🔥🔥🔥🔥💥💥💥 "போயும் போயும் பாஜகவுக்கு சப்போர்ட் பண்றியே?" என்றான் என் நண்பன்.

"ஏன்? பாஜகவை ஆதரித்தால் என்னவாம்?" என்றேன் நான்.

உடனே அவன் வழக்கமான இணைய மீம்ஸ் குற்றச்சாட்டுகளை காட்டி " பொருளாதார மந்த நிலை.. GST வரி, GDP , 500-1000 பணமதிப்பிழப்பு, உத்ரா பிரதேச
கோரக்பூர் சம்பவம், ஒரிசா அம்புலன்ஸ் சம்பவம்" என்று அடுக்கிக்கொண்டே சென்றான்..முடிவில் "இதற்கெல்லாம் பாஜக வெட்கப்படவேண்டும் தெரியுமா" என்று முடித்தான்.

நான் சொன்னேன் "சரி நான் சில கேள்விகள் கேட்கிறேன். பதில் சொல்லு"..

"அக்ஷய் சின், லடாக் போன்ற பகுதிகளை சீனா ஆக்கிரமிப்பு செய்தது.
அப்போதைய நேரு அதைக்குறித்து விளக்கமளிக்கும்பொழுது "இது நாட்டிலே வளமில்லாத வறண்ட பிரதேசங்கள். இது நம்மிடம் இருந்தால் என்ன நம்மைவிட்டு போனால் என்ன?" என்று கூறினார். அதற்கு ஒரு சுயேச்சை மந்திரி "உங்கள் தலைகூடத்தான் வறண்டு இருக்கிறது. அதற்கு உங்கள் தலையை வெட்டி எறிந்துவிடுவீர்களா?"
என்று கேட்டார். நேரு சொன்னதற்கு இதுவரை காங்கிரஸ்காரர்கள் வெட்கப்படுகிறார்களா?"

"இல்லை"..

"ஜனநாயக விரோதமாக நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்தார் இந்திரா. அதற்கு இன்றுவரை காங்கிரஸ் காரர்கள் வெட்கப்படுகிறார்களா?"

"இல்லை"..

13 April 1976, சஞ்சய் காந்தி டெல்லி ஜும்மா மஸ்ஜிதை
பார்வையிட சென்றபொழுது அங்கே இருக்கும் இஸலாமிய குடியிருப்புகளை பார்க்க சகிக்கவில்லை என்று டெல்லி வளர்ச்சி ஆணையத்திடம் (Delhi Development Authority,DDA) கூறி அதற்கு DDA புல்டோசரை வைத்து அங்கே வசிப்பவர்களின் வீடுகளை தரைமட்டமாகியது. எதிர்ப்பு தெரிவித்தவர்களை துப்பாக்கியால் சுட்டனர்.
துப்பாக்கி சூட்டில் 150 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். அதற்கு காங்கிரஸ் இதுவரை ஏதாவது மன்னிப்பு கோரியதா?

அப்படியா?!!

"தனியார் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டது. அதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் வெட்கப்படுகிறார்களா?"

"இல்லை"..
"1978ஆம் ஆண்டு காங்கிரஸ் பிரதமர் நீலம் சஞ்சீவ் ரெட்டி தலைமையில் பணமதிப்பிழக்கம் அமல்படுத்தப்பட்டது. அதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் வெட்கப்படுகிறார்களா?"

ஹோ.. அப்படியா?!!

"பஞ்சாப் பொற்கோவிலில் பிந்த்ரான்வாலே தாக்குதல் நடந்த பிறகு சீக்கிய ராணுவவீரகளை வைத்தே பொற்கோவிலின்
ரத்தந்தை துடைக்கச்சொன்னது காங்கிரஸ். அதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் வெட்கப்படுகிறார்களா?"

ஹோ.. அப்படியா?!!

இந்திராகாந்தியை சுட்டுக்கொன்றது ஒரு சீக்கியர் என்ற காரணத்திற்காக டெல்லி முழுவதும் சீக்கியர்களை கொன்று குவித்தது காங்கிரஸ். அதற்கு விளக்கமாக "ஒரு பெரிய
மரம் சரிந்தால் நிலத்தில் அதிர்வுகள் ஏற்படுவது சகஜம்தானே" என்று பேட்டி கொடுத்தார் ஒரு காங்கிரஸ்காரர். அதற்கு காங்கரஸ் உறுப்பினர்கள் வெட்கப்படுகிறார்களா?"

"இல்லை"..

"போஃபர்ஸ் ஊழல் நடந்ததற்கு காங்கரஸ் உறுப்பினர்கள் வெட்கப்படுகிறார்களா? அல்லது 30 July 1993 அன்று ஓட்டவியோ
குவாட்ரோச்சி என்ற முக்கிய குற்றவாளி டெல்லியில் சிபிஐ விசாரணை வலயத்திலிருந்து கோலாலம்பூர் தப்பித்து சென்றதையும் பிறகு ஸ்விஸ் அறிக்கை காங்கிரஸ் காரர்களை குற்றம்சாட்டியதற்கு காங்கரஸ் உறுப்பினர்கள் வெட்கப்படுகிறார்களா?"

"இல்லை"..

"இந்திரா காந்தி தமிழ்நாட்டிற்கு வந்தபொழுது
அவரின் மீது கல் அடித்து அவர் தலையில் ரத்தம் கசிவதை சுட்டிக்காட்டி பெண்களுக்கு மண்டையிலும் வரும் என்பதை நான் இன்றுதான் தெரிந்துகொண்டேன் என்று சொன்ன திமுக கட்சியின் உறுப்பினர்கள் இன்று அதை நினைத்து வெட்கப்படுகிறார்களா?"

