,

"பலபல காமத்தராகிப் பதைத்தெழுவார் மனத்துள்ளே கலமலக்கிட்டுத் திரியும் கணபதி என்னும் களிறும்.." என்று வருகிறதே! +
பொருள் என்ன?
"பக்தர்கள் பலப்பல விருப்பங்கள் நிறைவேறக் கணபதியைத் துதிக்கின்றனர். அந்தக் யானைப் பெருமானும் அவர்களது அஞ்ஞான மலத்தை நீக்கி விருப்பங்களை அருள்கிறார். அவரை மகனாகக் கொண்ட, வீரட்டானத்து உறையும் சிவபெருமானுக்கு அடியார் யாம். எனவே, அஞ்சுவது யாதொன்றும் இல்லை, +
அஞ்ச வருவதும் இல்லை."

சைவம் வேறு சனாதனம் வேறு என்று பிரிக்கும் புல்லர்களின் பிழைப்பில் மண் அள்ளிப் போட்டுவிட்டாரே அப்பர் சுவாமிகள்!

இது எப்படி இருக்கு!

அடுத்த தேவார ஆதாரம் திருஞானசம்பந்தப் பெருமானிடம் இருந்து.

சைவப் பெரியோர் சம்பந்தரை எப்படி அழைப்பர்? "இளைய பிள்ளையார்" +
ஏன்?

அவர் முருகப்பெருமானின் அவதாரம். சிவபெருமான்-உமையம்மையின் மூத்த பிள்ளை விநாயகர். அதனால் இளைய பிள்ளையானவர் முருகப் பெருமானான சம்பந்தர்.

அதாவது, சைவம் விநாயகரைக் கொண்டாடுகிறது. இது எப்படி இருக்கு!

சரி, சம்பந்தர் தேவாரம்:
"பிடியதன் உரு உமை கொள மிகு கரியது வடிகொடு தனதடி +
வழிபடும் அடியவர் கடிகணபதி வர அருளினன்"

பிள்ளையார் தோற்ற வரலாறு சொல்வது இப்பாடல்.

கஜமுகாசுரனை அழிக்க விநாயகர் தோன்றும் வேளை வந்தது.

கயிலாயத்தில் மந்திரங்கள் எழுதிய சித்திர அறைக்கு வந்தனர் அம்மையும் அப்பனும்.

அங்கு, ஓம் என்ற பிரணவ மந்திரத்தை இருவரும் திருக்கண் நோக்கம் செய்தனர்+
ஓம் என்பது அ, உ, ம் என்பதல்லவா? அ - சிவன், உ - உமை. இவை இரு களிறாகப் பிரிந்து மறுபடியும் பிரணவமாக ஒன்றின. உமையின் உ, சிவனின் அ பிடியின் (யானையின்) உருவம் கொண்டதால் பிறந்தவர் கணபதி. வழிபடும் அடியார்களின் இடர் தீர்ப்பவர்.

அதாவது, சிவபெருமானிடம் இருந்து, சைவத்தில் இருந்து +
பிள்ளையாரைப் பிரிக்கவே முடியாது.

பிரிவினைவாதிகளின் பிழைப்பில் மண் அள்ளிப் போட்டுவிட்டாரே இளைய பிள்ளையாராம் சம்பந்தர்!

இது எப்படி இருக்கு! +
சரி, அடுத்து இந்த @thirumaofficial போன்றோர் புத்தமதம் என்று உருட்டுவரே. அந்த புத்த மதம் தொடர்புடைய "மணிமேகலை" காப்பியத்தில் வரும் ஒரு வரி:

"காகங் கவிழ்த்த காவிரிப் பாவை"

அகத்தியரின் கமண்டலத்தை விநாயகர் காகம் உருவம் எடுத்து வந்து கவிழ்த்து, காவிரியைப் பிரவகிக்கச் செய்தாரே. அது.+
என்னய்யா இது? தமிழர்கள் ஐம்பெருங்காப்பியம் என்று கொண்டாடுகின்றனரே. அவற்றில் ஒன்றான மணிமேகலையே விநாயகரைப் பற்றி அழகாகச் சொல்லி விட்டதே.

