டிவிட்டரில் தமிழில் கீசும், தமிழ் சந்து என்று அழைக்கப்படும் அன்பு நண்பர்களுக்கு,

நான் மங்கை. பூர்வீகம் நெல்லை. இங்கு என் கணக்கை துவங்கி ஒரு 6 மாதங்கள் ஆகிறது. வந்தது முதல் தமிழ் சந்து பீட்டர் சந்து என்ற பிரிவினையை நான் பார்த்துள்ளேன். எனக்கு அது புரிந்தது இல்லை, கவலையும் இல்லை.
மாற்று பாலினதவரை, ஓரின சேர்க்கையாளர்களை மாத்து என்றும், வானவில் கோஷ்டி என்றும், ரெயின்போ கேங் என்றும் கூறப் பட்டு வருவதை பல முறை பார்தும் பாக்காமல் போய் இருக்கிறேன், அது உங்கள் சிலருள் உள்ள அறியாமை வெளிப்பாடு என்று நினைத்து அது குறித்து பேசாமல் இருந்துள்ளேன்.
ஆனால் சமீப காலமாக, தமிழ்சந்து என்று தங்களை அடையாளப் படுத்திக்கொள்ளும் சில கணக்குகள் பீட்டர்சந்து மக்களை கேலிக்கு உள்ளாக்கும் வகையில் பெயரின் அருகே வானவில் கொடி போட்டும் LGBT என்று அழைக்கப்படும் நேர் பாலினதவர் அல்லாத பிறரை நகைச்சுவை என்ற பெயரில் அவச் சொற்கள் சொல்வதையும் காண்கிறேன்
இது உங்களில் சிலருக்கு மகிழ்ச்சியை தந்து இருக்கலாம், நீங்கள் கலாய்க்க நினைக்கும் மக்களை கலாய்த்து அவர்களை காண்டு ஆக்கி இருக்கலாம், அவர்கள் மனமும் நொந்து இருக்கலாம், உங்கள் நோக்கமும் நடந்து இருக்கலாம். ஆனால் இதில் உள்ள தவற்றினை உங்களில் சிலர் அறியாமல் செய்து இருந்தால்,
அதை எடுத்து சொன்னால் புரிந்து திருத்திக் கொள்ள சிலர் விழையலாம் என்று எண்ணி இதனை பதிவிடுகிறேன். இதை புரிந்து ஏற்றுக் கொண்டு திருத்திக் கொண்டாலும் சரி, எடுத்து சொல்ல முற்பட்ட என்னை கலாய்த்து என்னை மனம் நோகச் செய்ய முயன்றாலும் சரி, நஷ்டம் என்பது எனக்கு இல்லை, விடயத்துக்கு வருவோம்.
வானவில் கொடி என்பது, பீட்டர் சந்தின் அடையாளம் அல்ல. அது ஒரு ஒடுக்கப் பட்ட சமூகத்தின் அடையாளம். அவர்கள் சமூக தடையை மீறி வெளியே வர ஒரு கருவி. அதை இவ்வாறாக சிரியதாக்கி, பிறரை கலாய்க்க மட்டுமே உங்கள் போலி அடையாளமாக அதை எடுத்து நடப்பது மிகவும் நோகத் தக்க செயல்.
நீல நிறம் எப்படி சாதி அடக்குமுறைக்கு எதிரான ஒரு போராட்டமோ, வானவில் வண்ணமும் அதன் கொடியும் சிறுபான்மை என்று பார்க்கப்பட்டு அடக்கு முறைக்கு ஆளக்கப்படும் ஒரு சமூகத்தின் அடையாளம். அதனை போலியாய் தருவித்து, அதன் மூலம் தேடப்படும் நகைச்சுவை மனிதமற்றது.
வானவில் என்பது வெறும் கொடி மட்டும் அல்ல, Elite தமிழ் மக்களின் தனித்த போக்கும் அல்ல. அது உலகம் தழுவி இருக்கும் அடையாளம் மறுக்கப் பட்டு, ஒடுக்குமுறைக்கு ஆளாக்கபடும் மனிதர்களின் அங்கீகாரம். அதற்கு உங்களால் ஆதரவு அளிக்க முடியவில்லை என்றாலும், தயை கூர்ந்து கேலிக் கூத்து ஆக்காதீர்கள்.
பெரியார் வாழ்ந்த மண் இது, கலைஞர் திராவிடம் பேசிய நாடு இது. அத்தகைய முன்னோர் இருந்தும் எங்களுக்கு இப்போது எஞ்சி இருப்பது மாத்து, அவளா/அவனா நீ, உசு போன்ற மட்டமான சொற்கள் தான். அதையும் தாங்கிக் கொண்டு எங்கள் வாழ்வில் ஒரு அடையாளம் காண போராடிக் கொண்டு இருக்கிறோம். அதற்கு உறுதுணை என
இருக்க முடியவில்லை என்றாலும், எங்களை கேலிப் பொருளாக்கி, எங்கள் அடையாளத்தை ஒரு விளையாட்டு பதமாக்கி உங்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ சமூகத்தில் எங்களுக்கான இடத்தை, அங்கீகாரத்தை அடையும் வழியை அடைக்காதீர்கள்.

வலியுடனும், புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடனும்,

மங்கை 🙏.
இது சார்ந்தோரை சேர்ந்தடைய சில தமிழ் சந்து சார்ந்த நபர்களை tag செய்கிறேன், சிரமத்திற்கு மனிக்கவும்.

@kryes @NeoDravidian @vasanttan @RjAadhi2point0 @pandamindvoice @Ajumplakdibampa @paapabutterfly @ikaipullai @kelviyalan
சேர்க்கை, எனக்கு தெரிந்த சக LGBT மக்கள்
@wolfiehere5 @yours_nottruly @tubelightuu
You can follow @kothuprotta.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.