விஜய் ஒரு பழைய சினிமா கை. ஒரு தயாரிப்பாளரோட இயக்குநரோட பையன்.அதுவும் சிக்கனமான ஸ்ட்ரிக்டான தயாரிப்பாளர் பையன்.

இன்னிக்குத் தேதிக்கு தியேட்டர்கள் லாபம் கொழிக்கக் காரணமா இருக்க வெகு சில நடிகர்களில் ஒருவர்.

தியேட்டர்கள் திரும்ப பழைய நிலைக்கு வரணும்னா மாஸ்டர் மாதிரி படங்கள் வரணும்.
தவிர இது சொந்தப்படம் எடுத்து முடிச்சு ஒரு வருசம் ஆகப்போகுது. ரிலீசுக்கு ஒரு மாசம் முன்னாடி லாக்டவுன் வந்ததால முழு பட்ஜெட்டும் முடிஞ்சுருக்கும். ரொம்ப நாள் ஒரு ஹைப்ப தக்கவைக்கமுடியாது. இது உதயா கொடுத்த பாடம்.

பொங்கல் இந்த முறை 4 நாள் லீவு. போகில ரிலீஸ் பண்ணா 5 நாள் கணக்கு.
ஓரளவு நல்ல ரிட்டர்ன் வந்துடும். ஏற்கனவே முடிஞ்ச சூரரைப் போற்று படத்துக்கு வட்டி கட்ட முடியாமத்தான் சூர்யாவே வேற வழியில்லாம OTTல ரிலீஸ் பண்ணார். இத்தனைக்கும் கன்டென்ட் அருமையா இருந்த படம். இப்பவரை தமிழ் OTT ரிலீஸ்ல அந்த ஒரு படம் தான் நல்ல ஹிட். மூக்குத்தி அம்மன் ஓரளவு ஹிட்.
இதெல்லாம் வச்சுப் பாக்கறப்ப ஒரு நடிகனா தயாரிப்பாளரா விஜய் தியேட்டர் ரிலீஸ்தான் தன் எதிர்காலத்தையும் மாஸ்டர்தான் தியேட்டர்களையும் காப்பாத்தும்னு 100% சீட்க்குக் கேட்டுருக்காப்ள.

ஆனா அதிமுக விஜய் கேட்டதாலதான் ஒத்துக்கிச்சுங்கறது ஒரு பாமரத்தனமான வாதம். ஏன்னா இது பல பேரோட கோரிக்கை.
அது மட்டுமில்லாம தேர்தல் நெருங்குறதால அரசுக்கும் சரி ஆளுங்கட்சிக்கும் சரி நிறைய பணம் தேவைப்படும். தேர்தல் தேதி அறிவிச்சதால இனி பெரிய திட்டம்லாம் அறிவிக்கமுடியாது. அப்ப அதுவரை கேளிக்கை வரி அரசுக்கும் பிற கட்டிங் ஆளுங்கட்சிக்கும் தேவை. அப்ப ஒவ்வொரு செக்மென்டா காசு வசூலிப்பாங்க.
முதல்ல கொரோனா சிகிச்சை டெஸ்டிங் கிட்னு எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஊழல் பண்ணிட்டாங்க. அப்றம் மில்கள் தொழிற்சாலைகள் கிட்ட கறந்தாங்க. இப்ப ஹோட்டல்கள்ல கொரோனா பரவுதுங்கறதால ஒரு ரவுண்டு போகுது. அடுத்து தியேட்டர்கள்தான். அதுக்குத் திறக்கணும். இதுதான் ஆளுங்கட்சியின் நோக்கம்.
ஆனா இதுக்காகவெல்லாம் 100% பாதுகாப்பற்ற சீட் நிரப்பும் கோரிக்கையை மக்களாக நாம ஏத்துக்கமுடியாது. அதே நேரம் இதுல விஜயை மட்டும் கேள்விகேட்டு தோசையைத் திருப்புவது சிலரோட உள்நோக்கம். பொதுவான பார்வை உள்ளவங்க கேக்கவேண்டியது அதிமுகவையும் அதன் ஆட்சியாளர்களையும்தான். ஆனா மாட்டாங்க.
ஏன்னா இது அவங்களோட அஜெண்டா. ஆனா ஒட்டுமொத்தத்துல இப்ப மொத்தப்பழியையும் தூக்கி சுமக்கப்போறது விஜய்தான். காசு போனாப் போகுதுன்னு சென்சிபிளா முடிவெடுக்காம தான் சார்ந்த சினிமா துறையை மட்டும் வைச்சு ரிஸ்க் எடுக்கறதால இதை விஜய் ஏத்துக்கிட்டுத்தான் ஆகணும். வேற வழியில்ல.
இதனால் உண்டாகும் விளைவுகளுக்கு வழக்கம்போல அதிமுக அரசு விஜயைத் தான் கைகாட்டும். ஏன்னா இப்போதைக்கு கொரோனாவையும் மீறி மக்களைத் தியேட்டருக்குக் கூட்டிட்டு வரப்போவது மாஸ்டர்தான். அது ஹிட்டானாலும் ஃப்ளாப்பானாலும் கெட்ட பேர் வாங்கப்போறது விஜய்தான். உண்மை இப்டித்தான் இருக்கு
ஆனா நாம திட்டவேண்டியது கேள்வி கேட்கவேண்டியது அரசாங்கத்தைத்தான். வெறுமனே விஜயைக் கேள்வி கேட்பது ரசிகர் சண்டைக்கும் அவர்கள் மாறி மாறி குடும்பத்தைத் திட்டுவதற்கும்தான் உதவும். பர்சனல் அஜென்டாவை விஜய் மேல் திணிப்பது இப்போதைக்கு செள்சிபிளானது அல்ல.