இது எப்படி இருக்கு! புத்தமத உருட்டுகளுக்கு வந்த சோதனை.

சரி, சங்க கால நிலை என்ன?

கபிலர் என்ற புலவர் - ஆ, கபிலர்! பெயரே விநாயகர் பெயர்! +
ஆமாம். பிள்ளையாரை அர்ச்சிக்கும் 16 பெயர்களில் 3வது என்ன?

ஓம் கபிலாய நம:

கபில: என்றால் பழுப்பு. கஜமுகாசுரனை விநாயகர் வதம் செய்த போது பிரவாகம் எடுத்த உதிரம் விநாயகர் மேனியில் படர்ந்து அவர் பழுப்பாகக் காட்சியளித்தார். எனவே, கபில:

"துப்பார் திருமேனி" என்று ஔவையார் சொன்னது இதுவே.+
சங்கப் புலவருக்கும் அவரது பெயரே! அவர் விநாயகரின் பக்தர்.

சரி, அவரது புறநானூறு பாடல்:

"புல்லிலை எருக்கம் ஆயினும் உடையவை கடவுள் பேணோம் என்னார்.."

அருகம்புல், எருக்கம் எனும் எளிய சமர்ப்பணங்களை இறைவன் உவந்து ஏற்பாராம்.

யாருக்கு ஐயா அருகம்புல்லும் எருக்கம் பூவும் சார்த்துகிறோம்?+
கபிலரின் இஷ்ட தெய்வமான கபில (பழுப்பு) விநாயகருக்குத் தான்.

கீதாச்சாரியரான ஸ்ரீ கிருஷ்ணனும் "பக்தியுடன் ஒரு இலையைச் சமர்ப்பித்தாலும் மகிழ்வுடன் ஏற்பேன்" என்று அர்ஜுனனுக்கு உபதேசித்தாரே. அதே அதே, சபாபதே.

இன்றொரு சங்க இலக்கியமான திருமுருகாற்றுப்படை சொல்வது என்ன? +
"ஒரு கை முகன் தம்பியே"

அதாவது, தும்பிக்கையானின் தம்பி முருகன் என்று சங்கப் புலவர் நக்கீரரே சொல்கிறார்.

அந்தச் சங்கத் தமிழ் பெயரைச் சொல்லிப் பிச்சை எடுத்து ஊரை ஏமாற்றும் தடியர்கள் பிள்ளையார்-முருகன் இடையே பிரிவு ஏற்படுத்துவார்களாம்.

டேய் மோசக்காரா! +
கருணாநிதி எழுதிய "தொல்காப்பியப் பூங்கா" எதைப் பற்றியது? தொல்காப்பியம் பற்றியது.

தொல்.திருமாவளவன் என்பதில் "தொல்" என்னது? தொல்காப்பியம்.

அந்தத் தொல்காப்பியம் சொல்வது என்ன?

"அறங்கரை நாவின் நான்மறை முற்றிய அதங்கோட்டு ஆசாற்கு அரில்தபத் தெரிந்து.."

அதாவது,
நான்கு வேதங்களையும் +
முற்றும் அறிந்துணர்ந்த அதங்கோடுவாழ் ஆசிரியரிடம் தொல்காப்பியத்தை முழுதுமாகப் படித்துக் காட்டி, அவரது அனுமதி பெற்ற பின்னரே அது அரங்கேற்றம் செய்யப்படுகிறதாம்.

இது என்ன டா கருணாநிதிக்கும் தொல் திருமாவுக்கும் @thirumaofficial வந்த சத்திய சோதனை??

இது எப்படி இருக்கு!+
சரி, அந்தத் தொல்காப்பியமே வேதங்களைச் சிறப்பிக்கின்றது என்று மேலே பார்த்தோம்.

