முன்வினை காரணமாக நம் வாழ்வில் பிரச்சினைகள் உருவாகிக்கொண்டேயிருக்கும். அதிலிருந்து விடுபட்டு நற்பயன்களை அடைய இறைவனை வழிபடப் பல சுப நாள்களை நம் முன்னோர்கள் வகுத்து வைத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட நாள்களே புண்ணியகாலங்கள் என்று அழைக்கப்பட்டன. புண்ணியகாலங்கள் மொத்தம் மூன்று. அவை
விஷூ புண்ணியகாலம், ஷடசீதி புண்ணியகாலம், #விஷ்ணுபதிபுண்ணியகாலம். ஏகாதசியை விடவும் மிகவும் சிறந்த பலனைத் தர வல்லது விஷ்ணுபதி புண்யகாலம் ஆகும் என்று கூறப்படுகிறது. விஷ்ணு பூஜை செய்ய விஷ்ணுபதி புண்யகாலம் ஒரு சிறப்பான காலம். இது வருடத்தில் நான்கு முறை, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை
சூரியனின் இடைநிலை இயக்கத்தால் ரிஷபம், கும்பம், கடகம், சிம்மம் ஆகிய ராசிகளின் சஞ்சாரத்துடன் கணக்கிடப் படுகிறது. விஷ்ணுபதி புண்ணிய காலம் என்பது பிரபஞ்சத்தின் பாதுகாவலராக இருக்கும் ஸ்ரீ ஹரி இந்த பிரபஞ்சத்தின் நலன் மற்றும் வாழ்வாதாரத்திற்காக அற்புதமான செயல்களைச் செய்த/செய்யும் காலம்.
இந்நாட்களில் விஷ்ணுவிற்கும் கருட பகவானுக்கும் பூஜை, பிரார்த்தனை செய்தால் வாழ்க்கை செழிப்படையும் என்பது நம்பிக்கை. நம் நிதி, சமூக அந்தஸ்தை மேம்படுத்த, உறவகளில் உள்ள சிக்கல்கள் நீங்க இந்நாட்களில் பிரார்த்தனை செய்வது நற்பலனை தரும். விஷ்ணுபதி புன்னியகாலத்தில் பூஜை செய்ய உகந்த நேரம்
அதிகாலை 1:30 மணி முதல் காலை 10:30 மணி வரை 9 மணி நேரம் நீடிக்கும். இந்த நேரத்தில் மகா விஷ்ணுவிற்கு பூக்கள், துளசி இவற்றால் அர்ச்சனை செய்து, பழங்கள், உணவு பிரசாதங்களை படைத்து, தூப தீபம் காட்டி வழிபடுவது வழக்கம். விஷ்ணு சகஸ்ரநாம பாராயணமும் அவருடைய மகிமைகளை விவரிக்கும் கதைகளைப்
படிப்பதும் கேட்பதும் விசேஷ பலன்களைத் தரும். கோவில் சென்று பெருமாள் சந்நிதியை 27 முறை வலம் வருவது, அன்று ஆலயங்களில் பெருமாளுக்கு நடக்கும் அபிஷேக ஆராதனைகளைக் கண்டு வழிபாடு செய்வது மன அமைதியை தரும். இந்த நாளில் மகாலட்சுமி பூஜை, கோபூஜை ஆகிய பூஜைகளும், மிகுந்த பலன்களைக் கொடுக்கும்.
விஷ்ணுவுடன் ஒரு வலுவான பிணைப்பை ஏற்படுத்தவும் உச்ச சக்தியுடன் ஐக்கியமாக இந்த நேரம் மிகவும் உகந்தது.

2021ஆம் வருட #விஷ்ணுபதிபுண்ணியகாலம்

2021Friday, 12th of February
2021Friday, 14th of May
2021Tuesday, 17th of August
2021Tuesday, 16th of November
You can follow @anbezhil12.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.