ஆரம்பிக்கலாங்களா?

உயிரனங்கள் வரலாறு என்பதனை ஒரு சில பக்கங்களில் அடக்கிவிட முடியாது. இருப்பினும் நான் படித்த, கேட்ட, உணர்ந்த புதைபடிமவியல், மானுடவியல், தொல்லியல் செய்திகளை என்னால் இயன்ற வரை ஒரு சில பக்கங்களில் பகிர முயற்சி செய்து எழுதியுள்ளேன்.
முகவுரை

13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பெருவெடிப்பு கோட்பாடு நிகழ்ந்தது. அதனை தொடர்ந்து பல்வேறு கட்டங்கள் கடந்து 4.571 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சூரியக் குடும்பமமும் 4.543 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நமது பூமியும் உருவானது.
வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு உயிரினங்கள் பூமியில் பரிணமித்தது. இதில் பூமியில் வாழும் எல்லா உயிரினத்திற்கு மூல உயிரினம் தெய்வீக சக்தியால் உருவானது என்ற மூட நம்பிக்கையை சுக்குநூறாக உடைத்தெறிந்து பரிணாம வளர்ச்சி இயற்கையாக நிகழ்கிறது என்றவர் சார்லஸ் டார்வின்.
மனித பரிணாம வளர்ச்சி துறையை விரிவு செய்தவர் சார்லஸ் டார்வின். இவரின் கூற்றுக்கு வலு சேர்க்கும் விதமாக மரபியல் ரீதியாக மனிதனின் 99% டி.என்.ஏ சிம்பன்சியின் டி.என்.ஏவை ஒத்திருப்பதன் மூலம் சிம்பன்சி மனிதனின் நெருங்கிய உறவினர் ஆகிறது.
குரங்கு பங்காளிகள்

பூமியில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் ஆணிவேர் ஒரு பழமையான மூதாதையரிடமிருந்து எழுந்தன என்பதை அறிவியல் சமூகம் நன்கு ஏற்றுக் கொண்ட வகையில் யாதும் ஊரே யாவரும் கேளிர் மற்றும் நாலாம் தலைமுறையை பார் நாவிதனும் சித்தப்பன் ஆவான் ஆகிய பழமொழி முக்கியத்துவம் பெறுகின்றன.
மேலும் குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்று சொல்வது தவறு ஏனெனில் உயிரியல் கோட்பாட்டின் படி மனிதர்களும் குரங்குகளும் ஒரு பொதுவான மூதாதையரைப் (Common Ancestor) பகிர்ந்து வெவ்வேறு பரிணாம பாதைகளை கொண்டு வளர்ந்துள்ளது. இவ்வகையில் குரங்குகள் நமது முன்னோர்கள் அல்ல பங்காளிகள்.
ஆப்பிரிக்க பூர்வீகம்

2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ சேப்பியன்ஸ் இனம் கிழக்கு ஆப்பிரிக்காவில் தோன்றியது. அவ்வகையில் ஹோமோ சேபியன்ஸ் என அறியப்படும் மனிதர்களாகிய நமக்கெல்லாம் ஆப்பிரிக்கா தான் பூர்வகுடி. ஆப்பிரிக்க மக்களாகிய நாம் சூழலியல் காரணங்களுக்காக பல்வேறு காலகட்டத்தில்
ஆப்பிரிக்க தேசத்தை விட்டு வெளியேறி வெவ்வேறு தேசங்களில் ஐக்கியமானோம். அப்படி நாம் சென்ற தேசங்களில் திராவிடர்கள், ஆரியர்கள், எகிப்தியர்கள், ஐரோப்பியர்கள், அமெரிக்கர்கள், ஆஸ்திரேலியர்கள் என்று பல்வேறு இனங்களை கண்டோம்.
நவீன வளர்ச்சி யுகம்

