பெண் சக்தி திட்டம் குறித்த ஒரு விரிவான பார்வை: மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன், மய்ய ஆட்சியில் இல்லத்தரசிகளுக்கு அரசு ஊதியம் என்ற திட்டத்தை அறிவித்துள்ளார். இது சாத்தியமா? இது வலதுசாரி திட்டமா? அல்லது இடதுசாரி திட்டமா? ஆராய்வோம்.. (1/n)
சில திராவிட தரப்பினர் இது முன்னேறி வீட்டிலிருந்து வீர நடை போட்ட பெண்களை மீண்டும் அடுப்பறைபில் அடைக்க ஒரு சூழ்ச்சி என்கிறார்கள். இதற்கு பதிலாக பெரியாரின் கருத்தை மேற்கோள்காட்டிட வேண்டும். பெரியார்:- "பெண்ணே, நீ எனக்காக வேலை செய்யாதே. உனக்காக வேலை செய்". (2/n)
பெண் விடுதலை என்பது பெண்கள் வேலை செய்ய வேண்டும் என்று சொல்வதில்லை. பெண்கள் அவர்களுக்கு விருப்பத்திற்கேற்ப வாழ்வதே. அப்படி என்றால், விருப்பத்துடன் இல்லத்தரசியாக விருப்ப பட்டு இருக்கும் பெண்களுக்கு இது அங்கீகாரம். சரி, பெண்கள் அத்தனை தொழில்களிலும் முன்னேறி வரும் (3/n)
இந்த காலத்தில் இதற்கு தேவை இருக்க வாய்ப்பில்லையே என்று சிலர் சொல்லலாம். எதார்த்தம் அதுவல்ல. சில பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு முடிந்த பின்னரும், அவர்களால் பணி தொடர முடியாத நிலை உள்ளது. இன்று பெரும்பாலும் தனிக்குடித்தனம் நடத்துகிறார்கள். அல்லது, அவர்கள் வீட்டு பெரியோர்கள் (4/n)
குழந்தை வளர்ப்பில் உதவிட இயலாத வயோதிக நிலையில் இருக்கலாம். இதனால், பல பெண்கள் குழந்தை பெற்றவுடன் வேலைக்கு செல்வதற்கு 2-3 வருடங்களுக்கு தவிர்க்கிறார்கள் என்பது நிதர்சனம். இது, குழந்தையா வேலையா என்ற கேள்விக்கு அவர்கள் செய்யும் சுய விருப்பம். அப்படி குழந்தையை வளர்க்க தற்காலிக (5/n)
இல்லத்தரசிகலாக மாறும் அவர்கள் சுயமரியாதையுடனும் தற்சார்படனும் இருக்க இது வழி வகுக்கும். இதுவும் ஒரு வகை இலவசம் போல் தெரிகிறதே என்று சிலர் சொல்லலாம். இல்லை என்பதே என் வாதம். சில இல்லங்களில் பிள்ளைகளை ட்யூசனிற்கு அனுப்புவார்கள். சில பிள்ளைகளுக்கு பள்ளியில் கற்பதுடன், தனியாக (6/n)
ஒரு ட்யூசன் ஆசிரியரிடம் சேர்ந்து கற்றால் சிறப்பாக பயில்வார்கள். அந்த ட்யூசன் ஆசிரியரும் பெரும்பாலான நேரங்களில் ஒரு இல்லத்தரசியே என்றாலும், அதற்கு கட்டப்படும் கட்டணம் கல்விக் கட்டணமே. கல்வி மக்களின் உரிமை என்ற கோணத்தில் பார்த்தால், அதற்கு இந்த ஊதியம் உதவும் என்பதில் ஐயமில்லை (7/n)
இதில் முக்கிய குறிப்பு இந்த திட்டம் எந்த பெண்களையும் வேலைக்கு போக வேண்டாம் என்று சொல்ல வில்லை. அவர்களுக்கு விருப்பம் இல்லையெனில், அந்த வேலையிலிருந்து விலகவும் இது உதவும். (8/n)
இறுதியில், ஒரு கருத்து. திரு கமல்ஹாசன் அவரின் பகுதி நேர அரசியல் என்ற விமர்சனத்திற்கு பதிலளிக்கையில் "யாருமே முழு நேர எதுவும் இல்லை" என்கிறார். அதில் நான் மாறுபடுகிறேன். உலகிலேயே முழு நேரமும் ஒரு நிலையில் இருப்பது நம் தாய் மட்டுமே (9/n)
அப்படி பட்ட இல்லத்தரசிகளை அங்கீகரிக்கும் இந்த திட்டம் உலகில் பெண்களை போற்ற மற்றும் ஒரு புரட்சியாகவே நான் பார்க்கிறேன். வாழ்க பாரதி கண்ட புதுமை பெண்கள். (n/n)
@ikamalhaasan @mnmarunachalam @MaiamITOfficial @SandiyarKaran @Elumalaikutty @iChanShekhar @PriyadarshiniU4 @sripriya
@ikamalhaasan @mnmarunachalam @MaiamITOfficial @SandiyarKaran @Elumalaikutty @iChanShekhar @PriyadarshiniU4 @sripriya