விஜய் ரசிகர்களுக்கும் சீமான் ரசிகர்களுக்கும் நடக்கும் சண்டையில் உங்கள் ஆதரவு யாருக்கு?

கண்டிப்பாக விஜய் ரசிகர்களுக்குதான்.

1. விஜய் ரசிகர்கள் யாரும் சிறுபான்மை இஸ்லாமியர்களைப் பார்த்து நீங்கள் தமிழர்கள் இல்லை, உங்களை கவனமாக கையாள வேண்டும் என்று மத,இன வெறுப்பை காட்டியதில்லை.
2. விஜய் ரசிகர்கள் யாரும் ஒடுக்கப்பட்ட பட்டியலின அருந்ததியர் சகோதரர்களை நீங்கள் தெலுங்கர்கள், வந்தேறிகள் என்று வெறுப்பை உமிழ்ந்ததில்லை.

3. தூத்துக்குடியிலும் சாத்தான் குளத்திலும் நடந்த படுகொலைகளை வேடிக்கை பார்த்த எடப்பாடியை பச்சைத் தமிழன் என்று எந்த விஜய் ரசிகரும் கொண்டாடவில்லை
4. விவசாயிகளுக்கு எதிரான விவசாய மசோதாக்களை ஆதரிக்கும் எடப்பாடியை எந்த விஜய் ரசிகரும் விவசாயி என்று கொண்டாடவில்லை.

ஆனால் மேலே சொன்ன அத்தனையையும் செய்வது சீமான் ரசிகர்கள். இவற்றில் பலவற்றை சீமானே செய்கிறார்.

மொத்தத்தில் விஜய் ரசிகர்கள் harmless.
சீமான் ரசிகர்கள் தங்களை அறிந்தோ அறியாமலோ எடப்பாடிக்கும் சங்கிகளுக்கும் வேலை பார்க்கிறார்கள்.

இவற்றை தவிர்த்து வேறு ஒரு காரணம். குடும்பத்தில் அத்தனை வாண்டுகளும் விஜய் ரசிகர்கள். ஆக நான் விஜய் ரசிகர்கள் பக்கமே.
You can follow @karthickmr.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.