மனிதன் உயிர் வாழ்வதற்கு உண்ணுதல் அவசியம் அதற்கு உணவு தானியங்கள் தான் ஆதாரம். மனித கூட்டம் பெருகியதால் உணவின் தேவை அதிகரித்தது. நாளடைவில் உணவு தேடி சென்ற சமூகம் உணவு உற்பத்தி (விவசாயம் - விவசாயிகள்) செய்யும் சமூகமாக மாறியது.
விவசாய வளர்ச்சியில் உள்ள நுண்ணரசியல் காரணமாக தான் பழங்கால பொதுவுடைமை சமூகம் உடைந்தது, மதங்கள் உருவானது, சாதிகள் வந்தது, மேட்டுக்குடி தோன்றியது, அடிமை முறைக்கு கொண்டு சென்றது, நிலவுடைமையாக வளர்ந்தது, முதலாளித்துவமாக மாறியது. வெகு சில இடங்களில் சோசலிசம் கம்யூனிசம் உருவாகியுள்ளது.
உயிரியல் தோற்றம்

பரிணாம உயிரியலில் உயிரற்ற கரிம சேர்மத்திலிருந்து (Organic Compounds) முதல் உயிரினம் மிக எளிமையாகவும் படிப்படியான செயல்முறை மூலம் இன்றைய பல உயிரின வடிவங்களும் உருவாகியுள்ளது என்பது அபியோஜெனெஸிஸ் (Abiogenesis). இனப்பெருக்கம் (Reproduction) மூலம் புதிய
உயிரினங்கள் மற்ற உயிரினங்களிலிருந்து மட்டுமே உருவாகி வருகின்றன என்பது பயோஜெனெஸிஸ் (Biogenesis).

உலகளாவிய பொதுவான மூதாதையர்

4 பில்லியன் ஆண்டுகளுக்குப் முன்பு உலகளாவிய பொதுவான மூதாதையர் (LUCA - Large Universal Common Ancestor) பிறந்தது. ஹைட்ரோதெர்மல் வென்ட்களிலிருந்து
ஹைட்ரஜன் வாயுவை ஆக்சிஜனேற்றும் ஆற்றலை LUCA பெற்றது. கார்பன் டை ஆக்சைடு மற்றும் நைட்ரஜன் வாயுவிலிருந்து கார்பன் மற்றும் நைட்ரஜன் செல்களின் கட்டுமான தொகுதிகள் கிடைத்தன. மேலும் நொதிகளை உருவாக்க LUCA ஹைட்ரோதெர்மல் வென்ட் அருகிலுள்ள இரும்பு - கந்தகம் ரசாயனங்களை பயன்படுத்தியது.
தற்போதைய ஆய்வுகளின் அடிப்படையில் LUCA உயிரினம் இயற்கையாகவே ஹைட்ரோதெர்மல் வென்ட்களில் உருவாகும் அமினோ அமிலங்களை மட்டுமே நம்பியிருக்க வேண்டும்.

Hydrothermal Vents -> Oxidising Hydrogen Gas / Carbon - Nitrogen / Iron - Sulfur Enzymes / Amino Acids -> LUCA
பரிணாம வளர்ச்சி

*3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒற்றை செல் உயிரினமான புரோகாரியாட்டிகை (Prokaryotes) பிரிவாக கொண்டு பாக்டீரியா (Bacteria) மற்றும் ஆர்க்கியா (Archaea) உயிரினம் பிறந்தது.

Prokaryotes -> Bacteria / Archaea
*3 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சிக்கலான உறுப்புகள் (Complex Organs) கொண்ட பல செல் உயிரினமான யூகேரியாட்டிகை (Eukaryotes) பிரிவாக கொண்டு தாவரங்கள் (Plants), பூஞ்சைகள் (Fungi) மற்றும் விலங்குகள் (Animals) தனித் தனி பரம்பரைகளாகப் பிறந்தது.

Eukaryotes -> Plants / Fungi / Animals
*400 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூச்சிகள் (Insects) பிறந்தது மற்றும் தாவரங்கள் மர தண்டு (Stems) வடிவம் பெற்றுள்ளது.

