காவிகள் முதலில் ரஜினியின் அரசியல் வருகை பற்றி பிலாக்கணம் பாடுவதை நிறுத்துங்கள்..

ரஜினி வந்து தான் பிஜேபியை தூக்கி நிறுத்துவார் என்று இந்த கட்சி ஆரம்பிக்கப்படவில்லை...

அது ஒரு கட்டமைக்கப்பட்ட பலமான தேசிய கட்சி....

இதில் சினிமா முகங்களும் தேவை ...

பல பிரபலங்களின் சேர்க்கையும்
ஆதரவும் தேவை...

அவர்களது பலமும் நமக்கு தேவை தான்...

ஆனால் அவர்களால் மட்டுமே தான் இந்த கட்டமைப்பை தூக்கி நிறுத்த முடியும் என்று எண்ணுவது கோபுரத்தை பொம்மை தாங்குவது போன்றதாகும்....

கட்டிடத்திற்கு அழகு சேர்ப்பது கோபுரத்தில் உள்ள பொம்மையும்தான்...

ஆனால் அது நிற்க வேண்டுமெனில்
பலமான தூண்கள் கொண்ட அஸ்திவாரம் தேவை.,.

அந்த தூண்களை போல பலப்பல.... களப்பணி செய்கின்ற அமைப்புகள் அஸ்திவாரமாக கண்ணுக்கு புலனாகாமல் இயங்கிக்கொண்டிருக்கின்றன....

சத்தமில்லாமல் மக்கள் சேவையில்...தேச சேவையில்....அவை செயல்பட்டு கொண்டிருக்கின்றன ....

அந்த பலத்தால் தான் தவிர்க்க
முடியாத ஒரு தேசிய சக்தியாக....

உலகளாவிய தலைவர்களை உருவாக்குகின்ற வல்லமை பொருந்திய கட்சியாக திகழ்கிறது...

ரஜினி வரவில்லை என்றால் பிஜேபியின் எதிர்காலமே அஸ்தமனமாகி விட்டது போல யாரும் ஒப்பாரி வைப்பதை நிறுத்துங்கள்...அவரை வசை பாடுவதை நிறுத்துங்கள்...

மலை ஏறுவதற்கு ஊன்றுகோல் தேவை
ஆனால் அந்த ஊன்றுகோல் கூட இல்லாமல் மலையேற மனதில்... தேகத்தில்... தெம்பு இருந்தால் போதும் ..

அந்த திறமையையும் தன்னம்பிக்கையையும் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்...

இன்னொருவர் வந்து தான் ஏற்றி விட வேண்டும் என்ற ஊனமுற்ற நிலையில் இல்லை கட்சி....

இந்துக்கள் ஒற்றுமையாக இருந்தால்
எப்படிப்பட்ட எதிரியையும் வெல்லலாம் ...

முதலில் இந்துக்கள் ஜாதி அரசியல்வியாதிகளிடம் இருந்து விடுபட்டு....

ஹிந்து என்ற உணர்வோடு ஒன்றுபட தொடங்கினால் வெற்றி நிச்சயம்..

For Men may come and Men may go,

But I go on for ever....

என்று...கல்லும் முள்ளும் கல்லும் மலையும் கடந்து வந்து
காடும் மேடும் தவழ்ந்து... பொங்கி பெருகும் நதிப்பிரவாகம் போன்றது கட்சி ....

இதில் யார் வந்தால் என்ன ...

யார் போனால் என்ன...

நதியானது தன் பயணத்தை தொடர்ந்து கொண்டே இருப்பது போல் பணியைத் தொடர்வோம்...

வெற்றிக்கனியைப் பறிப்போம்....

ஊழலற்ற ஆட்சி அமைய ஒன்றுபடுவோம்!

ஜெய் ஸ்ரீராம்🚩
You can follow @vanamadevi.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.