சரி, அந்த வேதம் யாரைச் சிறப்பிக்கிறது?

"கணானாம் த்வா கணபதிஹூம் ஹவாமஹே" என்று கணபதியைத் தான். +
அதாவது, தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் எல்லாம் வேதத்தைப் புகழ்கின்றன. அந்த வேதம் துதிக்கையானைத் துதிக்கின்றது.

a = b
b = c
எனவே,
a = c

புரிந்தவர் பிஸ்தா.

இது எப்படி இருக்கு+

சரி, சைவத்துக்குத் திரும்புவோம். +
சைவத்தின் 11வது திருமுறையில் உள்ள "மூத்த நாயனார் திருவிரட்டை மணிமாலை".

பாடியவர் கபிலதேவ நாயனார் என்ற புலவர்.

மூத்த நாயனார் = பிள்ளையார்.

இது பிள்ளையார் பற்றிய இரட்டை மணிமாலை வகை இலக்கியம்.

பாடியவர் பெயரில் உள்ளது "கபிலதேவ". கபில: என்பது.. பிள்ளையார் பெயர். +
அதாவது,
சைவத் திருமுறையில் நீக்கமற, ஐயம் திரிபற இடம் பெற்றுள்ளவர் பிள்ளையாராகிய தொந்தி கணபதி.

எனவே,

"சைவம் தமிழ்; சிவன் & முருகன் தமிழ்; ஆனால் பிள்ளையார் மட்டும் ஆரியன்" என்ற வாதத்தை எடுத்தால் சைவப் பெரியோர் மூக்கிலேயே குத்துவர்.

இது எப்படி இருக்கு! +
"வாதாபி கணபதிம் பஜே" என்று முத்துசுவாமி தீக்ஷிதர் பாடினாரே. அதனால் கணபதி வடநாட்டு வாதாபி இறக்குமதி.. என்ற மதிகெட்ட வாதம் அடுத்து.

அதாவது, நரசிம்மவர்ம பல்லவரின் தளபதி பரஞ்சோதி, வாதாபியை வென்று, புலிகேசியைத் தோற்கடித்து, அங்கிருந்த பிள்ளையாரை எடுத்து வந்துவிட்டாராம்.

ஹா! +
அந்த ஒரு வாக்கியத்தில் ஏகப்பட்ட பிழைகள்.

முதலில், அந்த வாதாபி ஊரும் இந்த "வாதாபி கணபதி" வாதாபியும் ஒன்றல்ல.

பரஞ்சோதி (சிறுத்தொண்ட நாயனார்) கணபதியைத் தூக்கி வரவில்லை.

வாதாபி மன்னன் புலிகேசி இல்லை, "புலகேசி". (புளகமுறும், மயிர்க் கூச்செறியும் வீரம் உடையான்).

"வாதாபி" கணபதி??+
அகத்திய முனிவர் வாதாபி, வில்வலன் என்ற இரு அரக்கர்களை அழிக்குமுன் விநாயகரைத் துதித்தார்.

அழித்தபின், திருவாரூர் திருத்தலத்தில் வாதாபி கணபதியைப் பிரதிஷ்டை செய்தார்.

கேசி என்ற அரக்கனை அழித்த எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன் "கேசவன்" ஆனார்.

அதேபோல்,
வாதாபியை அழிக்க உதவிய +
பிள்ளையார் "வாதாபி கணபதி" ஆனார்.

பரஞ்சோதி, வாதாபியில் இருந்து எடுத்து வந்தவை என்னென்ன?

"பன்மணியும் நிதிக்குவையும் பகட்டினமும் பரித்தொகையும் இன்ன எண்ணிய கவர்ந்தே" என்று பெரியபுராணம் சொல்கிறது.

மணிகளும் பொன்னும் யானை, குதிரைகளையும் கொண்டு வந்தாராம். பிள்ளையார் சிலை இல்லை!+
அதாவது, சைவத் திருமுறை பெரியபுராணமே "விநாயகர் வடநாட்டு இறக்குமதி" என்ற வாதத்தை முறியடித்து விட்டது.