*397 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நான்கு கால் விலங்குகள் டெட்ராபோட் (Tetrapods) நிலத்தை அடைக்கின்றது.
*டெட்ராபோட் பிரிவை அடிப்படையாக கொண்டு வெவ்வேறு காலகட்டத்தில் நீந்துவன (Aquatic), ஊர்வன (Reptiles), பறப்பன (Birds), பாலூட்டி (Mammals) பரிணமித்தது.

Tetrapods -> Aquatic, Reptiles, Birds, Mammals
*375 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மீன் மற்றும் நான்கு கால் நில விலங்குகளுக்கு இடை நிலையான டிக்டாலிக் (Tiktaalik) உருவாகியது.

*240 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு டைனோசர் (Dinosaur) வகைகள் உருவாகியது.
*150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தெரோபோட்ஸ் (Theropods) எனப்படும் இறைச்சி உண்ணும் டைனோசர்களின் குழுவிலிருந்து பறவைகள் (Birds) இனம் தோன்றியது.

Theropods -> Birds
*65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கிரெட்டேசியஸ்-பேலியோஜீன் நிகழ்வு (Cretaceous–Paleogene Extinction) மூலம் டைனோசர் ஊர்வன உட்பட பல்வேறு உயிரினங்களின் ஒரு பகுதி அழிகிறது.

*இந்த அழிவானது பாலூட்டிகள் (Mammals) பூமியில் ஆதிக்கம் செலுத்திட வழி வகுக்கிறது.
உயர் விலங்கினம் முதனி

*60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தொலைதூர மூதாதையரிடமிருந்து ஸ்ட்ரெப்ஸிர்ஹினி (ஈரமான மூக்கு - Wet Nose) மற்றும் ஹாப்ளோரினி (உலர்ந்த மூக்கு - Dry Nose) முதனி பரம்பரை பிறந்தது.

Primates -> Strepsirrhines / Haplorhini
*ஸ்ட்ரெப்ஸிர்ஹினி பரம்பரையிலிருந்து லெமூரிபார்ம்ஸ் பரம்பரை பிறந்தது.

Strepsirrhines -> Lemurs / Lorises

*ஹாப்ளோரினி பரம்பரையிலிருந்து சிமியன்கள் மற்றும் டார்சியர்ஸ் பரம்பரை பிறந்தது.

Haplorhini -> Simians / Tarsiers
*சிமிபோர்ம்ஸ் குடும்பத்திலிருந்து 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்ரோ-அரேபியா சிமியன்கள் தென் அமெரிக்காவை காலனித்துவப்படுத்தி புதிய உலக குரங்குகளை (New World Monkeys) உருவாக்கினர்.

Simians -> New World Monkeys
*25 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மீதமுள்ள சிமியன்களின் இடமிருந்து பழைய உலக குரங்கு இனம் (Old World Monkeys) மற்றும் வாலில்லாத மனிதக் குரங்கு இனம் (Apes) பிரிந்தன.

Simians -> Old World Monkeys / Apes

Hominoidea Super Family -> Apes

Apes - Human Last Common Ancestor
*18 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மனிதக் குரங்கு இனத்திலிருந்து கிப்பன் குரங்கு பரம்பரை தோன்றியது.

Hominoidea Super Family -> Hylobatidae Family (Lesser Apes) -> Hylobates Genus

Gibbons - Human Last Common Ancestor
*18 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மனிதக் குரங்கு இனத்திலிருந்து பெரு மனிதக் குரங்கு இனம் தோன்றியது.

Hominoidea Super Family -> Hominidae Family (Great Apes)

*15 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பெரு மனிதக் குரங்கு இனத்திலிருந்து ஒராங்குட்டான் குரங்கு பரம்பரை தோன்றியது.
Hominidae Family -> Pongidae Sub Family -> Pongo Genus

Orangutan - Human Last Common Ancestor

*14 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பெரு மனிதக் குரங்கு இனத்திலிருந்து கிளை பரம்பரை தோன்றியது.

