Thread:

Why context matter! @Chinmayi

கேள்வி:

இன்றைய சூழலில் பெண்கள் மீதான பாலியல் வன்முறை அதிகரிக்குது... Media person-ஆ, இரு பெண்களின் தகப்பனாய், இன்றைய பெண்களுக்கு என்ன ஆலோசனை கூற விரும்புறிங்க? (1/n)
Interpretation:

‘அதிகரிக்குது-னு சொல்ல முடியாது... இன்னைக்கு media அதிகமா இருக்கறதால அதுக்கான வெளிச்சம் அதிகமா இருக்கு... அத பாத்து பயப்பட தேவ இல்ல... நமக்காக இப்ப ஊடகங்கள் இருக்கு-னு சந்தோழ படுங்க... தைரியமா இருங்க’ அப்டின்றார்... (2/n)
‘இது இன்னைக்கு நேத்து ஆரம்பிச்ச விஷயம் இல்ல.. பெண்களுக்கு எதிரான மனநிலை நமக்கு காலம் காலமா தலைமுறை தலைமுறையாய் ஊட்டப்பட்டு வருது. மகாபாரதத்துல பொண்டாட்டிய வச்சி சூதாடியதை உன்னத கதையா படிக்கற ஊர்ல பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை இல்லாம இருக்குமா என்ன, அப்டி தான் இருக்கும்... (3
இதெல்லான் நாம மாத்தணும்.. மாறிட்டு வருது.. அந்த மாற்றத்துக்கான அறிகுறி தான் செய்திகளா ஊடகத்துல வருது... ஊடகத்துல அதிகமா வருது-ன்றதுனால, அதிகமா இருக்குன்னு அர்த்தம் இல்ல... நாம வெளிச்சம் போட்டு காட்ட ஆரம்பிச்சிட்டோம்... (4/n
இன்னும் இருக்கற கொஞ்சம் நஞ்சத்தையும் வெளிச்சம் போட்டு காட்டனும்... பயப்பட வேண்டாம்’ ன்றார்...

‘அடுத்தவங்க சொல்ற மாரி ‘முகத்த மூடிக்கோங்க, வீட்டுக்குள்ளையே இருங்க’-னு சொல்ல மாட்டன்... தைரியமா இருங்க... அதுக்காக அவங்க கூட மல்லு கட்டுங்கன்னு சொல்லல... (5/n
சில பேரு தற்காப்பு கலை கத்துக்கோங்க-ன்றாங்க.. என்ன பொறுத்த வரை அது ஒரு lowest form of defense… அடிச்சிடலாம், உதச்சிடலான்னு பேசுவாங்க... அதெல்லான் நடைமுறைக்கு சரி வராது... அஹிம்சையை உணருங்க’ னு (6/n
அவர் பேச்ச தொடர்றதுக்கு முன்னாடி, ஏன் தற்காப்பு கலை எல்லா நேரங்கள்லயும் உதவாது–ன்றத இன்னும் புரியற மாரி விளக்கனுன்னு நெனைக்கறார்...

அதுக்காக ஒரு பொறுக்கியோட attitude-அ உதாரணமா எடுத்துக்கறார்...

‘ஒரு பொண்ணு தனியா போகும்போது, 5 பொருக்கி பசங்க வம்பு இழுக்கறதுக்குனே வறாங்க... (7/n
அவங்க கிட்ட react பண்ணாதிங்க... எதிர்வினை காட்னிங்கனா அது உங்களுக்கே ஆபத்தா அமையலாம்... நீங்க துப்பனா அவன் பின்னாடியே வருவான், கல்ல எரிஞ்சா கைய புடிக்க வருவான்... நீங்க உங்க கண்ணியம் தவற விடாதிங்க... பாதுகாப்பா இருங்க... (8/n
தற்காப்பு-னு நீங்க அருவா கம்பு எடுத்துட்டு போறது லான் முடியாது... உங்க தன்னம்பிக்கையை பாத்தே பயந்துடுவான் பொருக்கி பய... உங்க மனசு சுத்தமா இருக்கும் பட்சத்தில் கிட்ட யாரும் வரவே மாட்டாங்க’ ன்றார்... (9/n
அவரு சின்ன pause எடுக்கும்போதே நெறியாளர் அடுத்த கேள்விக்கு போயிட்றார், அவர் எப்படி முடிச்சிருப்பாரு –ன்றத விட்ருவோம்.

