KPR Mills Ltd, Avinasi, Coimbatore:

கோவை அவினாசி அருகில் உள்ள ஒரு தனியார் ஆலையில் எனது நண்பனின் தங்கையினை வேலைக்கு சேர்த்து விட அவர்களுடன் சென்று இருந்தேன்.
விண்ணப்பம் பூர்த்தி செய்யும் பொழுது என்ன டிகிரி படிக்க போரீங்க என அவர்கள் கேட்ட கேள்வி என்னை வியக்க வைத்தது.
பின்பு அந்த ஆலையினை பற்றி மேலும் தெரிந்து கொள்ள கேட்ட போது எனக்கு வியப்பாக இருந்தது.
KPR மில் குழுமத்திற்கு சொந்தமான அதில் பணிக்கு பின் மாலை நேர பள்ளி, கல்லூரி நடைபெற்று வருகிறது. 12th, degree, nursing, yoga என பல்வேறு பிரிவில் பல பெண்கள் பயின்று வருகின்றனர்.
மேலும் பணியாளர்கள் பணி புரியும் அனைத்து இடங்களிலும் A/C வசதி, 2 ஆம் தேதிக்குள் Rs.6000/- சம்பளம் (ESI, PF பிடித்தம் போக கையில் கிடைக்கும் தொகை) ATM மூலம் வழங்கப்படுகிறது, போனஸ் Rs.6000/-, குடும்பம் முழுவதற்கும் ESI வசதி, தனியார் கல்லூரிகளுக்கு நிகரான இலவச தங்குமிடம், மேனேஜர்கள்,
அதிகாரிகள், பணியாளர்கள் என வேறுபாடு இன்றி அனைவருக்கும் ஒரே மாதிரியான தரமான உணவு, இன்னும் பல வசதிகளுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இத்துணை வசதிகளையும் நேரில் கண்ட பின்பு எனக்கு தெரிந்த படிக்க வசதி இல்லாமல் வீட்டில் இருந்த 3 பெண்களை இதுவரை அனுப்பினேன். அதில் ஒரு பெண் இன்று காலை
எனக்கு phone செய்து கண்ணீருடன் நன்றி கூறினார். அதனால் தான் இந்த பதிவு.
நம்மால் இத்தனை வசதிகளையும் அவர்களுக்கு செய்து கொடுக்க முடியாவிட்டாலும், அதற்கான வாய்ப்பினையாவது கொடுத்து உதவலாமே...

தொடர்புக்கு: 98652 53892..

படிக்க வசதியின்றி தவிக்கும் பெண் பிள்ளைகளுக்கு உதவும் மனம்
கொண்டவர்கள் இதனை அதிகம் பகிரவும்.

முகநூல் பதிவிலிருந்து
You can follow @saisrini129.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.