ஜெஸ்ட் இப்போதான் ஒரு ஃப்ரெண்ட் கால் பண்ணாப்ள. அவரோட பிசி(விண்டோஸ்)ல என்னமோ இஸ்ஸ்யூனு. சிம்டம்ஸ் கேட்டதுமே தெரிஞ்சிடுச்சி Ransomewareன்னு. இதை பத்தி பெருசா நம்மாளுங்களுக்கு அவார்னஸ் இல்ல. இருக்க மன நிலைல எனக்கு ஒரு சின்ன சேஞ்ச் கிடைக்கும்னு இந்த த்ரெட்
#Thread #Ransomeware
கோடி ரூபாய் குடுத்தாலும் சில விஷயத்தை நீங்க செய்ய கூடாது. அதுல ஒன்னு பைரேட்டட் சாஃப்ட்வேர்ஸ் அதாவது கிராக்குகள் யூஸ் பண்றது. இந்த வகையான ரேன்ஸம்வேர்ஸ் மேக்ஸிமம் கிராக்டு சாப்ஃட்வேர்ஸ் மூலமாதான் பரப்பப்படுது. ஏன்னா கிராக் இன்ஸ்டால் பண்றப்ப ஆண்டிவைரஸ நீங்க ஆஃப் பண்ணிருப்பீங்க.
பிஸில ரேன்ஸம்வேர்ங்குறது உங்க எல்லா டேட்டாவுக்கும் கேன்ஸர். அதாவது குழந்தைய கடத்தி வச்சிட்டு மிரட்டி பணம் கேட்குறமாதிரி உங்க டேட்டா எல்லாததையும் என்கிரிப்ட் பண்ணி வச்சிட்டு மிரட்டி பணம் கேட்குறதுதான் ரேன்ஸம்வேர் கலாச்சாராம். It's not new. people paid millions of dollars in 17-20
கேன்சர்னு பேச்சுக்கு சொல்லல. In 2020 average ransom starts at $500 usd. i.e around 40K inr. ஒரு தடவை வந்துச்சினா உங்களுக்கு ரெண்டே ரெண்டே ஆப்ஷந்தான். ஒன்னு உங்க டேட்டாலாம் மறந்துடணும். இல்ல அவங்களுக்கு பே பண்ணி டீக்ரிப்ட் பண்ணனும். அதுனாலதான் இது வொர்ஸ்ட்.
டெக்னிக்கலி இதுக்கு எந்த சொல்யூஷனும் இல்ல. ஏன்னா குறிப்பிட்ட நாளுக்கு ஒருதடவை அந்த கிரிமினல்ஸ் என்கிரிப்ஷன் டெக்னிக் மாத்திடுறாங்க அதுபோக இது உங்க டேட்டாவ என்கிரிப்ட் மட்டும்தான் பண்ணுது. அதுனால இதுக்கு ஆண்டி வைரஸ் மாதிரி எந்த ப்ரோடொக்ஷன் சாஃப்ட்வேரும் கிடையாது.
இந்த ரேன்ஸம்வேர்கள்னால யாருக்கு லாபம்னா ஒன்ட்ரைவ் மாதிரியான கிளவுட் ஸ்டோரேஜ் ப்ரொவைடர்ஸ்க்குதான். ஸ்பெஷலி மோனோப்லில பொளந்து கட்டுற நம்ம ஏமாத்துக்காரனுங்க விடுவானுங்களா இதை சொல்லியே நல்லா யாவாராம் பார்த்துட்டானுங்க.
இதுலேருந்து தப்பிக்க உங்களுக்கு இருக்குற வழிகள் என்னன்னா பேக்கப். எப்பவுமே உங்க டேட்டாவோட பேக்கப் இன்னொரு காப்பி ( ஆன்-லைன்/ ஆப்லைன் ) ல வச்சிக்குங்க. எப்பவும் அபிஷியல் வெப்சைட்லேருந்தே சாஃப்ட்வேர்ஸ் டவுண்லோட் பண்னுங்க.
ஒருவேளை பெய்டு சாஃப்ட்வேர் பே பண்ணி வாங்க விருப்பம் இல்லைனா அல்டர்னேட் ஓபண்சோர்ஸ் சாஃப்ட்வேர் தேடுங்க. அல்மோஸ்ட் எல்லா சாப்ட்வேருக்கும் இப்ப ஓபண்சோர்ஸ் அல்டர்னேட்டிவ் இருக்கு.
பைரேட்டட் சாப்ட்வேர் உங்க டேட்டாவுக்கு, ஓஎஸ்ஸுக்கு, ப்ரைவசிக்கு கேடு.
#End
You can follow @muppathimoonu_.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.