LPG சிலிண்டர் உயர்வு: மீடியா ஏன் முழு விவரத்தையும் நமக்குத் தரவில்லை?

14 Kg மானிய சிலிண்டரின் விலை சென்னை மற்றும் நாட்டின் பிற பகுதிகளிலும் ₹610 இருந்தது ₹710 ஆக உயர்த்தப்பட்டது. சந்தேகத்திற்கு இடமின்றி இது மக்களுக்கு சிறமம்மே ஆனால் இந்த உயர்வு ஏன் கொண்டு வரப்பட்டது. (1/n)
நுகர்வு பற்றிய புரிதல் முறை:

2015 நிலவரப்படி LPG பயன்பாடு: 58%
2020 நிலவரப்படி LPG பயன்பாடு: 98.8% (October)

Ujjwala திட்டத்தின் கீழ் 8 கோடிக்கும் அதிகமான புதிய இணைப்புகள் வழங்கப்படப்பட்டுள்ளன

மானிய LPG யில் 90% க்கும் அதிகமானவை வீடுகளில் பயன்படுத்தப்படுகிறது. (2/n)
மானிய LPG சிலிண்டரின் (சென்னை) விலை: Indane

🏷 டிசம்பர் 2014: ₹ 749
🏷 டிசம்பர் 2015: ₹ 621
🏷 டிசம்பர் 2016: ₹ 593
🏷 டிசம்பர் 2017: ₹ 756
🏷 டிசம்பர் 2018: ₹ 826
🏷 டிசம்பர் 2019: ₹ 714
🏷 டிசம்பர் 2020: ₹ 660
🏷 டிசம்பர் 16, 2020: ₹ 710 (3/n)
LPG விலை எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது? இந்தியாவில் LPG விலை நிர்ணயம் இறக்குமதி சமநிலை விலை அடிப்படையில் செய்யப்படுகிறது.

ARAMCO அமெரிக்க டாலரில் பரிவர்தனை செய்கிறது. உள்நாட்டுச் சந்தைப்படுத்தல், OMC லாபம், பாட்டில் கட்டணம், டீலர் கமிஷன் மற்றும் GST ஆகியவை இதில் சேர்க்கப்படும்.
ஏப்ரல் முதல் நவம்பர்- LPG உற்பத்தி 8.4 மில்லியன் மெட்ரிக் டன்.

ஏப்ரல் முதல் நவம்பர் - LPG நுகர்வு 17.1 மில்லியன் மெட்ரிக் டன். மத்திய கிழக்கு ஆசியா மற்றும் USAவிலிருந்து பற்றாக்குறையை இந்தியா இறக்குமதி செய்கிறது (5/n)
Corona காலகட்டத்தில் போக்குவரத்து எரிபொருளின் பயன்பாடு குறைந்தபோதும், LPG நுகர்வு கடந்த ஆண்டைவிட இந்தாண்டு மார்ச் மாதத்தில் அதிகரித்தது.

உற்பத்தி திறன் 12.8 MMTPA ஆக மாறாமல் உள்ளது மற்றும் 2019-20 ஆம் ஆண்டை விட நுகர்வு 10% அதிகரித்துள்ளது. (6/n)
கடந்த 6 ஆண்டுகளில் ARAMCO Propane விலை (மத்திய கிழக்கிலிருந்து ஏற்றுமதிக்கான LPG விலையை தீர்மானிக்க பயன்படுகின்றன) எவ்வாறு இருந்தது?

(3 / n) இல் உள்ள விலைகளுடன் இதை ஒப்பிட்டுப் பாருங்கள், ARAMCOவின் விலை உயர்வுக்கு டிசம்பர் 2018 இல் LPGயின் விலை ₹826 ஆக உயற்ந்ததை காண்பீர்கள்.
புரோபேன் க்கான ARAMCO வின் விலை:

ஏப்ரல் 2020: டன்னுக்கு $230
டிசம்பர் 2020: டன்னுக்கு $450

இந்தியாவின் LPG நுகர்வுகளில் 60% இறக்குமதி செய்யப்படுகிறது, எனவே ஐபிபி பயன்படுத்தி விலையை தீர்மாணிகிறது அல்லது அரசாங்கம் மானியங்கள் அளிக்க தொடங்க வேண்டும். (8/n)
ஏப்ரல் 2020 இல் அரம்கோவின் விலை குறைவுப்பிற்கு பிறகு, Direct Benefit Transfer மூலம் மானியக் கொடுப்பனவுகளை அரசு நிறுத்தியது மற்றும் சிலிண்டரின் விலையையும் குறைத்தது.

🏷 மார்ச் 2020: ₹ 826
🏷 ஏப்ரல் 2020: ₹ 761.50
🏷 மே 2020: ₹ 569.50 (9/n)
ஐபிபி மூலமாக கிடைத்த நன்மையை உடனடியாக நுகர்வோருக்கு அளித்தது தெளிவாகிறது, மேலும் மானியக் கொடுப்பனவுகளை அரசாங்கம் சேமித்தது.

LPG இறக்குமதியில் இந்தியா 2020 செப்டம்பர் மாதத்தில் 1.6 MMT ஆக புதிய உயரத்தை தொட்டது. (10/n)
எண்ணெய் உற்பத்தியாளர்களுக்கான எரிபொருள் மானியங்களுக்கான இந்தாண்டு பட்ஜெட்டில் இந்திய அரசு, 37,256 கோடி ஒதுக்கியுள்ளது.

மே 2020 முதல், 14 கிலோ LPG சிலிண்டரின் விலை சிலிண்டருக்கு ₹ 800 க்கு மேல் நகராத காரணத்தினால் இந்த மானியம் ஒரு சேமிப்பாக மாறியுள்ளது. (11/n)
UPA II அரசாங்கம் நேரடி மானியங்கள் மற்றும் எண்ணெய் பத்திரங்கள் மூலம் எரிபொருள் ₹2.5 லட்சம் கோடி மானியம் செலுத்தியது.

தற்போதைய அரசாங்கம் 2014 டிசம்பரில் டீசல் மானியத்தை நிறுத்தியது மற்றும் LPG மானியத்தை மட்டுமே அனுமதித்துள்ளது. (12 / n)
தற்போதைய பாஜக அரசு ₹3500 கோடி மதிப்புள்ள எண்ணெய் பத்திரங்களை எண்ணெய் உற்பத்தியாளர்களுக்கு திருப்பிச் செலுத்தியுள்ளது. ஆனால் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ₹9000 கோடி வட்டி செலுத்துகிறது.

₹1.34 லட்சம் கோடி பாக்கி உள்ளது (13 / n)
நிலுவையில் உள்ள தொகையில் 2021 ஆம் ஆண்டில் ₹10,000 கோடி திருப்பிச் செலுத்தப்பட வேண்டும்.

போக்குவரத்து எரிபொருள் மற்றும் LPG விலையை குறைக்காமைக்கு தற்போதைய அரசாங்கம் வட்டி செலுத்துதல் மற்றும் நிலுவையில் உள்ள அசல் செலுத்துதல் ஆகியவையும் ஒரு காரணம். (14/n)
இந்தியாவின் LPGயின் வளர்ச்சி மற்றும் நவம்பர் 2020 நிலவரப்படி விலை பற்றி விவரம்
You can follow @ikkmurugan.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.