இது வரைக்குமே அந்த 5 பொறுக்கிகள் உதாரனத்த தான் சொல்றார்.... தற்காப்பு கலை இல்லாமலே இந்தமாரி ஆளுங்க கிட்டேந்து உங்களை காப்பாத்திக்கலாம் அப்டின்றார்... (10/n
இந்த உதாரணம் தாண்டி வேற கற்பனைக்கு இது பொருந்தாது.

இதுல ‘உங்க மனசு சுத்தமா இருக்கும் பட்சத்தில் கிட்ட யாரும் வரவே மாட்டாங்க’ னா, அது என்ன மனசு சுத்தம்? அப்ப பாலியல் குற்றங்களுக்கு பெண்கள் தான் காரணமா? அப்டின்ற கேள்வி வருது... (11/n
Context ஓட சேத்து படிச்சா, அப்பவும் மனசு சுத்தம் ன்னா என்ன சொல்ல வரார்... அப்டின்ற கேள்வி வருது...

சரி, சுத்தம்-ன்ற வார்த்தைக்கு cleanliness-அ வச்சி பாப்போம்... மனசுல அழுக்கு-னு சொல்றாருன்னு பாத்தா... அந்த ஒரு வாக்கியம் தனியா படிச்சா அர்த்தம் தருது... (12/n
முந்தய வாக்கியத்தோட சேத்து படிச்சா பொருள் தரல... absolutely out of context-ஆ இருக்கு...

இல்ல சுத்தம்-கு Free ன்ற வார்த்தைய பொருத்தி பாப்போம்... free of anything… பயம் இல்லாம, பதட்டம் இல்லாம, reaction இல்லாம... இது கொஞ்சம் contextஓட பொருத்தமா இருக்கு... (13/n
இத விட என் புரிதல், கண்ணியம் தவறாமல் நடக்கறதயே ஒரு முதிர்ந்த நிலையா, சிறப்பு அந்தஸ்து குடுத்து சுத்தம் னு சொல்றார்-னு தோணுது...

கண்ணியம் காத்து, தன்னம்பிக்கையா இருந்திங்கனா அவன் ஓடிடுவான் அப்டின்னு சொல்றதா தான் பொருள் படுது... (14/n
அது என்ன கண்ணியம்? அப்ப ஆண்கள் செய்ற தப்புக்கு பூரா பெண்கள் கண்ணியம் தான் காரணமா? அப்டின்னு நீங்க கேட்டிங்கனா... சரியான கேள்வி...

ஆனா அவர் அப்டி சொல்லல... இங்க தான் why context matter-ன்றத வலியுறுத்தி சொல்ல வேண்டியதா இருக்கு... (15/n
சின்மயி அவர்களே நீங்க மேற்கோள் காட்டி ஆக்ரோழபட்ட பதிவுல, இருக்கற கேள்வி...

“பெண்களின் மீதான பாலியல் வன்முறைகளை தடுப்பது எப்படி என்ற கேள்விக்கு கமல் அளித்த பதில்” னு இருக்கு...

இது சுத்த பொய்!

அப்டி ஒரு கேள்வியே வைக்கபடல? (16/n
நீங்க இந்த கேள்விய கேட்டு, அதுக்கு அவர், ‘பெண்கள் கண்ணியம் காத்தால் தடுக்கலாம்’ னு சொன்னா, நீங்க சொன்ன குற்றச்சாட்டு சரி...

அதனால தான் தொடங்கும்போதே அந்த கேள்வியோட தொடங்கனன்... (17/n
“இன்றைய சூழலில் பெண்கள் மீதான பாலியல் வன்முறை அதிகரிக்குது... Media person-ஆ, இரு பெண்களின் தகப்பனாய், இன்றைய பெண்களுக்கு என்ன ஆலோசனை கூற விரும்புறிங்க?”

அதாவது “ஆண்கள் கிட்டேந்து பெண்கள் தங்களை பாதுகாக்க பெண்கள் என்ன செய்யலாம்?” அப்டின்றது தான் கேள்வி... (18/n
‘பெண்களின் மீதான பாலியல் வன்முறைகளை தடுப்பது எப்படி?’ ன்றது கேள்வி அல்ல!

இந்த ரெண்டு கேள்விக்கும் பெரிய வித்யாசம் இருக்கு... இங்கயே விவாதம் முடிஞ்சிடுது, இருந்தாலும் let me reiterate…

அவர் சொல்றார்..