"இல்லை"..
"இப்பிடி நம்ம தலைவியை இவ்வளவு கேவலமா பேசிய ஒரு கேடுகெட்ட கட்சியோடு திரும்பி தேர்தல் ஆதாயத்துக்காண்டி கூட்டனி வைய்க்கிறோமேன்னு இந்த காங்கிரஸ் கட்சி காரங்கே திமுகவோட கூட்டனி வைய்க்க வெட்கப்பட்டாங்களா"

"இல்லை"....
"இதேபோல நடிகை பானுமதிப்பற்றி, திராவிடமும் பாவாடைநாடவும், என்று பலப்பல ஆபாச மேடைப்பேச்சுகள் பேசிய திராவிட கழக உறுப்பினர்கள் கட்சிமேடைகளில் வராமல் வெட்கப்பட்டு தவிர்க்கிறார்களா?"

"இல்லை"..
திமுக அதிமுக சொத்துப்பட்டியல் ஏராளம். நிருபிக்கப்பட்ட ஊழல்கள் ஏராளம். அதற்க்காக அந்த கட்சி உறுப்பினர்கள் வெட்க்கப்பட்டு கட்சிக்கொடி காட்டாமல் இருக்கிறார்களா?

"இல்லை"..
இந்த 2ஜி, சன் குழுமம், தொலைபேசி, டான்சி நில பேரம், சிறுதாவூர், கொடநாடு இப்படி பல குற்றசாட்டுகளுக்கு பயந்து திமுகவும் அதிமுகவும் கட்சியையே கலைத்துவிட்டதா?

"இல்லை"..
நடைபயணம் சைக்கிள் ஊர்வலம் என்று பொதுமக்களில் இரண்டுபேரை கன்னத்தில் அடித்தார் ஒரு ரஷ்ய புரட்சி. அதற்காக அவர் பொதுமக்கள் மத்தியில் பேசாமல் வெடக்கப்பட்டு ஒதுங்கிவிட்டாரா?

"இல்லை"..
நிவாரண பொருட்களில் ஸ்டிக்கர் ஒட்டிய உறுப்பினர்கள் இன்றும் அதே பகுதியில் வலம் வராமல் வெடக்கப்பட்டு வீட்டிலேயே மறைந்து வாழ்கிறார்களா?

"இல்லை..கார்ல கட்சி
கொடியோட போறாங்க"
தமிழ் தேசிய ஆர்வலர்களுக்கு பிரபாகரன் அடையாளம். அதே பிரபாகரன் அமைதிப்படையை எதிர்க்க பிரேமதாசாவுடன் கூட்டு சேர்ந்தார். இந்த சந்தர்ப்பவாத கொள்கைக்காக இங்கே தமிழகத்தில் தனித்தமிழ் கோஷங்கள் வெட்கப்பட்டு அமைதியாகிவிட்டதா?

"இல்லை"..
நாம்தமிழர் கட்சியின் தொண்டர்களின் வீடியோ வைரலாக பரவியது. அதற்காக நம் தமிழர்களின் இணைய பிரிவு வெட்கப்பட்டு செயல்படாமல் முடங்கிவிட்டதா?

"இல்லை"..
"இந்த பெரிய கறுப்பன் ஜெகத்ரட்சகன் திருச்சி சிவா சசிகலாபுஷ்பா சீடி போட்டோ பூளு பிலிம்ன்னு அவ்வளவு வந்துச்சே இன்னைக்கி அவங்க எல்லாம் வெட்கபட்டுகிட்டு தான் இருக்காங்கலா.."

"இல்லை"
"இல்ல இதெல்லாம் தெரிஞ்சும் அண்ணன் பெரிய கறுப்பனை ஜெயிக்க வைச்ச மக்கள் தான் வெட்கபட்டுகிட்டு இருக்காங்கலா"

"இல்லை".....
( என் நண்பர் பாய்துவந்து என் வாயை பொத்தி) "தயவுசெய்ஞ்சு வேற ஏதாவது பேசு"

"டேய் போதும்டா.. மூச்சு திணறுது.."

இப்போ சொல்லு.. பாஜகவை ஆதரிக்க எதுக்கு வெட்கப்படணும்?
இருந்தாலும் தமிழ்நாட்டுக்கு இவங்களால என்ன ப்ரயோஜனம் தனிப்பட்டமுறையில் எனக்கு என்ன லாபம்

2014 வருட தேர்தலில் நடப்பது பார்லிமென்ட் எலக்சன்னு கூட தெரியாம நம்ம தமிழ்நாட்டுல 40 சீட்டு அதிமுகவுக்கு தூக்கி கொடுத்தாங்க. ஆனாலும் மத்தியில் பெரும்பான்மையில் ஜெயிச்சது இவங்கதான்.
இலவசம் வாங்கியே பழகிட்டா நமக்கு எல்லாமே இலவசமாதான் இருக்கணும்னு தோணும். அப்படி இல்லைனா மீம்ஸ்க்கு லைக் போட்டுட்டு மோடி ஒழிக பாஜக ஒழிகன்னு விதண்டாவாதம் பேசத்தான் தோணும்.
அன்னிக்கு சினிமாவை பாத்து ஓட்டு போட்டோம். இன்னிக்கு மீம்ஸ் பாத்து முகநூல் அரசியல் பேசி ஓட்டு போடப்போறோம். அவ்வளவுதான் நாம எல்லாம்.
You can follow @S_Sathish77.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.