இராமேஸ்வரம்

சுவாமி : இராமநாதசுவாமி, ராமலிங்கேஸ்வரர்.
அம்பாள் : பர்வத வர்த்தினி, மலைவளர்காதலி, விசாலாட்சி, சீதை.

தீர்த்தம் :

கோவிலுக்குள் 22 தீர்த்தங்கள் உள்ளன.
🇮🇳🙏1
தலச்சிறப்பு : இராமநாதசுவாமி திருக்கோவில், இந்துமதக் கோவில்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இறைவனே இறைவனை வழிபட்ட பெருமை கொண்ட கோவில் ஆகும். இத்தலம் பாண்டிய நாட்டில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும். 🇮🇳🙏2
இராமேஸ்வரம் இராமாயணகால வரலாற்றையுடைய கோவிலாக இருந்தாலும், இந்த கோவிலின் தற்போதைய வடிவமைப்பு 12-ம் நூற்றாண்டில் பாண்டியர்களால் கட்டப்பட்டது என நம்பப்படுகிறது. இத்திருக்கோவிலின் புராணம் மற்றும் கட்டிட வரலாறு என இரண்டுமே சிறப்பானது

🇮🇳🙏3
இச்சந்நிதியில் சீதாதேவியால்
உருவாக்கப்பட்டு இரமபிரானால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இராமலிங்கர் சிவலிங்கத் திருமேனியுடன் காட்சி அளிக்கிறார். இந்த சிவலிங்கத் திருமேனியில் அனுமனின் வால் தழும்பு இன்றும் காணலாம்.

🇮🇳🙏4
தினமும் காலை 5.00 மணிக்கு ராமநாதசுவாமி சன்னதியில், ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்படிக லிங்கத்திற்கு அபிஷேகம் நடக்கிறது. இந்த அபிஷேகத்தை தரிசிக்க கட்டணம் உண்டு. 🇮🇳🙏5
பர்வதவர்த்தினி அம்பிகை பீடத்திற்கு கீழே ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஸ்ரீசக்ரம் இருக்கிறது. சக்தி பீடங்களில் இது "சேதுபீடம்" ஆகும்.

🇮🇳🙏6
இந்த ஆலயத்தின் மற்றொரு சிறப்பு 1212 தூண்களைக் கொண்ட இக்கோவிலின் மூன்றாம் பிரகாரம் ஆகும். உலகிலேயே மிக நீளமான பிரகாரம் என்ற பெருமையைப் பெற்ற இப்பிரகாரம் உலகப்பிரசித்தி பெற்றதாகும். 🇮🇳🙏7
முத்துராமலிங்க சேதுபதி அவர்களால் 1740 - 1770 ஆண்டுகளில் இந்த மூன்றாம் பிரகாரம் கட்டி முடிக்கப்பட்டது.

சிவபெருமான் ஜோதி ரூபமாக காட்சியளிக்கும் 12 தலங்கள் இந்தியாவில் உள்ளன. அதில் ஒன்று இராமேஸ்வரம். மற்ற 11 தலங்களும் பிற மாநிலங்களில் உள்ளன. 🇮🇳🙏8
விபீஷணன், இராமருக்கு உதவி செய்ததன் மூலம் இராவணனின் அழிவிற்கு அவனும் ஒரு காரணமாக இருந்தான். இந்தப் பாவம் நீங்க, இங்கு இலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டான். அவனுக்கு காட்சி தந்த சிவன், அவனது பாவத்தைப் போக்கியதோடு, ஜோதி ரூபமாக மாறி இந்த இலிங்கத்தில் ஐக்கியமானார். 🇮🇳🙏9
இதுவே, “ஜோதிர்லிங்கம்” ஆயிற்று. இந்த இலிங்கம் சுவாமி சன்னதி பிரகாரத்தில் மேற்கு நோக்கி இருக்கிறது.

இந்தியாவில் உள்ள புண்ணியத் தலங்களுள், மிகச் சிறப்பாகக் கருதப்படும் நான்கு தலங்கள், வடக்கே பத்ரிநாதம், கிழக்கே ஜகந்நாதம், மேற்கே துவாரகநாதம், தெற்கே ராமநாதம். 🇮🇳🙏10
இவற்றுள் முதல் மூன்று தலங்களும் வைணவத் தலங்களாகும். நான்காவது தலமான ராமநாதம் ஒன்றே சிவதலம் ஆகும். இத்தலத்தில் ராமநாதர் ஜோதிர்லிங்க மூர்த்தியாக திகழ்கிறார். சிவன் சன்னதியில் பெருமாளுக்குரிய தீர்த்தம் பிரசாதமாக தரப்படுவது சிறப்பு.