‘தன்னம்பிக்கையா இருங்க, ஊடகங்கள் இருக்கு உபயோகிச்சிகோங்க, (19/n
இதுக்கு பயந்து வீட்லயே அடங்கி கெடக்காதிங்க,தைரியமா இருங்க,அதுக்காக எனக்கு தைரியம் இருக்குனு பொருக்கிகிட்ட போய் மல்லுகட்டவேணாம்,அதனால உங்களுக்கு ஆபத்து அதிகமாகலாம்,அவன பொருட்படுத்தாதிங்க,உங்கள பாதுகாக்க அரசுலான் வராது,வீட்ல பெத்தவங்க இருக்காங்க,தயவு செஞ்சி வீடு போய் சேருங்க’னு (20
ஒரு தகப்பனா, ‘என் பொண்ணு கிட்ட இப்டி தான் சொல்வன், அதையே தான் உங்க கிட்டையும் சொல்றன்’-ன்றார்...

எனக்கு தெரிஞ்சு எல்லா அப்பா அம்மா-வும் இத தான் சொல்வாங்க... யாரும், ‘அவன விடாத ஒரு கை பாத்துடு’ னு சொல்ல மாட்டாங்க...

இது ஒரு தகப்பனா சொல்றார்... (21/n
மறுபடியும் சொல்றன், ஒரு தந்தையா நீங்க என்ன advise குடுபிங்க-னு தான் கேட்கறாங்க... எது சரி தவறு தீர்ப்பு சொல்லுங்க-னு கேட்கல!

இன்னொரு கமல்ஹாசன் இருக்கார் அந்த பதில்-ல... எல்லாருக்கும் பல personality இருக்க தான செய்யுது...

அந்த கேள்வில, (22/n
‘பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிக்குது, பெண்கள் இந்த சமூகத்துல எப்டி வாழறது’னு ஒரு அச்சத்த வெளிப்படுத்தறாங்க... அந்த அச்சத்தின் வெளிப்பாடு தான் குற்றம் செய்றவங்கள விட்டுடு, அவங்க தண்டிக்க பட மாட்டாங்க-ன்றத உணர்ந்து.. ‘எங்கள எப்டி பாதுகாத்துக்கறது?’ அப்டின்னு கேட்கறாங்க! (23
அதுக்கு அவங்கள பயப்படாம இருக்க வைக்க சொல்றார்... ‘நீங்கலான் நெனைக்கற மாரி அதிகமான குற்றங்கள் இல்ல, கொஞ்சமா தான் இருக்கு, அத வெளிச்சம் போட்டு காட்றதால அதிகமா இருக்கற மாரி தெரியுது, இதுக்கு பயந்து வீட்ல இருக்க கூடாது, (24/n
நானே ஒரு காலத்துல இந்த மாரி பொண்ணுங்கள பாத்து விசில் அடிச்சிட்டு இருந்தவன் தான், என் அனுபவத்துல சொல்றன், நீங்க தைரியமா நின்னாலே பசங்கலான் ஒன்னுக்கு போயிடுவானுங்க... இதுகெல்லான் நீங்க தற்காப்பு லான் கத்துகிட்டு போக வேணா, உங்க தன்னமிக்கை ஒன்னே போதும்’ ன்றார்... (25) To be continued
அவங்க கிட்ட போயி, ‘என்ன நீ உன்ன பாதுகாக்கரத பத்தி பேசற? நீயெல்லான் ஒரு பொண்ணா நீ? வேலு நாச்சியார், லட்சுமி சாகல் வாழ்ந்த ஊர்ல இப்படி ஒரு பேடியா?’ னு கேட்க முடியாது... நீங்க வேற அவங்க வேற-ங்க... அத புரிஞ்சிக்கோங்க!

அவங்களுக்கு என்ன பதில் சொல்லனுமோ அத தான் சொல்லிருக்கார்... (26/n
handbag-ல அத வச்சிக்கோ, இத வச்சிக்கோ-ணா பயந்துடுவாங்க...

அவங்க அச்சத்த போக்கறதுக்கு என்ன சொல்லனுமோ, அவங்க தைரியமா road-ல நடக்க என்ன சொல்லனுமோ அத சொல்லிருக்கார்... (27/n
‘நீங்க இதுக்குன்னு மெனக்கட்டு தற்காப்பு கலை கத்துகிட்டு குஸ்தி செய்ய வேணாம், அதுக்குல்லான் அவசியம் இல்ல பயப்படாதிங்க, உங்க கூடவே பொறந்த கண்ணியம் ஒன்னு போதுங்க உங்கள காப்பாத், தைரியமா இருங்க’ ன்றார்...

