சவுக்கு சங்கர் ஒரு அரசியல் ப்ரோக்கர்.He is a guy having Selective Ethics of Journalism.

குறிப்பிட்ட தரப்பு ஆள். அதே நேரம் சோ போல எல்லாக் கட்சியினருடனும் தொடர்பில் உள்ள ஒரு ஆள்.

இங்கே கடந்த சில காலமாக BJPயை விமர்சித்து DMKதான் வெல்லவேண்டும் என்ற DMK ஆதரவு பிம்பம் உருவாக்கி,
பெரும்பாலான இணைய திமுகவினர் சவுக்கு சொல்வது உண்மைதான் என்ற நம்பிக்கையை ஏற்படுத்திப் பின் அதே திமுகவினரை உதயநிதி என்ற துருப்புச்சீட்டை வைத்து வீழ்த்திவருபவர்தான் இந்த சவுக்கு.

அதற்கு முன் ராஜா, அண்ணாமலை போன்றோரை கேலிக்குள்ளாக்கி இப்போது அதையே உதயநிதி விஜய் என்று நீட்டி வருகிறார்.
அரசியல் வாரிசாக தினகரனுக்கு இருக்கும் வக்கு, ஓபிஆருக்கு இருக்கும் திறமை, GK வாசனுக்கு இருக்கும் தகுதி உதயநிதிக்கு மட்டும் இல்லை என்பது சவுக்கின் தற்போதைய நிலை.

ஒரு புலனாய்வு பத்திரிகையாளராக சவுக்கின் திறமையைக் குறைத்து மதிப்பிடமுடியாது.பல பிறநாட்டு பத்திரிகையாளர்களுக்கு ஈடானவர்.
ஆனால் அரசியல் பார்வையாளராக அரசியல் விமர்சகராக அரசியலில் ஒரு Influencerஆக சவுக்கின் நிலை கடும் கேள்விக்குரியதே.

எவ்வளவு சிறப்பான வேலை ஆனாலும் அதன் காரண காரியம் கருதியே அதன் நன்மை தீமை அளவிடப்படும். சவுக்கும் அத்தகையவரே.

இப்போது சங்கரின் அவதாரம் உதயநிதி+ விஜய் எதிர்ப்பாளர்.
உண்மையில் இந்த 100% இருக்கை விவகாரத்தில் ஆளுங்கட்சியை நோக்கி நீட்ட வேண்டிய கைகள் விஜயின் மீதும் அவரது இணைய தள ரசிகர்கள் மீதும் நீட்டப்படுவதன் அரசியல் புரியாதவரல்ல சங்கர். இருந்தும் சிறுபிள்ளை போல் ரசிகர் சண்டையில் ஈடுபடுவது சவுக்கின் வேறொரு அஜெண்டாவையே காட்டுகிறது.
உதயநிதி ஸ்டாலினின் அரசியல் வாரிசா இல்லையா என்பது ஒரு புறமிருக்க சவுக்கிடம் எந்தக் கட்சியும் பேரங்களே பேசப்படுவதில்லையா என்ற கேள்விக்கு சங்கர்தான் பதில் கூறவேண்டும்.

உதயநிதியை வைத்துப் பிளவு இருப்பதாக பிம்பத்தைக் கட்டமைப்பதில் இருக்கும் லாபம் யாருக்கு எனப் பார்க்கவேண்டும்.
யார் வீட்டில் எழவு விழுந்தாலும் மாலை எனக்குத்தான் என்கிற ஆட்டிட்யூட் பிணத்துக்குண்டான மரியாதையையே கொடுக்கும்.

சமூக நலனுக்கான சமரசங்களைச் செய்ய சவுக்கு சங்கர் அரசியல்வாதியோ சமூக சேவகரோ அல்ல. ஆனாலும் ஒரு பத்திரிகையாளராக சமூகப் பொறுப்பு தனக்குண்டு என்பதை மறக்கக்கூடாது.
பத்திரிகையில் விளம்பரங்கள் வரலாம். ஆனால் விளம்பரத்துக்காகவே பத்திரிகையாளராகப் பயணிப்பது காலப்போக்கில் அரசியல் ப்ரோக்கராக மட்டுமே நினைவுகூறப்படும்படி ஆகிவிடும்.

