உங்களுக்கு ஒன்று தெரியுமா ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு வரும் நபருக்கு மாதச்சம்பளம் போல சம்பளம் எதுவுமே கிடையாது. இது தான் உண்மை. சம்பளமே இல்லாத ஒரு பதவிக்கு ஏன் அவர்கள் இந்த போட்டி போட வேண்டும்.
ஊராட்சி மன்ற தலைவருக்கு மதிப்பு ஊதியம் என்ற பெயரில் மாதம் ரூ. 1000 தமிழக அரசால்
வழங்கப்படும். மேலும் கிராம ஊராட்சி மன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள ரூ. 200 அமர்வு படி என்ற பெயரில் வழங்கப்படும். இரண்டையும் சேர்த்தால் ஒரு மாதத்தில் ஊராட்சி மன்ற தலைவரின் சம்பளம் சரியாக 1200 ரூபாய் தான். இதே போல கிராம ஊராட்சி மன்ற உறுப்பினருக்கு ஒரு கூட்டத்திற்கு ரூ. 50 அமர்வு
படியாக வழங்கப்படும். இவர்கள் அதிகபட்சமாக மாதம் 100 ரூபாய் மட்டுமே சம்பளமாக பெறுவார்கள். பிறகு ஏன் இத்தனை போட்டி?

கிராம ஊராட்சியை பொறுத்தவரையில் காசோலை மூலம் ஊராட்சியின் பணத்தை எடுத்து செலவு செய்யும் முழு அதிகாரம் ஊராட்சி மன்றத்தலைவருக்கு மட்டுமே உண்டு. அதே போல குடியரசு தினம்
தொழிலாளர் தினம், சுதந்திர தினம் மற்றும் காந்தி ஜெயந்தி உள்ளிட்ட நான்கு சிறப்பு நாட்களில் கட்டாய கிராம சபைக்கூட்டத்தை கூட்ட வேண்டும். அந்தக்கூட்டத்தில் முந்தைய 3 மாதங்களின் ஊராட்சியின் வரவு மற்றும் செலவு கணக்கை முன்வைக்க வேண்டும். கிராம மக்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைவரும்
கேட்கும் கேள்விக்கு ஊராட்சி மன்றத்தலைவர் பதிலளிக்க வேண்டும்.

கிராம ஊராட்சியைப்பொறுத்த வரையில் அதற்கான வருவாய் சில வரிகள் மற்றும் மத்திய, மாநில அரசின் நிதி திட்டங்கள் மூலமாக கிடைக்கிறது. குறிப்பாக 14 ஆவது நிதி ஆணைய பரிந்துரைப்படி, 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை தமிழக
கிராம ஊராட்சிகளுக்கு சுமார் 7,899 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 2019 முதல் 2020 ஆண்டிற்கு மட்டும் அதிகபட்சமாக 2,369 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 10 சதவீத நிதியை தனது வருவாய் மூலமாக தமிழக அரசு ஆண்டு தோறும் வழங்கிவருகிறது. இவ்வளவு
பணம் புரளும் களமாக உள்ளாட்சி அமைப்புகள் உள்ளதை அனைவரும் இங்கே கவனிக்க வேண்டும்.

பஞ்சாயத்து தலைவர்களின் ஊழல் டெக்னிக்ஸ்

தமிழ்நாட்டை பொறுத்தவரையில், TVS 50 வைத்திருப்பவர்கள் பஞ்சாயத்து தலைவர் ஆன பின்னர் Toyato காரில் செல்கிறார்கள், கண்ணாடி வைத்த மிகப்பெரிய மாடி வீடு
கட்டுகிறார்கள் இது எல்லாம் எப்படி சாத்தியமாகிறது ஊழல் எவ்வாறு நடக்கிறது

1. பல ஊராட்சி கிராம சபை கூட்டங்களில் பொதுமக்களின் வருகை குறைவாக இருப்பதை பயன்படுத்தி ஐந்து முதல் ஆறு பேரை மட்டும் வைத்து கூட்டத்தை நடத்தி வருகைப்பதிவேட்டில் கையெழுத்து வாங்கி கூட்டத்தை முடித்துவிடுகிறார்கள்
இதனால் கசோலை மூலம் பஞ்சாயத்து தலைவர்கள் அடிக்கும் களவாணி தனத்தை கண்டுபிடிக்க முடியாமலே போகிறது. ஆகவே கிராம சபைக்கூட்டத்தில் முடிந்தவரை பொதுமக்கள், இளைஞர்கள் என அனைவரும் பங்கேற்று ஊராட்சி தலைவரிடம் கணக்கு கேட்க வேண்டும்.