🇮🇳🙏11
காசி, இராமேஸ்வரம் யாத்திரை செல்பவர்கள் முதலில் இராமேஸ்வரத்தில் அக்னி (கடல்) தீர்த்தத்தில் நீராடி, மணல் மற்றும் தீர்த்தம் எடுத்துக்கொண்டு காசி செல்ல வேண்டும். கங்கை தீர்த்தத்தில் மணலை போட்டுவிட்டு, விஸ்வநாதருக்கு அக்னி தீர்த்த அபிஷேகம் செய்ய வேண்டும். 🇮🇳🙏12
அங்கிருந்து கங்கை தீர்த்தம் எடுத்து வந்து, இராமநாதருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். இவ்வாறு ராமேஸ்வரத்தில் துவங்கி ராமேஸ்வரத்தில்தான் தீர்த்த யாத்திரையை முடிக்க வேண்டும். 🇮🇳🙏13
சிலரால் இது முடிவதில்லை. காசி செல்ல முடியாதவர்களுக்கு வசதியாக, கோயிலிலேயே கங்கை தீர்த்தம் விற்கப்படுகிறது. மானசீகமாக காசி விஸ்வநாதரை வணங்கி, இந்த தீர்த்தத்தை இராமநாதருக்கு அபிஷேகம் செய்யக்கொடுக்கலாம்.

🇮🇳🙏14
இராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தம் என்று கூறப்படும் சமுத்திரக் கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணங்கள், பிதிர்கடன்கள் நிறைவேற்றப்படுகின்றன. இராமநாதசுவாமி திருக்கோவிலில் உள்ள இருபத்தி இரண்டு கிணறுகளே அதன் தனிச்சிறப்பு ஆகும். 🇮🇳🙏15
இந்த கிணறுகள் அனைத்தும் இராமரால் உருவாக்கப்பட்டவை என்று நம்பப்படுகிறது. இராமர் எய்த அம்புகள் விழுந்த ஒவ்வொரு இடத்திலும் ஒரு கிணறு உருவானது. இந்தக் கிணறுகள் ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தவை. 🇮🇳🙏16
அருகருகே இருந்தபோதும், ஒவ்வொரு கிணற்றின் நீருக்கும் சுவை, நிறம், உப்புத்தன்மை, அடர்த்தி ஆகியவை மாறுபடுகிறது. 🇮🇳🙏17
புண்ணிய தீர்த்தங்களான இந்த இருபத்து இரண்டு கிணறுகளிலும் நீராடிவிட்டு, இறைவனை வழிபட்டால், நமது பாவங்கள் அனைத்தும் கரைந்தோடி நமக்கு மோட்ச ம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

🇮🇳🙏18
தலவரலாறு :

இலங்கையில் ராமாயண யுத்தம் முடிந்து, சிவபக்தனான ராவணனை மாய்த்த பின் ராமர் சீதையுடன் திரும்பி வரும் வழியில், இராவண சம்ஹாரத்தினால் தனக்கேற்பட்ட பிரம்மஹத்திதோஷம் நீங்க அகத்திய முனிவரிடம் யோசனை கேட்டார். 🇮🇳🙏19
அகத்திய முனிவர் தோஷம் நீங்க ராமேஸ்வரம் கடற்கரையில் சிவலிங்கத்தை பூஜை செய்து வழிபட்டால் பிரம்மஹத்திதோஷம் நீங்குமென்று சொல்ல, ராமர் ஆஞ்சநேயரிடம் கைலாச பர்வதத்திற்கு சென்று சிவலிங்கம் கொண்டு வரும்படி கூறினார். 🇮🇳🙏20
ஆஞ்சநேயர் தனக்கு ஒன்றும், இராமருக்கும் ஒன்றுமாக இரண்டு லிங்கங்களைப் கொண்டு வரும் பொழுது காலதாமதம் ஆனது.

