1966ல் புற்றுநோய் முற்றிய நிலையிலும், ஒருவேளை உணவு உண்ணமுடியா நிலையிலும் ஆட்சியினை விட்டு போகமாட்டேன் என அடம்பிடித்தவர் அண்ணா.
1967ல் துப்பாக்கி தோட்டா கழுத்தை துளைத்திருந்தது, அவர் இனி பேசமுடியாது என்ற நிலையிலும், நான் கண்டிப்பாக எம்.எல்.ஏ ஆகவேண்டும் என அடம்பிடித்தவர்
எம்.ஜி ராம்சந்தர்
1980களில் கிட்னி பழுதான நிலையில் சென்னை ராமசந்திரா மருத்துவமனையிலும் பின் அமெரிக்க மருத்துவமனையிலும் மாறி மாறி படுத்துகொண்டு சோலி முடியும் நிலையிலும் கட்சியும் எனக்கு ஆட்சியும் எனக்கு என அடம்பிடித்தவர் அந்த ராம்சந்தர்
91 வயதில் வாய்குழறிய நிலையிலும் சக்கர
நாற்காலியில் அமர்ந்தபடி முதல்வர் வேட்பாளர் நான் என வந்தவர் கருணாநிதி
அதீத உடல் எடையுடன், அந்த உடலெல்லாம் சர்க்கரை நோய் தாக்கிய நிலையில் மிக மோசமான நிலையில் இருக்கும் பொழுதும் அப்பல்லோவில் முதல்வராகவே சிகிச்சை பெற்றார் ஜெயா
ஆட்சியினை விட கடைசிவரை மனமில்லை
ஆம், எல்லாம் ஆசை, பதவி
ஆசை, உடல்நிலை எப்படி இருந்தாலும் அந்த நாற்காலியினை பிடித்து கொண்டே சாக வேண்டும் என்ற ஒரு வெறித்தனமான ஆசை, மாயமான பேராசை
ஆனால் முதல்வர் பதவி தனக்கு எட்டிவிடும் நிலையிலும் தான் தொட்டுவிட்டு பின் தமிழகம் திசைமாறிவிட கூடாது என ஒதுங்கி செல்லும் ரஜினி
அவர்களை விட நிச்சயம் மகா உயர்ந்தவரே
ஓடி ஓடி ஒரு நாற்காலியினை பிடித்து அதில் தொங்கி கொண்டிருப்பது விஷயம் அல்ல, அந்த நாற்காலி தன்னை நோக்கி வரும்பொழுது பக்குவமாக ஒதுங்கி செல்வதும், இதில் அமர்ந்துவிட்டால் தனக்கு பின்னால் என்னாகும் என யோசிக்கும் மனமே ஞானமனம்
ரஜினி அவ்வகையில் ஞானி
ரஜினி நினைத்திருந்தால் ராம்சந்தர் போல் பரிதாபம் வரவைக்கும் படங்களை உலாவவிட்டு படுத்து கொண்டே ஜெயிக்கலாம், இல்லை காலமெல்லாம் இதுதான் எனக்கு கடைசி தேர்தல் என புலம்பியே வாக்கு சேகரித்த கருணாநிதி போல் நாடகமாடலாம்
லண்டனிலோ அமெரிக்காவிலோ சிகிச்சை பெற்று தலையில் 4 முடியினை நட்டு,
மேக்கப் சகிதம் அவர் வலம் வந்திருக்கலாம்
ஆமால் சினிமாவில் மட்டும் நடிக்கு ரஜினி, நிஜத்தில் அந்த நடிப்பினை செய்யவில்லை, இந்த ஒரு விஷயத்துக்காக அவரை வாழ்த்தலாம்..
ரஜினி ஒதுங்கி செல்வது நல்லது, ஆனால் ஒரு நல்லவனுக்கு கைகாட்டிவிட்டு செல்வது அவர் கடமை, அந்த நல்லவனை ஆதரிக்க
வேண்டியது அவர் ரசிகர்களின் கடமை
இன்னும் 4 மாதம் இருக்கின்றது, அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதால் சில விஷயங்களை பொறுத்திருந்து பார்க்கலாம் 🔥🤘
You can follow @YeskayOfficial.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.