Hominidae Family -> Homininae Sub Family
*9 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கிளையிலிருந்து கொரில்லா பரம்பரை தோன்றியது.

Homininae Sub Family -> Gorillini Tribe -> Gorilla Genus

Gorilla - Human Last Common Ancestor

*8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கிளையிலிருந்து துணை குடும்பம் தோன்றியது.
Homininae Sub Family to Hominini Tribe

*7 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு துணை குடும்பத்திலிருந்து சிம்பன்சி பரம்பரை தோன்றியது.

*தற்போதுள்ள மனிதர்களும் சிம்பன்சியும் பகிர்ந்து கொள்ளும் கடைசி பொதுவான மூதாதையர் இந்த காலகட்டத்தை சேர்ந்தது தான்.

Hominini Tribe -> Pan Genus
Chimpanzee - Human Last Common Ancestor

*7-6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு துணை குடும்பத்திலிருந்து ஆர்டிபிதேகஸ் பரம்பரை தோன்றியது.

*மனித குரங்கு பண்புகளை கொண்ட ஆர்டிபிதேகஸ் இனமானது இரண்டு கால்களில் நடக்க தொடங்கியது.

Hominini Tribe -> Ardipithecus Genus
*4.2-3.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு துணை குடும்பத்திலிருந்து ஆஸ்ட்ராலோபிதீசின் பரம்பரை தோன்றியது.

Hominini Tribe -> Australopithecus Genus

*2.7-2.3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு துணை குடும்பத்திலிருந்து பராந்த்ரோபஸ் பரம்பரை தோன்றியது.

Hominini Tribe -> Paranthropus Genus
ஹோமோ இனம்

*2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு துணை குடும்பத்திலிருந்து நவீன மனிதர்களின் பிரிவை உள்ளடக்கிய ஹோமோ பரம்பரை தோன்றியது.

Hominini Tribe -> Homo Genus
*2.4 - 1.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ பரம்பரையிலிருந்து ஹோமோ ஹபிலிஸ் இனம் ஆப்பிரிக்காவில் தோன்றியது.

*ஹோமோ ஹபிலிஸ் இனமானது பெரிய கால் விரல்களையும் தாடையின் நீட்சி குறைந்த அளவினையும் கற்கருவிகள் பயன்பாட்டினையும் கொண்டது.

Homo Genus -> Homo Habilis Species
*1.9 - 1.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ பரம்பரையிலிருந்து ஹோமோ ருடால்பென்சிஸ் இனம் ஆப்பிரிக்காவில் தோன்றியது.

Homo Genus -> Homo Rudolfensis Species

*1.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ பரம்பரையிலிருந்து ஹோமோ எரெக்டஸ் இனம் தோன்றியது.
*ஹோமோ எரெக்டஸ் இனமானது தொடர்ந்து நேராக நிமிர்ந்து நடக்கவும் நெருப்பின் பயன்பாட்டினையும் அறிந்து கொண்டது.

Homo Genus - Homo Erectus Species

*7,00,000 - 2,00,000 ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ பரம்பரையிலிருந்து ஹோமோ ஹைடெல்பெர்கென்சிஸ் இனம் தோன்றியது.

Homo Genus - Homo Heidelbergensis
*4,00,000 - 40,000 ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ பரம்பரையிலிருந்து ஹோமோ நியாண்டர்தால் இனம் தோன்றியது.

*கரடு முரடான கருவிகள் பயன்பாட்டினை கொண்டாலும் ஹோமோ நியாண்டர்தால் இனமானது வேட்டையாடும் திறனில் பின்தங்கியது.

Homo Genus -> Homo Neanderthals Species
*4,00,000 - 3,00,000 ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ பரம்பரையிலிருந்து டெனிசோவன் இனம் தோன்றியது.

Homo Genus -> Homo Denisovan Species

*4,00,000 - 1,25,000 ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ பரம்பரையிலிருந்து ஹோமோ ரோடீயென்சிஸ் இனம் தோன்றியது.