2. கிராம ஊராட்சிகளில் கிராம சபைக்கூட்டத்தில் பொதுமக்கள்
பங்கேற்பதை தவிர்க்க பஞ்சாயத்து தலைவர்கள் பல குறுக்கு வழிகளை கையாளுவார்கள். குறிப்பாக கிராம சபை கூட்டம் தொடர்பான தேதியை பொதுமக்களுக்கு கூறாமல் இருப்பது போன்றவை. ஆகவே கிராம சபை கூட்டம் தொடர்பான தேதியை அனைவருக்கும் சொல்லி பொதுமக்களை கூட்டத்தில் கலந்து கொள்ள செய்ய வேண்டும்.
இன்னும் சில கிராம ஊராட்சிகளில் ஓட்டுக்கு பணம் கொடுப்பது போல 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை பார்க்கும் எழுத படிக்க தெரியாத முதியவர்கள் மற்றும் பெண்களுக்கு விவரம் ஏதும் சொல்லாமல் தலைக்கு 20 ரூபாய் என பிச்சை காசுகளை கொடுத்து கிராம சபைக்கூட்டத்திற்கான பொதுமக்கள் வருகைப்பதிவேட்டில்
கையெழுத்து வாங்கி அருமையாக கணக்கை முடித்துவிடுவார்கள்.

4. சாதியின் பெயரால் சிலரை ஒதுக்கி வைப்பது இன்றளவும் தமிழக கிராமங்களில் சாதாரண ஒன்று தான். ஆனால் கிராம சபைக்கூட்டத்தில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம் என்பது சில ஊராட்சி மன்றத்தலைவர்களுக்கு பிடிப்பது இல்லை. தனது ஊழல்
குத்தாட்டத்தை மறைக்க சிலர் சாதியை கேடயமாக பயன்படுத்தி வருகின்றனர். சாதியால் சதி செய்தாலும் கிராம சபை கூட்டத்தை யாரும் தவற விடக்கூடாது.

5. 100 நாள் வேலை திட்டத்தில் பயனாளி என்ற பெயரில், வேலையே பார்க்காதவர்களுக்கும், சொந்தக்காரர்களுக்கும், சாதிக்காரர்களுக்கும் அடையாள அட்டையை
கொடுத்து வேலை செய்ததாக கூறி கணக்கு கொடுத்து காசும் பெற்றுக்கொள்வார்கள்.

6. மத்திய, மாநில அரசுகளின் கிராம ஊராட்சி அமைப்புகளுக்கான சில திட்டங்களில் (வீடு கட்டும் திட்டம், கழிவறை வசதி போன்ற இலவச திட்டங்கள்) பயனாளிகளாக தனது சொந்தக்காரர்களை மட்டும் தேர்வு செய்வதும், சொந்தக்காரர்கள்
அல்லாதவர்களிடம் ரூ. 1000 முதல் ரூ. 5000 வரை லஞ்சம் வாங்குவதும் என பல திள்ளுமுள்ளு வேலைகள் நடக்கிறது.

7. இதையெல்லாம் தடுக்க
படித்த இளைஞர்கள் முதலில் கிராம சபைக்கூட்டங்களில் பங்கேற்க வேண்டும். கட்சிப்பாகுபாடின்றி கேள்விகளை கேட்கவும் முன்வர வேண்டும்.

8. தகவல் அறியும் உரிமைச்சட்டம்
மூலமாக தமிழ்நாட்டின் எந்த மூலையில் உள்ள கிராமத்தின் வரவு - செலவு விவரங்களை வேண்டுமானாலும் பெற முடியும். சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சியின் ஊராட்சி செயலரை அணுகி ஊராட்சியில் நடக்கும் திட்டங்களுக்கான நிதி செலவுகள் போன்ற விவரங்களை கேட்டுப்பெறலாம். மேலும் திட்டங்களுக்கான பொருட்செலவுகளின்
ரசீது விவரங்களையும் கேட்டுப்பெறலாம் என்பதை அனைவரும் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.

9. சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் ஊழல் செய்திருக்கிறார் என்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவரிடம் ஊர் மக்கள் சார்பில் விளக்கம் கேட்டு கடிதம் எழுத வேண்டும். அதற்கு அவர் மறுப்பு அளித்தால் அவர் மீது
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்று துறை ரீதியான நடவடிக்கையை கோரலாம் அல்லது காவல்துறையில் ஊர் பொதுமக்கள் சார்பில் புகார் மனு அளித்து குற்றவியல் நடவடிக்கையை மேற்கொள்ளலாம். நீதிமன்ற விசாரணையில் சம்பந்தப்பட்ட நபரின் ஊழல் உறுதி செய்யப்பட்டால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ்
சம்பந்தப்பட்டவருக்கு சிறை தண்டனையும், தேர்தலில் போட்டியிட தடையும் விதிக்கப்படும்.
You can follow @vanamadevi.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.