The perception game:
அதிமுக மீண்டும் தனது அடாவடி அரசியலை துவங்கியுள்ளது. ஆனால் இவை எதையும் கண்டிராத இயக்கமல்ல திமுக. சேலையை கிழித்துக்கொண்டு ஓடுவதும், சிகப்பு மையை தலையில் ஊற்றிக்கொண்டு ஓடுவதும் தலைமுறைகளாக கண்டவர்கள் தான் நாம்.

இதன் பின் இருக்கும் அரசியல் என்ன?
மிக எளிது. அதிமுக இவ்வளவு நாளாக பிம்ப அரசியலை முன் வைத்தே தேர்தல் வெற்றிகளை பெற்று வந்தது. அது MGR ஆக இருக்கட்டும், ஜெயவாக இருக்கட்டும். MGR ஒரு வள்ளல். அம்மா ஒரு தெய்வம், கலைஞர் ஒரு ஊழல்வாதி, ஸ்டாலின் திறணற்றவர் என்பது போன்ற பிம்பங்களை தொடர்ந்து உருவாக்க முயல்வதும் அவ்வகை தான்.
இந்த பிம்ப அரசியல் மத்தியில் ஸ்டாலினின் அரசியல் மாறுபட்டது. 2016 தேர்தல் முதல்கொண்டு அவர் எடுத்த கிராம சபை அரசியல் அவரை மக்களிடம் நேரடியாக கொண்டு சேர்த்தது. அந்த அரசியல் 2011 தேர்தலுக்கு பிறகு கடும் வீழ்ச்சி அடைந்த திமுகவை மீண்டும் புத்துயிர் பெற செய்தது என்றே கூறலாம்.
கிராம சபைகளில், மக்கள் அணுக கூடிய இடத்தில் ஒருவர் அமர்ந்துகொண்டு பேசுவது எல்லாம், ஹெலிகாப்டரை பார்த்து வணங்கக்கூடிய பிம்ப அரசியலில் சாத்தியமே இல்லை. அந்த அணுகுமுறையால் தான், பாசிச வளர்ச்சிக்கு மத்தியிலும் திமுக அசுர பலத்துடன் வளர்ந்து நிற்கிறது.

இந்த அணுகுமுறையை உடைப்பது
அதிமுகவின் தேர்தல் வியூகங்களில் ஒன்றாக இருக்கக்கூடும். திமுக தலைவர்கள் மீது பாமக போன்ற புல்லுருவிகள் தாக்குதல் நடத்தியதும், அநாகரீகமாக தலைவரின் கிராம சபை கூட்டத்தை முடக்க முயல்வதும் இவ்வகையான வியூகத்தின் வெளிப்பாடு தான்.

இதில், திமுகவை கூட்டங்களை நடத்த விடாமல் தடுக்க முடியாது
என்பதை எடப்பாடி நன்கு அறிவார். அரசின் உத்தரவு எல்லாம் ஒரு நொடிப்பொழுதில் உடைத்து நொறுக்கி உன் கோட்டை கொங்கு மண்டலத்தில் இருந்தே துவங்குகிறேன் என்று ஸ்டாலின் கிராம சபை கூட்டத்தை துவங்கி விட்டார். கண்ணு வேணும்னு கேட்டியாமே என அதிமுக கோட்டைக்குள் அவர் முதலில் கூட்டம் நடத்துவதில்
பின் உள்ள அரசியல் செய்தி, என்ன வேணாலும் தடை போடு, என்னை தடுக்க முடியாது என்பதே ஆகும்.

இதில், நிச்சயம் அதிமுக வெறுமனே வேடிக்கை பார்க்காது. கூச்சல் குழப்பங்களை உருவாக்கும். அதை உடைக்கும் வியூகத்தை கண்டிப்பாக திமுக செய்து வைத்திருக்கும். நம்மை எளிதில் வெற்றி பெற
விட மாட்டார்கள் என ஸ்டாலின் கூறுவது எல்லாம்,தீர்க்கமான செயல்பாட்டை தொண்டர்கள் மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையிலாக தான் இருக்க வேண்டும்

மேலும்,கோவை குழப்பம் ஏற்படுத்திய கூட்டத்திற்கு பிறகு ஸ்டாலின் பின்வாங்குவார் என எண்ணியிருக்கலாம்.ஆனால் அடுத்த கூட்டத்திலேயே இன்னும் நெருக்கமாக
மக்களை அணுகி பேசியிருக்கிறார். மக்கள் மத்தியில் தலைவர்கள் நின்று பேசுவதெல்லாம் இங்கு நடந்ததே இல்லை என்றே கூறுலாம்.

ஆள் அனுப்பியவர்களுக்கும் தெரியும் ஸ்டாலினை தடுக்க முடியாது என்று, அதை முறியடித்த ஸ்டாலினுக்கும் தெரியும் இது இதோடு நின்று விடப்போவதில்லை என்று.
இந்த சூழலில், ஸ்டாலின் ஒருவரே வாக்கு அரசியலில் இது வரை தமிழகத்தில் மாபெரும் வெற்றி பெற்ற நான்கு தலைவர்கள் அண்ணா, கலைஞர், MGR, ஜெயா ஆகியோரின் சாதனைகளை முறியடிக்கும் தூரத்தில் உள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் வெற்றியோடு, சட்ட மன்ற தேர்தல் வெற்றியையும் அடைந்து விட்டால், இரு பெரும்
தலைவர்கள் மறைவுக்கு பிறகு, வாக்கு அரசியலில் தலைமைக்கான வெற்றிடத்தை ஸ்டாலின் தீர்க்கமாக நிரப்பி விடுவார். அதை தடுக்க கண்டிப்பாக, அதிமுக, பாஜக, பாமக கடுமையாக போன்றவை முயலும்.

திமுகவும் அதை முறியடிக்கும் வியூகங்களை முன்கூட்டியே செய்து வைத்திருக்கும். இன்றைய பாசிச வளர்ச்சியில்
வாக்கு அரசியலில் மாபெரும் தலைவராக வெற்றி பெற இது போன்ற அடக்குமுறைகள், அநாகரீகங்கள், நாடகங்களை முறியடித்து மட்டுமே வெல்ல வேண்டிய சூழல் உள்ளது.

அதை முறியடிக்கும் வேலையில் தலைமை ஈடுபடும் போது, அந்த செய்திகள் மக்களை எவ்வாறு சென்று சேர்கின்றன என்பதில் கட்சி கட்டமைப்பு மிக
கவனமாக இருக்க வேண்டிய நிர்பந்தம் உள்ளது. அடாவடி பெயரை சுமத்துவது மிக எளிது. இந்த அரசியல் விளையாட்டு ஒரு Perception game இதில் திறமையானவரே வெல்ல முடியும். Let us see who is the smartest.
You can follow @Paamaran_tweets.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.