ஜீன்ஸ் பேண்ட் கதையின் கதை

*18ஆம் நூற்றாண்டில் கலிபோர்னியாவில் தங்க சுரங்கங்களில் தொழிலாளிகள் வேலை செய்து கொண்டிருந்தனர்.

*அந்நேரத்தில் நியூயார்க்கில் இருந்து லெவி ஸ்ட்ராஸ் என்ற இளைஞர் துணி வியாபாரம் செய்வதற்காக கலிபோர்னியா செல்கிறார்.
*எல்லா வகை துணிகளும் விற்றன ஆனால் கேன்வாஸ் துணி மட்டும் விற்கவில்லை.

*சுரங்கத்தில் கடினமான வேலைகள் செய்வதால் அடிக்கடி பேண்ட் கிழிந்து விடுவதாக தொழிலாளிகள் அவரிடம் புலம்பினார்கள்.

*"விற்காத கேன்வாஸ் துணி + சுரங்க தொழிலாளிகளின் பேண்ட் கிழியக் கூடாது" என்ற கோணத்தில் சிந்தித்தார்.
*கேன்வாஸ் துணியிலே பேண்ட் தைத்தால் என்ன? என்ற யோசனை லெவிக்கு தோன்றியது.

*கேன்வாஸ் துணியில் பேண்ட் தைத்த பிறகு சுரங்க தொழிலாளிகள் கனமான உபகரணங்களை பேண்ட் பாக்கெட்டில் வைக்க நேரிட்டால் பைகள் கிழியலாம் என்பதால் பித்தளை நட்டுகளை பேண்ட் பாக்கெட்டுகளின் ஓரங்களில் வைத்து தைத்தார்.
*ஜேக்கப் டேவிஸ் (Jacob Davis) மற்றும் லெவி ஸ்ட்ராஸ் (Levi Strauss) இணைந்து தயாரித்த புதிய ரக கேன்வாஸ் பேண்ட் சுரங்க தொழிலாளிகளை மிகவும் கவர்ந்தன.

*இத்தாலி (Italy) அருகே ஜீனோவா (Genoa) பகுதியில் நீல (Blue Fabric) வண்ண துணியினை வாங்கி பேண்ட் தைத்தார் அதுவே "ஜீன்ஸ்" என்றானது.
*சுரங்க தொழிலாளிகளுக்காக லெவி ஸ்ட்ராஸ் தைத்த ஜீன்ஸ் நாளடைவில் உலக நாடுகளை சென்றடைந்து இன்று ஜீன்ஸ் தேசிய உடையைப் போல் ஆகிவிட்டது.

*நவீன மாதிரி ஜீன்ஸ் காப்புரிமை பெறப்பட்ட நாள் - 20 மே 1873
You can follow @chockshandle.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.