சிவலிங்கப் பிரதிஷ்டைக்கு குறிப்பிட்டிருந்த நேரத்திற்குள் ஆஞ்சநேயர் திரும்பி வராததால் சீதை கடற்கரையில் உள்ள மணலால் ஒரு சிவலிங்கம் உருவாக்கித் தந்தாள். 🇮🇳🙏21
இராமபிரான் அந்த சிவலிங்கத்தை குறித்த நேரத்தில் பிரதிஷ்டை செய்து தனது பூஜையை முடித்தார். இத்தலத்தில் இராமர் முதலில் பிரதிஷ்டை செய்த இராமலிங்கேஸ்வரரே மூலவராக உள்ளார்.

🇮🇳🙏22
ஆஞ்சநேயர், தான் வருவதற்குள் மணலால் ஆன ராமலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டதைக் கண்டு கோபமுற்று தன் பலம் கொண்ட வாலால் சுற்றி பெயர்த்து எடுக்க முயன்று, வால் அருந்து சுமார் 37 கி.மீட்டர் தூரத்தில் மேற்கே போய் விழுந்துள்ளார். 🇮🇳🙏23
அந்த இடமே, ராமநாதபுரதிற்கும் இடைப்பட்ட பகுதியாகும் (வால்+அருந்த+தரவை) வாலாந்தரை ஆயிற்று.

இராமபிரான் ஆஞ்சநேயரை சமாதானப்படுத்தி, ஆஞ்சநேயர் கொண்டுவந்த விஸ்வலிங்கத்தை, முதலில் பிரதிஷ்டை செய்த ராமலிங்கத்திற்கு அருகில் பிரதிஷ்டை செய்தார். 🇮🇳🙏24
மேலும் அனுமன் கொண்டுவந்த விஸ்வலிங்கத்திற்கே முதற் பூஜை நடைபெற வேண்டும் என்றும் கட்டளையிட்டார். அதன்படி, இப்போதும் விஸ்வநாதருக்கு பூஜை செய்யப்பட்ட பின்பே, சீதாவால் உருவாக்கப்பட்ட இராமநாதருக்கு பூஜை நடக்கிறது. 🇮🇳🙏25
அனுமன் தாமதமாக கைலாயத்திலிருந்து கொண்டு வந்த லிங்கத்திற்கு, “விஸ்வநாதர்” என்று திருநாமம் சூட்டப்பட்டுள்ளது. இராமநாதர் சன்னதிக்கு இடப்புறம் விஸ்வநாதர் சன்னதி உள்ளது. விசாலாட்சிக்கும் தனி சன்னதி உள்ளது.

🇮🇳🙏26
கோயிலுக்கு வருபவர்கள் விஸ்வநாதரை தரிசித்த பின்பே, இராமநாதரைத் தரிசிக்க வேண்டும். கைலாய மலையிலிருந்து ஆஞ்சநேயர் தனக்காக கொண்டு வந்த மற்றொரு இலிங்கம் கோயில் நுழைவு வாயிலின் வலப்பக்கம் உள்ளது.

🇮🇳🙏27
இவ்வாறு இராமபிரானால் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் அன்று முதல் இராமனால் உண்டாக்கப்பட்ட ஈசனை உடைய ஊர் இராமேஸ்வரம் என்று பெயர் பெற்றது. தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் பாக் ஜலசந்தியில் உள்ள ராமேஸ்வரம் தீவில் ராமநாதசுவாமி ஆலயம் அமைந்துள்ளது. 🇮🇳🙏28
பல ஆண்டுகளாக பாம்பன் ரயில் பாலம் மூலமாகத்தான் இராமேஸ்வரம் செல்ல முடியும் என்று இருந்த நிலை மாறி இப்போது பாம்பன் சாலை பாலமும் இருப்பதால் எளிதாக இராமேஸ்வரம் சென்று வர முடியும்.

🇮🇳🙏29
இத்தலமானது மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் என்ற மூன்றுக்கும் கீர்த்தி வாய்ந்தது. இத்தலத்தில் உள்ள சுவாமிகள் இராமேஸ்வரர், ராமலிங்கேசுவரர், ராமநாதர் என்ற பல பெயர்களாலும் அழைக்கப்படுகிறார்.

வாழ்க பாரதம் 🇮🇳🙏
வளர்க பாரதம் 🇮🇳🙏🇮🇳
You can follow @Raamraaj3.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.