இது என்னடா @SeemanOfficial போன்ற போலிகளுக்கு வந்த சோதனை!

சரி, பரஞ்சோதி என்ற சிறுத்தொண்ட நாயனார் பிறந்த ஊர் எது? செங்காட்டங்குடி.

ஊரின் பெயர்க் காரணம்?

கஜமுகாசுரன் உதிரம் +
காட்டையே சிவப்பாக்கியதாம். அந்த வதம் நிகழ்ந்த ஊரே அதுவாம்.

அதாவது,
பிள்ளையார் அசுரனை வதைத்ததால் தான் அந்த ஊருக்கே செங்காட்டங்குடி என்று பெயர் வந்தது.

பரஞ்சோதி பிறக்குமுன்பே ஊருக்கு இது தான் பெயரெனில், "பிள்ளையார் வாதாபியில் இருந்து கடத்திவரப்பட்டவர் அல்லர், ..+
காலங்காலமாக இங்கே(யும்) உள்ளவரே" என்பது,

கொஞ்சமாவது அறிவு உள்ளவர்களுக்கு விளங்கும்.

@thirumaofficial @SeemanOfficial மற்றும் கலையரசி நடராஜன் போன்றோருக்குப் பொது அறிவும், சைவம் பற்றிய அடிப்படை அறிவும் இல்லாததால் இது விளங்க வாய்ப்பில்லை. +
வாதாபி கணபதி என்பது பிள்ளையாரின் பல மூர்த்தி வடிவங்களில் ஒன்று. அவ்வளவே.

அந்த மூர்த்தி இருக்கும் தலம் திருவாரூர். அவ்வூர் மூலாதார க்ஷேத்திரம். "வாதாபி கணபதிம்" என்ற ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் கிருதியும் இதையே சொல்கிறது:

"மூலாதார க்ஷேத்ரஸ்திதம்"

விநாயகர் அகவலில் ஔவையாரும் +
"மூலாதாரத்தின் மூண்டெழு கனலைக் காலால் எழுப்பும் கருத்தறிவித்தே" என்று பாடுகிறார்.

ஒழுக்கமான வாழ்க்கை வாழ்ந்து, மூலாதாரத்தில் உறங்கும் குண்டலினி சக்தியை விநாயகப் பெருமான் அருளால் எழுப்பி, வீடுபேறு அடைவோமாக.+
@thirumaofficial @SeemanOfficial கலையரசி நடராஜன் போன்ற தகுதியற்ற தலைவர்களைப் பின்பற்றும் தம்பி தங்கையருக்கு:

மேற்கண்ட ஆதாரங்களைச் சிந்தியுங்கள். இவர்கள் எல்லாம் சைவம் பற்றியும் தமிழ் பற்றியும் ஒன்றுமே தெரியாமல் உங்களை இத்தனைக் காலம் ஏமாற்றி வந்துள்ளதை உணறுங்கள். +
சைவம் கூறியதற்கு நேர்மாறான கருத்துகளை உங்கள் உள்ளங்களில் சைவக் கருத்து என்று விதைத்துள்ளனரே, இது அநியாயம் இல்லையா?

"பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் - இவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன் கோலஞ்செய்த் துங்கக் கரிமுகத்துத் தூமணியே, நீ எனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா" என்று +
அந்த விநாயகப் பெருமானையே மனமுருகி வேண்டுங்கள். (அவருக்கு அந்த நான்கையும் படைக்கவும் செய்யுங்கள்.)

கணபதி என்றிடக் கவலைகள் மாறிடும், கல் நெஞ்சு உருகிடும், கருணை பெருகிடும்.

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்; விநாயகனே வேட்கை தணிவிப்பான்.

திருச்சிற்றம்பலம் 🙏
You can follow @_VSriram.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.