இதுல என்ன தப்பு-ன்றிங்க?

இதுல எங்கங்க victim blaming வருது? (28/n
கண்ணியம் காக்கறது நல்லதுன்றதுனால பொருக்கிங்களுக்கு ஆதரவா பேசறதாவோ, victim-அ blame பண்றதாவோ அர்த்தம் இல்ல-ங்க...

simple-ஆ சொல்லனுனா, twitter-ல abusive-ஆ பேசறான்னு நீயும் அப்டி பேசாத, அப்பறம் ஆளாளுக்கு மாத்தி மாத்தி திட்டிக்க வேண்டியதா இருக்கும்... (29/n
நீ மரியாதையா பேசு, உன்ன பாத்து அவனும் எறங்கிடுவான் னு சொல்ற மாரி தான்...

இந்த conversation எடுத்துகோங்க... நீங்க பண்ணது abuse...

உண்மையா பொய்யா-னு தெரியாம ஒருத்தர character assassin பண்றிங்க... அத அப்டே like பண்றது, share பண்றதும் ஒரு abuse... (30/n
edit பண்ண video னு தெரியும், அந்த video-வ பாத்தாலே பொய்யான கேள்வி-னு தெரியும், அந்த கேள்விய வச்சி தான் இந்த குற்றச்சாட்டையே எழுப்பறாங்க, அத கூட பாக்காம accuse பண்றீங்க... இது எவ்ளோ பெரிய abuse... (31/n
U r abusing yr fame,u r abusing others fame,abusing people’s trust, abusing d technology(பொய்ய பரப்ப use பண்றிங்க) இப்டி பல abuse பண்ற உங்ககிட்ட நான் abuse பண்ணாம கண்ணியமா நடந்துக்கரன் பாருங்க.. அத தான் அவர் சொல்றார்..

என்கிட்டயும் சொல்றார், ‘தம்பி கண்ணியம் காக்கணும் பா’னு. (32
நான் பொறுமையா பேசனா, நீங்க யோசிக்கவாது ஒரு வாய்ப்பு இருக்கு... நானும் abuse பண்ணா, நீ என்னடா சொல்றது நான் என்னடா கேட்கறதுன்னு நெனைக்க மாட்டிங்க?

எல்லா abuse-அயும் தவிர்த்தா தான், அதோட சேந்து பெண்களுக்கு எதிரான abuse-ம் ஒழியும்... (33/n
மத்த abuse-லான் நானே பண்ணுவன், அதுக்கு தீனி போட்டு வளப்பன்... பெண்களுக்கு எதிரா மட்டும் abuse நடக்க கூடாது-னு நீங்க நெனச்சிங்கனா.... its not gonna happen… PERIOD!

பெண்களுக்காக குரல் குடுக்கறன்ன உங்க பொய்யான பதிவு, யாருக்கு உதவுச்சு தெரியுங்களா... (34/n
எப்டியாது எதையாது பொய்சொல்லி,வீண்பழி சுமத்தி ஆட்சியபுடிச்சு கொள்ளைய தொடரனும்னு நெனைக்கற ஒரு கூட்டத்துக்கு.

உங்களுக்கு தெரியாமலே நீங்க அவங்ககிட்ட காசு வாங்காம வேல செஞ்சிருக்கிங்க!

நடக்காத ஒரு விஷயத்த பத்தி பொய்யா பதிவு போட்டாரே,அவருக்கு உண்மையிலேயே பெண்கள்மீது அக்கறை இருந்தா,(35
நேத்து, அவங்க கட்சிக்காரங்க ஒரு அதிமுக பொம்பளைய ஓட விட்டு அடிக்கறாங்க... எதுக்கு? தன்ன திமுக ஆளுன்னு சொல்லி கூடத்துல கலந்துட்டு கேள்வி கேட்டதால... (மன்னிக்கணும் தவறான வார்த்தைக்கு) ‘கண்டாற ஒழி, தாயோளி, ஒம்மால’ அது இது னு வசை பாடி தொறத்தறாங்க... அது அவருக்கு கண்ணு தெர்ல... (36
கேட்காத கேள்விக்கு இவரா பொய்யா எழுதி, பெண்களுக்கு எதிரானவர் னு மக்கள் மத்தியில பதிய வைக்கனுன்னு பண்ண அரசியல் drama-ல உங்கள ஒரு cheerleader ஆ ஆக்கிட்டாங்க...