இது சினிமா பிரச்சனை அல்ல. அரசியல்.
50% சீட்களே போதுமானது. தியேட்டர்கள் வாழவேண்டுமென்றால் 5 நாள் வசூலுக்கு பதில் 10 நாள் வசூலை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அடுத்த நாளே டெலிகிராமில் படம் வந்துவிடும் என்பதால் இத்தனை அவசரம்.

அதே நேரம் விஜயை பகடையாக வைத்து ஆளுங்கட்சி ஆடும் ஆட்டத்தைக் குறைத்து மதிப்பிடவேண்டாம்.
இன்று விஜயை சப்போர்ட் செய்யும் அதிமுக காரர்கள் நாளைக்கே விஜயைக் குறிவைத்து அம்பெய்வார்கள். அப்போதும் திமுக போன்றவர்கள்தான் அதிமுகவை எதிர்த்துத் திட்டிக் கொண்டிருப்பார்கள். இதை விஜய் ரசிகர்கள் உணரவேண்டும். அதேபோல திமுகவினர் பிற ரசிகர்களும் இதை அதிமுகவுக்கு எதிராகவே பார்க்கவேண்டும்
விஜய் போன்ற ஒரு தொழில்முறை நடிகனை நொந்து பயனில்லை. வணிகர்கள் எப்போதும் வணிகர்களே.அவர்கள் நம் பங்காளிகள் இல்லை.நம் கஷ்டத்தில் அவர்கள் பங்கெடுத்துக் கொள்ளப் போவதில்லை.ஆனால் ஆளுங்கட்சிக்கு அந்த பொறுப்புணர்வு உண்டு. வழக்கம்போல அம்பைத் தவறான இடத்தில் குறிவைக்கவேண்டாம். தேவையற்ற வேலை.
தேர்தல் காலத்தில் சில எதிர்க்கட்சியினர் மாங்காய் புளித்ததோ வாய் புளித்ததோ என வருவோர் போவோரையெல்லாம் திட்டியே ஒதுக்கித்தள்ளாமல் முடிந்த வரை அணைத்துக்கொண்டு பயணிக்கவும்.ஏனெனில் இதில் தோற்றால் கூட அதிமுகவுக்கு மயிரே போச்சு என பாஜக மேல் பழியைப் போட்டுவிட்டு அங்கே சேர்ந்துவிடுவார்கள்.
இந்தத் தேர்தலை விட்டால் அடுத்து 2024 தான். அதிலும் பெரிய மாற்றம் வர வாய்ப்பு குறைவு. தமிழ்நாட்டுக்குஏ புத்தி வரவில்லையெனில் வட மாநிலங்களை நொந்து பயனில்லை. ஆகவே அம்பை சரியான இலக்கை நோக்கி எய்து கவனமாகக் கம்பு சுத்தவும். நேக்காக உருட்டத் தெரிந்தவர்கள் மட்டும் டீல் பண்ணுவது நலம்.
You can follow @BlitzkriegKK.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.