#புதுக்கோட்டை யில் #நம்மவர் அதிரடி பேச்சு.
1. விவசாயிகள் நெசவாளர்கள் ஏழைகளை வாழவைக்காத அரசை அகற்றுவோம்
2. அரசு கல்லூரிகள், புதுக்கோட்டை அரசு கல்லூரியை மய்யம் மேம்படுத்தும்
3. சுற்றுலாதளமாகமாற்றி புதுகோட்டையை உலகமேதிரும்பிபார்க்க வைக்கும்.
4. அருங்காட்சியகம்இங்கே அமைக்கப்படும் 1/9 https://twitter.com/maiamofficial/status/1343948502393442307
5. விவசாயிகளுக்காக திறன் மேம்பாட்டு மய்யம் புதுக்கோட்டையில் அமைக்கப்படும்
6. அரசு பள்ளிகள் மேம்படுத்தப்படும்
7. கல்வி கற்பிக்கும் முறையில் மாற்றம் கொண்டுவரப்படும்
8. தேர்விற்காக இனி ஒரு மாணவனும் தற்கொலை செய்யாமல் இருக்கும் வகையில் திட்டங்கள் அமைக்கப்படும்
2/9
9. இல்லத்தரசிகளுக்கு நியாயமான ஊதியம் வழங்கப்படும்.
10. அரசு மருத்துவமனைகள் மேம்படுத்தப்படும். புதுகோட்டை அரசு மருத்துவமனை சிறந்த முறையில் பரமாரிக்கப்படும்
11. ஒவ்வொரு வீட்டிற்கும் இணைய வசதியோடு கூடிய கணனி வழங்கப்படும். இது இலவசம் அல்ல. உங்கள் உரிமை.
3/9
12. தலைமை செயலகம் பேப்பர் இல்லாத டிஜிட்டல் ஆக மாற்றப்படும்.
அதற்கு முன்மாதிரியாக சென்னை மய்யம் தலைமை அலுவலகம் பேப்பர் இல்லாத டிஜிட்டல் அலுவலகமாக விரைவில் மாற்றியமைப்படும்.
13. புதுக்கோட்டையை பெரிய நகரமாக்கி இந்தியா உற்று நோக்கும் வகையில் மாற்றியமைக்கப்படும்.
4/9
மய்யம் திராவிட கட்சியா என கேட்கிறார்கள். நாம் அனைவருமே திராவிடர்கள் தான். திராவிடம் என்பது மொகஞ்சதாரோ ஹரப்பா காலத்திலிருந்து வருகிறது. விந்திய மலைக்கு இந்தப் பக்கம் உள்ள அனைத்துமே திராவிடத்தில் அடங்கும்.
மராட்டியத்தில் ஒரு கம்யுனிஸ்ட் இருந்தால் அவர் மராட்டிய கம்யுனிஸ்ட்.
5/9
அது போல் நான் தமிழ் சென்டரிஸ்ட். திராவிட குடும்பத்திலிருந்து வந்த சென்டரிஸ்ட். திராவிடம் இரண்டு குடும்பம் (கட்சிகள்) க்கு மட்டுமே சொந்தமானதல்ல.
இந்த அரசின் மோசமான நிர்வாகத்தால் நம் அனைவரின் அதாவாது 7 1/2 கோடி மக்களின் தலையிலும் ரூ. 60,000 கடன் சுமை உள்ளது. இந்த அரசு வேண்டுமா? 6/9
மய்யம் ஆட்சிக்கு வந்தால் மக்கள் நீங்கள் எங்களை விரல் நுனியில் கேள்வி கேட்கலாம். அதற்காகவே கணினி தரப்படுகிறது. நேற்று கொடுத்த லஞ்சம் பட்டியல் இனி மய்யம் ஆட்சியில் வராது.
நான் கொடுத்த லஞ்சப் பட்டியலுக்கு இதுவரை இந்த அரசிடம் பதில் இல்லை. ஆனால், உங்களிடத்தில் உள்ளது. மே 2021 ல் 7/9
உங்கள் விரல்நுனியில் அதற்கு பதில் உள்ளது. உங்களின் எழுச்சியை பார்க்கும் போது நல்ல பதில் கிடைக்கும் என நம்புகிறேன். சினிமாகாரனுக்கு கூட்டம் கூடும். வாக்குகள் வராது என்கின்றனர். அதை மாற்றிக் காட்டும் கூட்டமிது என நம்புகிறேன். ஊர்கூடி தேர் இழுத்தால் #நாளைநமதே
என பேசினார் #கமல்ஹாசன்
You can follow @ibalamurugan72.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.