உண்மையில் இதெல்லாம் சங்கருக்கே தெரியும். அதனால் இதை எழுதுவது அவருக்காக அல்ல.

அவரைப் பின் தொடரும் நம் எல்லோருக்குமானதே.
சவுக்கு சங்கரோ குணசேகரனோ செந்தில்வேலோ மதிமாறனோ வேறு யாரோ ஒரு பத்திரிக்கையாளரோ அல்லது நிருபரோ கூறுவதை நாம் அப்படியே முழுவதும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதில்லை.

நாம் நமது புத்திக்கேற்ப உண்மையை ஆய்ந்து புரிந்துகொண்டு அவரவர் நோக்கத்தைச் சீர்தூக்கி சரிபார்த்துச் செயல்படலாம்.
இத்கு ஒவ்வொருவருக்கும் ஒரு மறைமுக நிரல் உண்டு என்பதைத் தெரிந்துகொண்டால் இவர்கள் அனைவரையும் வடிகட்டிவிடலாம்.

அந்த வகையில் சவுக்கு சங்கர் ஒன்றும் பத்தரைமாற்றுப் பத்தினி அல்ல. இன்று உதயநிதியையோ விஜயையோ இழித்துப் பேசும் இதே சங்கர் நாளை வேறு மாதிரி பேசக்கூடும். அதையும் பார்ப்போம்.
ஆனால் சங்கர் போன்றவர்கள் இதே போல தொடர்வது அவர்களுக்கான லாபத்துக்காகவே என்பதால் நாம் அவர்களைக் கண்டு கொள்ளவேண்டியதில்லை.

அதற்காக ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டிருக்க வேண்டியதில்லை. ஏனெனில் திமுகவினரோ பிற கட்சியினரோ விஜய் அஜித் ரசிகர்களோ அடித்துக்கொள்வதால் நஷ்டம் சங்கருக்கல்ல.
இதுபோன்றவர்களைப் புறக்கணிப்பதே அவர்களுக்கான விளம்பரங்களைக் குறைக்கும் ஒரே வழி.

அதன்பிறகே இதுபோன்ற இழிவான மலிவு விளம்பரங்களை விட்டுவிட்டு உண்மையான ஜர்னலிச திறமை வெளிவரும்.

ஏனெனில் அவர்களின் இழிபதிவுகளை நம் சுயலாபத்துக்காக ஆதரித்து அவர்களின் திறமையை மழுங்கடிப்பதும் நாமே.
சவுக்கு போன்றோர் தங்களுக்குரிய பொறுப்பை உணர்ந்து செயல்படவேண்டும். இல்லையன்றால் ஒதுக்கப்படுவார்கள் என்ற நிலையை நாம் உருவாக்கவேண்டும்.

தேர்தல் நேர அரசியல் களேபரங்களுக்காக உண்மையைப் பலிகொடுக்கவேண்டிய அவசியங்கள் இருக்காது.

பொறுப்புணர்வோம். புறக்கணிப்போம்.
ஆகவே சவுக்கு சங்கர் மாதிரி ஆளுங்க பேச்சைக் கேட்டுக்கிட்டு அடிச்சிக்கிட்டு உங்களோட உண்மையான இலக்கைத் தவறவிடாதீங்க மக்களே. புரிஞ்சுக்கங்க. நமக்கு தேர்தல் முக்கியம் அதிகாரம் முக்கியம். அப்றம் தான் எல்லாக் கருத்தும் செல்லுபடியாகும்.ஆட்டையைக் கலைக்குறவங்களை அடையாளம் கண்டுக்கங்க. டாட்.
You can follow @BlitzkriegKK.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.