2020 பல சுவாரஸ்யமான கிரிக்கெட் சம்பவங்களை விட்டுச் சென்றுள்ளது. அதில், இந்தவருட இறுதிக் கட்டுரையாக, எதைத் தேர்ந்தெடுத்து எழுதலாம் என்று யோசித்தபோது, எந்தவிதத் தயக்கமும் இல்லாமல், மனதில் வந்து நின்ற முதல் பெயர், நடராஜன்.இந்த எளியவனின் வெற்றி, இங்கு சமரசம் இல்லாமல் அனைவராலும்
கொண்டாடப்பட்டது. "நம் அண்ணன் பந்து வீசுகிறான், என் தம்பி பந்து வீசுகிறான், என் மகன் பந்து வீசுகிறான்!", என ஒவ்வொருவரும் தன் வீட்டுப் பிள்ளைகள் விளையாடினால் எப்படி ஆர்வமாகப் பார்ப்பார்களோ, அப்படித்தான் அனைவரும் நடராஜனின் பவுலிங்கை ஆனந்தத்துடன் பார்த்தனர். அவர் வீசய ஒவ்வொரு
யார்க்கரும், சாதிக்க துடிப்பவனுக்கு வசதியின்மை ஒன்றும் பெரிய தடையாக இருந்துவிடமுடியாது என்பதை உலகுக்கே உணர்த்தியது. அவரது சாதனை, சாமான்யர்களான எத்தனையோ பேருக்கு உத்வேகத்தை அளிப்பதாய் உருமாறி உள்ளது! கடந்த 3 வருடங்களில் வெளிச்சத்துக்கு வராமல் இருந்தவர் இந்த ஐபிஎல்லில்
'சூப்பர் ஸ்டார்' ஆகிவிட்டார். ஐபிஎல்லில் பிரைம் ஃபார்மில் ஆடிக்கொண்டிருந்த ஏபிடியை, தனது பலமான யார்க்கரைக் கொண்டு தகர்த்தது மட்டும் அல்லாமல், ஆர்சிபியின் கோப்பைக் கனவையும் தவிடுபொடியாக்கி விட்டார், இந்த ஒரு பந்தில் .

தனக்கு என்ன வருமோ, அதையே தனது பிரதான ஆயுதமாக்கி, அனைத்து
பேட்ஸ்மேன்களையும் ஆட்டிப் படைத்துவிட்டார், இந்த வருடத்தில்.

கோலி, தோனி, ஏபிடி என பல ஸ்டார் பேட்ஸ்மேன்களை வீழ்த்தி, ஐபிஎல்லில் இந்தவருட 'ஐகான் பிளேயராக' அடையாளம் காணப்பட்டவர், இண்டர்நேஷனல் கிரிக்கெட்டிலும் தனது முத்திரையை அழுத்தமாகப் பதித்துவிட்டார்.

நெட் பவுலராகப் போனவருக்கு,
ஒருநாள் தொடரை இழந்த இந்திய அணியின் மூன்றாவது போட்டியில் விளையாட வாய்ப்புக் கிடைக்க, ஓப்பனர் லபுசேனின் விக்கெட்டை வீழ்த்தி, தனது மெய்டன் விக்கெட்டைப் பதிவு செய்தார்.

அடுத்த வந்த டி20 தொடரிலும் இவரது சிறப்பான ஆட்டம் தொடர, மூன்றே போட்டிகளில் ஆறு விக்கெட்களை எடுத்து லிமிடெட் ஓவர்
கிரிக்கெட்டில், தவிர்க்க முடியாத வீரராக தனித்து ஜொலித்துள்ளார்!

ஒரு தொடருக்குள்ளாகவே, ரெட் பால் கிரிக்கெட்டிலும் அவருடைய பெயர் பரிந்துரைக்கப்படும் அளவுக்கு, தான் பேசாமல், தன்னுடைய பந்தை, தனக்காகப் பேச வைத்துள்ளார்.

சேலத்தில் தோன்றிய இந்தச் சின்னத் தீப்பொறி, நடப்புக்
நடப்புக் கிரிக்கெட்டில், இந்த ஆண்டின் ஆகச்சிறந்த கண்டெடுப்பு. இனிவரும் வருடங்களில், உலகக் கிரிக்கெட் அரங்கில் தனது முத்திரையை நடராஜன் அழுத்தமாய்ப் பதிக்கப் போவது உறுதி!

Credits:அய்யப்பன்
@thug1one @tctv1offl @Dpanism @iam_vikram1686 @karthick_45 @Karthicktamil86 @CineversalS
You can follow @Mr_Bai007.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.