Homo Genus -> Homo Rhodesiensis Species
*1,00,000 - 50,000 ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ பரம்பரையிலிருந்து ஹோமோ ஃப்ளோரெசென்சிஸ் இனம் தோன்றியது.

Homo Genus -> Homo Floresiensis Species

*3,35,000 - 2,36,000 ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ பரம்பரையிலிருந்து ஹோமோ நலேடி இனம் தோன்றியது.

Homo Genus -> Homo Naledi Species
*3,00,000 ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ பரம்பரையிலிருந்து ஹோமோ சேப்பியன்ஸ் இனம் தோன்றியது.

Homo Genus -> Homo Sapiens Species

*70,000 ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ பரம்பரையிலிருந்து ஹோமோ லுசோனென்சிஸ் இனம் தோன்றியது.

Homo Genus -> Homo Luzonensis Species
ஹோமோ சேப்பியன்ஸ் வளர்ச்சி

*ஹோமோ சேப்பியன்ஸ் இனமே நவீன மனித வாழ்வின் தொடக்கமாகும்.

*கற்கருவிகளுடன் எலும்பாலான கருவி, குத்தி கிழிக்கும் கருவி, நெம்புகோல் கருவி உட்பட பல்வேறு கரடு முரடான கருவிகளை பயன்படுத்தினான்.
*வேட்டையாடி உணவை சேகரிக்கும் சமூகமாக வாழ்ந்தவன் ஒரு கட்டத்தில் ஆப்பிரிக்காவில் இருந்து இடம் பெயர்ந்து பல்வேறு கண்டங்களில் குடியேறினான்.

*50,000 ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ சேப்பியன்ஸ் இனத்திடம் உருவான அறிவு புரட்சியானது இயற்கையையும் பிற உயிரினங்களையும் ஆள தொடங்கி விட்டது.
*25,000 ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ சேப்பியன்ஸ் இனத்தை தவிர பிற ஹோமோ இனங்கள் மறைந்தன.

*10,000 ஆண்டுகளுக்கு முன்பு உலகம் முழுவதும் வேளாண்மை, நாய்கள் வளர்ப்பு, நகரங்கள் வளர்ந்தது.

*5,000 ஆண்டுகளுக்கு முன்பு தொன்மையான எழுத்து வடிவங்கள் நடைமுறைக்கு வந்தன.
*4,000 ஆண்டுகளுக்கு முன்பு மெசொப்பொத்தேமியாவில் வசித்த சுமேரியர்கள் உலகின் முதல் நாகரிகத்தை உருவாக்கினர்.

முடிவுரை

50 ஆண்டுகளுக்கு முன்பு கணினி உட்பட பல்வேறு மின்னணு சாதனங்களை ஹோமோ சேப்பியன்ஸ் என அழைக்கப்படும் அறிவார்ந்த மனிதர்கள் கண்டுபிடிக்க அதற்கு ஆதாரமாக பரிணாம வளர்ச்சி
குறித்து நான் எங்கோ அமர்ந்து எழுதிய பதிவை நீங்கள் எங்கோ அமர்ந்து படிக்க ஏதுவாக இருக்கிறது. இந்த பரிணாம வளர்ச்சியானது தொடர்ந்து ஒரு கட்டத்தில் ஹோமோ சேப்பியன்ஸ் மாற்று உயிரினத்துடன் உறவு கொண்டும் கணினியின் துணைக்கொண்டும் எதிர்க்காலத்தில் நம்மை விட திறமையான உயிரினமாக “சூப்பர் ஹோமோ”
பிறக்க வழிவகை செய்யக்கூடிய வாய்ப்பு அதிகம் என கூறிக் கொண்டு இக்கட்டுரையை முடிக்கிறேன்.

விவரணைகள்

Evolution Of Life Timeline https://www.newscientist.com/article/dn17453-timeline-the-evolution-of-life/
Fish To Humans
Ape To Humans
Early Life To Humans
உயிரனங்கள் குறித்த பார்வை

https://chocksvlog.blogspot.com/2020/11/blog-post_79.html
You can follow @chockshandle.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.