Sundar Raja Cholan - FB யிடம் இருந்து திருடிய சூப்பர் கட்டுரை :

ஒரு அமாவாசை மதியத்தில் என் எட்டாம் வகுப்பு வாத்தியார் சொன்ன காலத்தில் இருந்தே,'நல்லக்கண்ணு எவ்வளவு நல்லவர் தெரியுமா?' என்ற வார்த்தையைத்தான் கேட்டு வருகிறேன்..அரசு கேபிளை ஆன் செய்தவுடனேயே
1/6
எடப்பாடி அரசின் சாதனை வருவது போல எல்லா பிறந்தநாளுக்கும் நல்லக்கண்ணுவின் எளிமை கண்முன்னால் வந்துவிடுகிறது..

நல்லகண்ணு மாதிரி ஒரு தலைவர் வேண்டும் என்று சொல்லும் ஒருவன் கூட எங்கள் கூட்டணி ஆட்சியில் அவருக்கு மந்திரி சபை தருவோம் என்று சொல்ல மறுக்கிறார்கள்.
2/6
நல்லவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கொரு நடமாடும் சாட்சி போல அரசியலில் இவரும்.

நீ நல்லவனாக இருந்தால் நல்லகண்ணுவை போல இருப்பாய் என்பதை சொல்லி பயமுறுத்துவதற்கு இது ஒரு முறையாகக் கூட இருக்கலாம்..😄

சரி,நல்லக்கண்ணுவின் சாதனை என்ன? ஒரு கட்சியில் சும்மா இருப்பதா?
3/6
இங்கு பலபேர் அதைத்தான் செய்கிறார்கள்..எந்த ஊழலும் செய்யவில்லை என்பதொரு தகுதி என்றால் கம்யூனிஸ்ட் எப்போது ஆட்சிக்கு வந்தது? பெரும் பணம் புழங்கும் எந்த துறையில் அவர் இருந்தார்.

சரி ஆட்சிக்கு வரவில்லை ஆனால் வந்தால் இப்படி ஊழலற்ற நல்ல நிர்வாகத்தை கொடுப்போம்,
4/6
அதன் அங்கமாக நல்லகண்ணு இருப்பார் என்று காட்டுவதற்கு கம்யூனிஸ்ட்டுகளுக்கு உதாரண நிலம் எது? பல லட்சம் பேரை வேலை தேடி வெளிநாடு போகவைத்து,உள்மாநில உற்பத்தியையே அழித்து தங்கம் கடத்தும் கேரளாவா? அல்லது காட்டாட்சியில் அழித்தொழிப்பு நடத்தி மக்களால் பிடுங்கி எறியப்பட்ட மேற்கு வங்கமா?
5/6
எந்த முன்னுதாரணமும் கிடையாது,எந்த துறையையும் நிர்வகித்ததும் இல்லை.அனல் பறக்கும் பேச்சோ,எழுத்தோ இல்லை.நல்லக்கண்ணுவை பார்த்து சித்தாந்தத்தால் உந்தப்பட்டு கம்யூனிஸ்ட்டானேன் என்று சொல்லவும் ஆளில்லை..
5A/6
கம்யூனிஸ ஆட்சியை விட சிறந்த ஆட்சியை திராவிட அரசுகள் கொடுத்திருக்கிறது.ஆயினும் நல்லக்கண்ணு நல்லவர் என்ற கோஷத்திற்கு குறைவில்லை,இந்த சடங்கு எதற்கு? ஒரே காரணம்தான் தங்கள் இயலாமைக்கு,வீழ்ச்சிக்கு ஒரு உருவத்தை புனிதப்படுத்துகிறார்கள்.அதன் முழு வடிவமாக இருக்கிறார் நல்லக்கண்ணு
6/6(end)
You can follow @roamingraman.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.