நீங்களும் அவங்க சொல்றதயே வேதவாக்கா எடுத்துட்டு ஆக்ரோஷப்படுறிங்க? (37
ஒரே ஒரு request-ங்க... ஒரு பதிவுக்கு பின்னாடி உண்மை இருக்கா-னு யோசிங்க... அது பின்னாடி எவ்ளோ அரசியல் இருக்கு-னு புரிஞ்சிக்கோங்க... இந்த குற்றச்சாட்டுக்கு அவர் தகுதியானவரா, அந்த மாரி பாலியல் குற்றத்துக்கு பெண்கள் காரணம்னு அவர் பேசுவாரா, பேசிருக்காரா, கொஞ்சம் யோசிங்க... (38/n
நீங்க ஒரு நிமிழம் யோசிச்சிருந்திங்கனா தப்பான ஒரு பதிவு பல பேர போய் சேறாம பாத்துருக்கலாமே!

ஏற்கனவே ஒரு தவறான செய்திய, தவறான accusation வச்சிடிங்க-னு ஒருவாட்டி உங்க மேல கேள்வி எழுப்பனப்ப (நான் இல்ல)... (39/n
‘ஒரு பெண்ணுக்கு பாதிப்பு-ணா உடனே அத உண்மையா நெனச்சு தான் அத பதிவிடுவன், அது ஆராய வேண்டிய அவசியம் இருக்குன்னு எனக்கு தோனல. அவங்களுக்கு என்னால ஆன உதவிய செய்யணுன்னு நெனப்பன்’... அப்டின்னு சொல்லிருக்கிங்க... (don’t remember d exact phrase).. (40/n
இந்த மாரி அடுத்தவங்க சொல்றதுல உண்மை இருக்கா, இல்லையா... அவங்க யார பத்தி சொல்றாங்க.. அந்த ஆளு அப்படிபட்டவரா... எதையுமே யோசிக்க மாட்டன்-னா... அப்ப இது தான் பெண்களுக்கு ஆதரவான குரலா?

நாளைக்கு நீங்க உண்மையிலேயே புலி வருதுன்னு சொன்னா அத மக்கள் நம்ப வேணாமா? (41/n
உங்கள விடுங்க... இந்த மாரி சும்மா சேற்ற வாரி இறைக்கரதால யாருக்கு கஷ்டம்னு நெனைக்குரிங்க? உண்மையிலேயே யாராது ஒரு serial abuser-அ பத்தி பேசுவாங்க... அப்ப உங்கள காரணம் காட்டி பொதுப்படையா எல்லா குற்றச்சாட்டையும் ஒன்னும் இல்லாம பண்ணிடுவாங்க... (42/n
அத யாரு பண்ணுவாங்க தெரியுங்களா, இப்ப ஒரு கூட்டத்துக்கு promote பண்ணிங்களே அவங்க பண்ணுவாங்க...

இதெல்லான் நீங்க யோசிக்கறது இல்லையா, இல்ல r u conveniently disregarding it?

இது எல்லாத்தையும் கேட்டுட்டு, out of context-ல, அது எப்டி பெண்கள இப்டி சொல்லலாம்-னு கேட்டிங்கனா... (43/n
இது பெண்களுக்கு மட்டும் பொருந்தாது ஆண்களுக்கும் தான்... சில/பல நேரங்கள்ல நம்ம மேல தப்பே இல்லனாலும், எதிர்வினை ஆற்றாம கடந்து வரது தான் நமக்கு நல்லது/பாதுகாப்பு... இது கோழைத்தனம் இல்ல, நாளை மேல் இருக்கும் நம்பிக்கை. இதுகெல்லான் நான் முடங்கி போக மாட்டன், (44/n
இது என்னை பாதிக்காத அளவுக்கு என் பயணத்தை தொடர்வேன்-னு ஒரு விஷயத்த கடந்து போறதே ஒரு வீரம்-ங்க...

இந்த situation-அ கடக்காத மனுஷனே இருக்க மாட்டான்... இன்னைக்கு பெரிய ஆளா இருக்கறவங்க இல்ல, இன்னைக்கு survive பண்றவங்க எல்லாருமே இத கடந்ததனால தான் survive ஆகறாங்க... (45/n
Especially if u r not better equipped (ஆயுதம் அல்ல)…

நீங்க இப்ப better equipped ஆ இருக்கீங்க, எல்லாரும் அப்டி இல்லங்களே... ஏன் நீங்களே ஒரு காலத்துல அப்டி இல்லங்களே!

நன்றி! 🙏(46/46)
You can follow @Arivalogy.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.